search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Direct seeding of paddy"

    • கடந்த திங்கட்கிழமை விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்த போது வயலில் இறங்கி சேதப்படுத்தி போராட்டம் நடத்தினர்.
    • அரசு சுதந்திரமாக நேரடி நெல் விதைப்பு பாதுகாப்பு வழங்ககோரியும், ஏராளமான விவசாயிகள் மற்றும் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வது தொடர்பாக விவசாயக் கூலி தொழிலாளர்கள் வேலை இழக்ககூடும் என்ற காரணத்தால் கடந்த திங்கட்கிழமை அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே 144 தடை உத்தரவு அப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் விவசாயிகள் காவல்துறை பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.

    இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்த போது வயலில் இறங்கி சேதப்படுத்தி போராட்டம்' நடத்திய விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், நேரடி நெல் விதைப்பு செய்ய அரசு தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தியும்

    தமிழ்நாடு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சேதுராமன் தலைமையில் விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அரசு சுதந்திரமாக நேரடி நெல் விதைப்பு பாதுகாப்பு வழங்ககோரியும் ஏராளமான விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் பேரிகார்டுகளை கொண்டு தடுத்து நிறுத்தினர்.

    ×