search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
    X

    மாவட்ட கலெக்டர் லலிதா

    கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

    • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சுடன், கணினி பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    • கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருப்பதுடன் 40 வயது நிறைவடையாதவராக இருத்தல் வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல குழு மற்றும் இளைஞர் நீதிக்குழும் ஆகியவற்றிற்கு உதவியாளர் (ம) கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு (2 பணியிடங்கள்) மாதம் ரூ.9000- தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதோடு கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும்.

    மேலும் கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நியமணம் செய்யப்படும்போது 40 வயது நிறைவடையாதவராக இருத்தல் வேண்டும்.

    இதற்கான விண்ணப்ப படிவத்தை மயிலாடுதுறை மாவட்ட இணையதளத்தில் (http://mayiladuthurai.nic.in) பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் . அல்லது மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

    தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 36/2, திருமஞ்சனவீதி, திருஇந்தளுர், மயிலாடுதுறை - 609001 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20.07.2022 ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக–த்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×