search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து வீணாகி வரும் தண்ணீர் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர்.

    கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து வீணாகி வரும் தண்ணீர் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    • சாலை முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடுவதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறுகின்றனர்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுகாவில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நாள் ஒன்றிற்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிவருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிலுள்ள அனந்தமங்கலம், காத்தான்சாவடி, காளியப்பநல்லூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிவருகிறது.

    அனந்தமங்கலம், காத்தான்சாவடி, பகுதிகளில் சாலையின் நடுவே செல்லும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகிறது. சாலை முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடுவதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக குழாயில் ஏற்பட்ட உடைப்புகள் சீரமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

    இதனால் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறுகின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடப்பு ஏற்பட்டுள்ள குழாய்களை சீரமைத்து கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×