என் மலர்
மயிலாடுதுறை
- கடந்த 4 நாட்களாக அதில் வைக்கப்பட்டிருந்த வெல்டிங் சேதமடைந்து கூடிய விரைவில் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.
- அப்பகுதியை வாகனங்களும் பொதும க்களும் கடக்கும்போது உயிர்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி அடுத்தசட்டநா தபுரம் கைகாட்டி ரவு ண்டானா அருகில் தேசிய நெடுஞ்சாலையில் திசை, வழி காட்டும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 அடி உயரம் கொண்ட இரும்பிலானது. இந்த தகவல் தெரிவிக்கும் பல கையானது கடந்த 4 நாட்களாக அதில் வைக்கப்பட்டிருந்த வெல்டிங் சேதமடைந்து கூடிய விரைவில் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், சீர்காழிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வரும் பிரதான சாலையாகும்.
இது குறித்து பொதுமக்கள் பலமுறை சீர்காழி நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி களிடம் தெரிவித்தும், அது எங்களுக்கு கட்டுப்பாட்டில் இல்லாத சாலை எனவும், நகாய் எனும் நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள சாலை எனவே அந்த துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவியுங்கள். அவர்கள்தான் இதனை சரிசெய்ய இயலும் எனவும் கூறி இதுவரை அதனை சரி செய்யவும் இல்லை அப்புறப்படுத்தவும் இல்லை.
இதனால் அப்பகுதியை வாகனங்களும் பொதும க்களும் கடக்கும்போது உயிர்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன்னர் இதனை சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிமுக தொண்டர்களின் ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்.
- 18 சித்தர்கள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அருகே காரைமே ட்டில் அமைந்துள்ளது ஒளிலாயம் சித்தர் பீடம்.இங்கு 18 சித்தர்கள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இன்று பவுர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா சிறப்பு பவுர்ணமி யாகம் நடைபெற்றது.
முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி.பழனிசாமி நிரந்தர பொது செயலா ளராக பொறுப்பேற்க வேண்டும், அனைத்து வழக்கு களும் நீங்கி இரட்டை இலை மற்றும் கட்சி அலுவலகம் அனைத்தும் பெற்று அதிமுக தொண்டர்களின் ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என வேண்டி இந்த சிறப்பு யாகம் நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து 108 வேதிகை, மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு பெளர்ணமி யாகம் நடைபெற்று,பூர்ணா ஹூதி, மகா தீபாரதனை கட்டப்பட்டது. யாகத்திற்கான ஏற்பா டுகளை மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி.செல்வமுத்துக்குமரன் செய்திருந்தார்.
- விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி இன்று ஏலம் விடப்பட்டு, ஏல தொகை அறிவிப்பு ஒட்டப்பட்டது.
- குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ 5 ஆயிரம் வரை மட்டுமே வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எருக்கூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளதுஇங்கு வாரந்தோறும் காட்டும ன்னார்கோவில், சிதம்பரம், சீர்காழி, கொள்ளி டம், வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.
அதன்படி விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி இன்று ஏலம் விடப்பட்டு, ஏலத் தொகை அறிவிப்பு ஒட்டப்பட்டது.
ஏலத்தில் அரசு 1குவிண்டாலிற்கு நிர்ணயத்த விலையை விட மிக குறைவாக குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ 5 ஆயிரம் வரை மட்டுமே வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் இரவு, பகலாக கண்விழித்து ஏல விற்பனைக்காக காத்திருந்த விவசாயிகள் ஆத்திரம் அடைந்து பருத்தி ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகளை முற்றுகை யிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு நிர்ணயித்த விலையை நிர்ணயிக்கக் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று கூடி சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார்மற்றும் கொள்ளிடம் போலீசார் விரைந்து வந்து விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தை யில் வரும் வாரங்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும், பகல் நேரத்தில் ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை யடுத்து பருத்தி விவசாயிகள் போராட்டத்தை கைவி ட்டனர்.
- பழங்கள் செயற்கை முறையில் கார்பைடுகல் வைத்தும், சாயம் ஸ்பிரே செய்தும் பழுக்க வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
- பொதுமக்கள் வித்தியாசம் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துவதால் உடல்பாதிப்பும், பண விரயமும் ஏற்படுகிறது.
சீர்காழி:
சீர்காழியில் பெரும்பா லான கடைகளில்செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வை க்கபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.இதனை உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்திட வலியுறு த்தப்பட்டுள்ளது.
