search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழுமலையாற்றில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்க வலியுறுத்தல்
    X

    கழுமலையாற்றில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்க வலியுறுத்தல்

    • சீர்காழி அடுத்த தேனூர் கிராமத்தில் புது மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சீர்காழி நகர் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்கிறது.
    • இதனால் பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி கழுமலையாற்று தண்ணீர் மூலம் திருத்தோணி புரம், சிவனார்விளாகம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கொண்டல், வள்ளுவக்குடி, அகணி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் பாசனவசதி நடைபெற்று வருகிறது. சீர்காழி அடுத்த தேனூர் கிராமத்தில் புது மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சீர்காழி நகர் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்கிறது. சீர்காழி நகர் பகுதி மற்றும் அகணி, நந்தியநல்லூர், கொள்ளிட முக்கூட்டு ஆகிய பகுதியில் கழுமலையாற்றில் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து கழிவுநீர் விடப்படுகிறது.

    இதனால் பாசனத்திற்கு தண்ணீர் பயன்ப டுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஊராட்சி மற்றும் நகர் பகுதிகளில் அனைத்து குப்பைகளையும் கழுமலையாற்றில் கொட்டப்படுவதால் பாசனஆறு பாழடைந்து வீணாகிறது. அகணி ஊராட்சி நந்தியநல்லூர் பகுதியில் கழுமலையாற்றில் தினந்தோறும் குப்பைகள் கொட்டப்பட்டும், கழிவுநீர் விடப்பட்டும் மிகவும் மோசமாக சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுவருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. படித்துறையும் உடைந்து பயன்படுத்திடமுடியாத சூழலில் உள்ளது.ஆகையால் பொதுப்பணித்துறையினர் களஆய்வு செய்து கழுமலையாறில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்கவும், பிளாஸ்டிக்உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்ப டுவதை தடுத்திடவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×