என் மலர்
நீங்கள் தேடியது "percentage"
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தர்ஷினி முதலிடமும், சவுமியா இரண்டாமிடமும், ஐஸ்வர்யா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
- 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாமிதா பானு முதலிடமும், சிவஸ்ரீயாழினி மற்றும் அமிர்தினி இருவரும் இரண்டாமிடமும், தாஜுல்நசிபா மற்றும் ஜாபிரா இருவரும் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
சீர்காழி:
தருமபுரம் ஆதீன திருமடத்தால் நடத்தப்படும் வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2021-2022ம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தர்ஷினி (474/500) முதலிடமும், சவுமியா (472/500) இரண்டாம் இடமும், ஐஸ்வர்யா (468/500) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் உமாமகேஸ்வரி (583/600) முதலிடமும், கங்கா (553/600) இரண்டாம் இடமும், ரெஜீனா (544/600) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பாமிதா பானு (575/600) முதலிடமும், சிவஸ்ரீயாழினி மற்றும் அமிர்தினி இருவரும் (460/600) இரண்டாம் இடமும், தாஜுல்நசிபா மற்றும் ஜாபிரா இருவரும் (459/600) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளியி ன் ஆட்சி மன்ற குழுத்த லைவர்ராஜேஷ்,செயலர் பாஸ்கரன், பொருளாளர் பாஸ்கரன், ஆதீன பொது மேலாளர் கோதண்ட ராமன், பள்ளி முதல்வர் ஜெகதீ ஷ்குமார், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டினர். சிறப்பிடம் பெற்ற மாணவ}மாணவியரை தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பாராட்டி அருளாசி வழங்கினார்.
- சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.
- அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 83.16 சதவீதம்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 239 மாணவிகளும், 7 ஆயிரத்து 851 மாணவர்களும் என 19 ஆயிரத்து 90 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 83.16 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
கடந்த 2020-ம் ஆண்டு அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 93.10 சதவீதம் ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 83.16 ஆக குறைந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள 158 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி 7 பள்ளிகள் பெற்றுள்ளது. அவைகள், ஏகலைவா உண்டு உறைவிட மகளிர் மேல்நிலைப்பள்ளி அபிநவம் மற்றும் கொங்கணாபுரம், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, எடப்பாடி, காடையாம்பட்டி மாதிரிப் பள்ளிகள் ஆகிய 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை நிகழ்த்தி உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.