சீர்காழியில்மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் செயற்கை முறை யில் கார்பைடுகல் வைத்தும், சாயம் ஸ்பிரே செய்தும் பழுக்கவைக்கப்படுவதாக நீண்ட நாட்களாகபொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த வகை பழங்களைவாங்கி சாப்பிடும்போது உடல்உ பாதை, வயிற்றுபோக்கு, வயிற்றுவலி, செரிமான பிரச்சனை போன்றபிரச்ச னைகள் வரும்என மருத்துவ ர்கள்தெரிவிக்கி ன்றனர்.
குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது செயற்கைமுறையில் பழுக்கவைத்த பழங்களால் பெரும் பாதிப்பு வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. இயற்கையான முறையில் பழுத்தபழங்கள், செயற்கை முறையில் பழுக்கவைத்த பழங்கள் எவை, எவை என பொதுமக்கள் வித்தியாசம் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துவதால் உடல்பாதிப்பும், பணவி ரயமும்ஏற்படுகிறது. செயற்கைமுறையில் பழங்கள் பழுக்கவைக்க ப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை பொருட்படுத்துவதில்லை.இதனால் பொதுமக்கள்தான் பாதிப்புக்குள்ளாகின்றனர்.ஆகையால் சீர்காழி பகுதியில் செயற்கை முறையில் பழங்கள் பழுக்கவைத்து விற்பனை செய்யும் கடை உரிமை யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.
- 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.
சீர்காழி:
சீர்காழிசியாமளா பெண்கள் மேல்நிலைப்ப ள்ளியில் சீர்காழி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெ ற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமை வகித்தார். நகராட்சிசுகா தார அலுவலர் செந்தில்ராம்குமார் ஓவிய ப்போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். வெற்றி பெற்ற மாணவி களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியைகள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சனைகள், தற்கொலை தடுப்பு ஆலோசனை நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- எதற்கும் கவலை படாமல் துணிச்சலோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி விவேகா னந்தா மெட்ரிக்மேல்நி லைப்பள்ளியில் மயிலாடு துறை மாவட்ட காவல்துறை, சீர்காழி உட்கோட்ட காவல் நிலையத்துடன் இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சனைகள், தற்கொலை தடுப்புஆலோ சனை நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சீர்காழி டி.எஸ்.பி. லாமேக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார், மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் உளவியல் மற்றும் பாலியல் தொட ர்பான மனநல ஆலோசகர் டாக்டர் அசோக் பங்கேற்று மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி பேசுகையில், பருவவயதில் எதி ர்பால் ஈர்ப்பு என்பது இயல்பானது.அதற்காக அதில் மூழ்கிவிடாமல் மனதை ஒருநிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வய தில் தான் மாணவ-மாணவிகள், பள்ளி மற்றும் பொதுவெளியில் தங்களுக்கோ, தங்களை சார்ந்தவர்களுக்கோ நடந்த, பார்த்த எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் எவ்வித தயக்கமுமின்றி அன்றாடம் தங்களது பெற்றோர்களுடன் மனதை திறந்து கலந்துரையாடவேண்டும். தற்காலிக பிரச்சனைக்கு மனதை குழப்பிக்கொண்டு தற்கொலை என்னத்தை எட்டும் நிலைக்குவரக்கூ டாது. எதற்கும் கவலை படாமல் துணிச்சலோடு பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டும் என்று பேசினார். நிறைவில் தலைமை காவலர் கவிதா நன்றி கூறினார்.
- மணல் குவாரிகளால் அப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
- சண்முகம் தலைமையில் மணல் லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள மருதம்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், மேலபெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளால் அப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே அந்த குவாரிகளை மூட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆக்கூர் அடுத்துள்ளஅப்பரா சப்புத்தூர் தேசிய நெடுஞ்சா லையில் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் மணல் லாரிகளைசிறை ப்பிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்ப ட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் தெட்சிணாமூர்த்தி, பொருளாளர் பன்னீ ர்செல்வம் மற்றும் விவசா யிகள் கலந்துக் கொண்டனர்.
- சொகுசு கார் மற்றும் அதனை பின்தொடர்ந்து வந்த நான்கு இரு சக்கர வாகனங்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனையில் ஈடுபட்டனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் 2000 சாராய பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிக்கு காரைக்காலில் இருந்து அதிக அளவில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சீர்காழி அருகே வள்ளுவகுடி பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், அசோக் குமார், சிதம்பரம் ராஜாஜி, மற்றும் தனிப்பிரிவு காவலர் மூர்த்தி, மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் சார்லஸ் உள்ளிட்ட போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியாக வந்த சொகுசு கார் மற்றும் அதனை பின்தொடர்ந்து வந்த நான்கு இரு சக்கர வாகனங்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது காரில் காரைக்காலில் இருந்து 2000 சாராயம் பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பாண்டூர் வடக்கு வெளி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகன் ராஜேஷ் (வயது 36) மற்றும் கூத்தியம் பேட்டை பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் பிரபு (33) ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.மேலும் தப்பியோடி 4 பேர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் 2000 சாராய பாட்டில்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாட்டில்களை வளாகத்தில் ஊற்றி அழித்தனர்.
