search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது  அக்னிபத் திட்டத்தை விட மோசமானது
    X

    சீர்காழியில் பேட்டியளித்த அகில இந்திய செயலாளர் அண்ணாமலை.

    தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது அக்னிபத் திட்டத்தை விட மோசமானது

    • ஐந்து மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது போல் வாக்குறுதி கொடுத்த நீங்களும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
    • தகுதித் தேர்வை முடித்தவர்களை மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக பணியில் சேர்க்கலாம்.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கல்யாணரங்கன் (எ) பாலாஜி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் சேகரன், வட்டார செயலாளர்கள் இளம்வழுதி, கண்ணன், பாலகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் முத்துராமன் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்க சேகர் வரவேற்றார். அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓர் ஆசிரியர் பள்ளிகள் உள்ளது. உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதே நேரம் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி எதிர்க்கிறது. 8 மாதங்களுக்கு பிறகு அந்த ஆசிரியர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே நிரந்தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    தகுதித் தேர்வை முடித்தவர்களை மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக பணியில் சேர்க்கலாம். அவர்கள் நிரந்தரமாக பணியாற்றுவார்கள். தேவையில்லாத தற்காலிக ஆசிரியர் பணி வேண்டாம். இத்திட்டம் அக்னி பாத் திட்டத்தை விட இது மோசமானது.

    ஐந்து மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது போல் வாக்குறுதி கொடுத்த நீங்களும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    இளநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதில் மாநில அமைப்புச் செயலாளர் முரளி, மாநில தலைவர் நம்பிராஜ், பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், அகில இந்திய பொது குழு உறுப்பினர் புண்ணியமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார், நல்லாசிரியர் ராஜசேகர், இடைநிலை ஆசிரியர் ரஞ்சித் குமார் கலந்து கொண்டனர் மாவட்ட பொருளாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    Next Story
    ×