பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவி சாதனை

பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்திருக்கிறார்.வணிகவியல், கணக்குபதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவி சாதனை
Published on

தரங்கம்பாடி:

செம்பனார்கோயில் ஊராட்சி, குமரன்கோயில் வடக்கு வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி மங்கையர்கன்னி. இவர்களது இளைய மகள் கிருத்திகா. இவர் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ளார்.

அரசு பொதுத் தேர்வில் 591 மதிப்பெண் பெற்று மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்திருக்கிறார். வணிகவியல், கணக்குபதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். சாதனைப்படைத்த மாணவி கிருத்திகாவை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com