- முகாமில் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம் தொடர்பாக 316 மனுக்கள் பெறப்பட்டன.
- அதில் 235 மனுக்களுக்கு உடனே அந்த முகாமிலே தீர்வு பெற்று பொதுமக்கள் பயனடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆணையிடப்பட்டது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட செம்பனார்கோயில் அருகே ஆறுபாதி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கலியபெருமாள் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஊராட்சிக்கு உட்பட்ட விளநகர், ஆறுபாதி, பால வெளி, மேட்டிருப்பு உள்ளி ட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், பிறந்தநாள் தேதி மாற்றம், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் மற்றும் அட்டை வகை மாற்றம் ஆகியவை தொடர்பாக 316 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 235 மனுக்களுக்கு உடனே அந்த முகாமிலே தீர்வு பெற்று பொதுமக்கள் பயனடைந்தனர். மீதமுள்ள 81 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. முகாமில் 2 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும்,
அட்டை வகை மாற்றம் தொடர்பான மனுக்களை வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை செய்திட அனுப்பி வைக்கப்பட்டும், மற்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றம் செய்யவும் வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஒப்புதல் ஆணை வழங்கினார்.
இதில் தனி வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ், வட்ட பொறியாளர் ஐயப்பன், வட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்சகாய ராஜ், அங்காடி விற்பனை யாளர்கள் முத்து, ஜெகதீ சன் மற்றும் கிராம முக்கிய ஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
- சட்டவிதிகளை மீறி 20 அடி ஆழத்திற்கும் மேல் மணல் மற்றும் சவுடு மண் தோண்டி எடுப்பதால் அப்பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- குவாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், மருதம்பள்ளம் அருகே சித்தம்பாடி கிராமத்தில் விதிகளை மீறி அதிக அளவு ஆழத்திற்கு மணல் கொள்ளையடிக்கும் மணல்குவாரியை விவசா யிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்ப ட்டனர்.
செம்பனார்கோவில் ஒன்றியம், மருதம்பளம் கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம், கிடங்கல், நத்தம் ஆகிய பகுதிகளில் 5 க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகின்றது.சட்டவிதிகளை மீறி 20 அடி ஆழத்திற்கும் மேல் மணல் மற்றும் சவுடு மண் தோண்டி எடுப்பதால் அப்பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குவாரிகளின் நடவடி க்கைகளை கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறை மற்றும் கணிமவளத்துறை அதிகாரிகளோ லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.இதனிடையே மருதம்பள்ளம் சித்தம்பாடி கிராமத்தில் சாரங்கம் ஆசாரி என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குவாரியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் எடுத்து செல்லப்படுகிறது.இதுவரை 20 அடி ஆழத்தையும் தாண்டி மண் எடுத்ததால் நீர் சுரந்து ஏரிப்போன்று அப்பகுதி காணப்படுகிறது. அந்த குவாரியை மூடக்கோரி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யூ.சண்முகம், தலைவர் தெட்சிணாமூர்த்தி, பொருளாளர் பன்னீர்செ ல்வம், சிபிஎம் ஓன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் வீ.எம்.சரவணன் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்ப ட்டனர். சித்தம்பாடி குவாரியால் சுற்றியுள்ள விளைநிலங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், குவாரியை யொட்டியுள்ள பயிரி டப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்கள் முறையாக வளராமல் உள்ளதாகவும்.
தொடர்ந்து இப்பகுதியில் மணல் குவாரிகள் செயல்ப ட்டால் வழக்கமாக பயிரிட ப்பட்டு வந்த நிலக்கடலை, பருத்தி, நெல் ஆகியவற்றை கைவிட்டு விவசாயிகள் வேறு வேலைக்கு செல்ல வேண்டிய அபாய நிலை ஏற்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் யூ.சண்முகம் கூறியதோடு பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலம் என அறிவித்து விட்டு திரும்பும் திசையெ ல்லாம் குவாரிகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. நான்கு வழிச்சாலை பணிக்காக இப்பகுதியில் ஏராளமான குவாரிகள் செயல்பட அனுமதியளித்துள்ள கணிம வளத்துறை இதைப்ப யன்படுத்தி சட்டவி ரோதமாக செயல்படும் குவாரிகளுக்கும் அனுமதிய ளித்திருக்கிறது.
இப்பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலை விலேயே கடற்கரை உள்ளதால் மணல் குவாரிகள் அதிகளவு ஆழத்தை தோண்டுவதால் விவசாய பகுதிகளில் உப்புநீர் புகுந்து வருவதால் சுமார் ஆயிரம் ஏக்கம் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் விவசாயம் கடுமையாக பாதிக்கிறது. என்றார். உடனடியாக சித்தம்பாடி குவாரியை மூடவில்லையெனில் போரா ட்டங்களை நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.
- புதிய எருசலேம் ஆலய (சீகன்பால்கு கட்டியது) ஆயரும் மறைமாவட்ட தலைவருமான சாம்சன் மோசஸ் தலைமை வகித்தார்.
- தரங்கம்பாடியில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் கூடத்தை அமைத்து தமிழ் நூல்களை காகிதத்தில் முதன்முதலில் அச்சேற்றினார்.
தரங்கம்பாடி:
தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 316 ஆவது ஆண்டு தினம் சனியன்று கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் டென்மார்க் அரசரால் அனுப்பப்பட்ட ஜெர்மனி நாட்டு கிறிஸ்தவ மத போதகரான (புராட்டஸ்டாண்டு) சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 316 ஆவது ஆண்டு தினத்தையொட்டி தரங்கம்பாடியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு புதிய எருசலேம் ஆலய (சீகன்பால்கு கட்டியது) ஆயரும் மறைமாவட்ட தலைவருமான சாம்சன் மோசஸ் தலைமை வகித்தார்.
மாவட்ட கண்காணிப்பு ஆயர் நவராஜ் ஆபிரகாம், பொறையார் பெத்லேகம் ஆலய ஆயர் ஜான்சன் மான்சிங், பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன், சீகன்பால்கு ஆன்மீக மன்ற இயக்குநர் ஜஸ்டின் விஜயகுமார், சபை சங்க பொறுப்பாளர்கள், ஆயர்கள், பள்ளி ஆசிரி யர்கள், அலுவலர்கள், ஊழி யர்கள் கலந்துக்கொண்டு மாலை அணிவித்தனர். பின்னர் புதிய எருசலேம் ஆலயத்தினுள் உள்ள சீகன்பால்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி, பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.
முன்னதாக சீகன்பால்கு கப்பலிலிருந்து இறங்கி நின்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவிடத்தில் சிறப்பு வழிபாடும், மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைப்பெற்று பின்னர் பேரணியாக வந்தனர்.222 நாட்கள் கப்பலில் பயணம் செய்து 1706 ஜூலை 09 ல் தரங்கம்பாடி வந்த சீகன்பால்கு 1715 ல் இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழில் பைபிளை, காகிதத்தில் அச்சடித்து வெளியிட்டார், இந்தியாவிலேயே முதன் முதலாக தரங்கம்பாடியில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் கூடத்தை அமைத்தார். தமிழ் நூல்களை காகிதத்தில் முதன்முதலில் அச்சேற்றினார்
தமிழ் நாள்காட்டியை (காலண்டர்) முதன்முதலில் வெளியிட்டார், ஜெர்மன் மொழியிலான ஞானப்பாடல்களை தமிழில் மொழிப்பெயர்த்தார், தமிழ்நூல்களைஜெர்மன் மொழியில் மொழிப்பெ யர்த்தார், முதன்முதலில் தமிழில் அருளுரையாற்றினார், ஜெர்மனியில் தமிழ் மொழியை வளர்க்க வழிவகுத்தார் என இன்னும் பல்வேறு சாதனைகளை தமிழ்மொழிக்காக செய்த தமிழறிஞர் சீகன்பால்கு வின் தொண்டினை நினைவுகூறும் விதமாக தரங்கம்பாடியில் அவருக்கு மணிமண்டபத்தை கட்டுவதோடு, அவர் வந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் சமீபத்தில் லண்டனில் கண்டுப்பிடிக்கப்பட்ட சீகன்பால்குவால் அச்சடிக்கப்பட்ட பைபிளை தரங்கம்பாடி க்கு கொண்டு வர வேண்டுமென மத்திய, மாநில அரசுக்கு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீகன்பால்கு உருவாக்கிய பள்ளியில் சீகன்பால்குவால் உருவாக்கப்பட்ட பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சீகன்பால்கு சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் சைமன் தலைமை வகித்தார். ஆயர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
- சாலை முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடுவதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
- பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறுகின்றனர்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுகாவில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நாள் ஒன்றிற்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிவருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிலுள்ள அனந்தமங்கலம், காத்தான்சாவடி, காளியப்பநல்லூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிவருகிறது.
அனந்தமங்கலம், காத்தான்சாவடி, பகுதிகளில் சாலையின் நடுவே செல்லும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகிறது. சாலை முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடுவதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக குழாயில் ஏற்பட்ட உடைப்புகள் சீரமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
இதனால் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறுகின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடப்பு ஏற்பட்டுள்ள குழாய்களை சீரமைத்து கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






