என் மலர்
மதுரை
- இளம்பெண் தற்கொலை செய்தது ஏன்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததால் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த கே.போத்தப்பட்டியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த குழந்தை களுக்கு இன்று (26-ந்தேதி) காதணி விழா நடத்த இருந்த னர்.
இந்த நிலையில் நேற்று அமர்நாத் மது குடித்து விட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சென்று விட்டதாக கூறப் படுகிறது. காதணி விழா நடைபெற இருந்த நிலையில் கணவர் பொறுப்பில்லாமல் சென்று விட்டதால் மீனா மனமுடைந்தார். அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் உசிலம்பட்டி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக மீனா சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் ஆம்புலன்சில் உடலை ஏற்றவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததால் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
- உசிலம்பட்டியில் ஜாக்டோ- ஜியோ மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
- அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கநாதன், கார்த்திகேயன், மனோகரன், அய்யங்காளை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தீனன், செல்வி, தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது.
- 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும் திருவிழா நடைபெற்று வந்த போதிலும், இந்த கோவிலுக்கு உகந்த திருவிழாவாக பங்குனி பெருவிழா போற்றப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இந்த விழா அடுத்த (ஏப்ரல்) மாதம் 10-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது.
திருவிழா முதல் நாளான இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உற்சவர்கள் முருகப்பெருமான், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது.
நாளை (27- ந்தேதி) விநாயகர் திருநாளாக போற்றப்படுகிறது. அன்று இரவு 7 மணியளவில் விநாயகர் சப்பரம் வலம் வருதல் நடக்கிறது.
திருவிழாவையொட்டி தினமும் காலை 10 மணியளவில் தங்கப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் வலம் வருதல் நடக்கிறது. இதேபோல தினமும் இரவு 7 மணியளவில் விதவிதமான வாகனங்களில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி நகர உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அடுத்த (ஏப்ரல்) மாதம் 1-ந்தேதி கைப்பாரமும், 5-ந்தேதி பங்குனி உத்திரமும், 6-ந்தேதி சூரசம்கார லீலையும், 7-ந்தேதி பட்டாபிஷேகமும், 8-ந்தேதி திருக்கல்யாணமும், 9-ந்தேதி கிரிவலப் பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் துணைகமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- சர்க்கரை கொலை குறித்து திருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
- கணவரை மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம்:
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தை சேர்ந்தவர் சர்க்கரை(வயது 51). இவர் திருநகர் அ.ம.மு.க. பகுதி செயலாளராக இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி அன்னலட்சுமி (48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சர்க்கரைக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் அவர்களுக்கு இடைேய மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்பு சர்க்கரை வீட்டிற்கு வெளியே இருந்த கயிற்று கட்டிலில் படுத்து தூங்கி விட்டார். அவரது 2 மகன்கள் மற்றும் மனைவி அன்னலட்சுமி வீட்டுக்குள் படுத்திருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் எழுந்த அன்னலட்சுமி, வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவரின் தலையில் பெரிய கல்லை எடுத்து வந்து போட்டுள்ளார். மேலும் ஏற்கனவே தயாராக வைத்திருந்த சுடு தண்ணீரை கணவரின் உடல் முழுவதும் ஊற்றியுள்ளார்.
இதில் வலி தாங்க முடியாமல் சர்க்கரை அலறியுள்ளார். அதன்பிறகும் ஆத்திரம் தீராத அன்னலட்சுமி, கணவர் சர்க்கரையை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். மனைவியின் அடுத்தடுத்த கொடூர தாக்குதலால் சர்க்கரை படுகாயம் அடைந்தார். அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.
தந்தை சர்க்கரையின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டுக்குள் படுத்து தூங்கிய மகன்கள் எழுந்து வந்தனர். மேலும் அக்கம்பக்கத்தினரும் வந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே சர்க்கரை ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், சர்க்கரையை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே வீட்டில் இருந்த அன்னலட்சுமி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். சர்க்கரை கொலை குறித்து திருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சர்க்கரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சர்க்கரையின் மகன்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சர்க்கரையை தலையில் கல்லை போட்டும், உடலில் வெந்நீரை ஊற்றியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொடூரமாக கொன்ற அவரது மனைவி அன்னலட்சுமி மீது வழக்கு பதிந்தனர்.
சர்க்கரையை அவரது மனைவி அன்னலட்சுமி எதற்காக கொன்றார்? அதிலும் கொடூரமாக கொலை செய்ய என்ன காரணம்? என்பது தெரியவில்லை. அவர் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும்.
ஆகவே தலைமறைவாக உள்ள அன்னலட்சுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். கணவரை மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்கள் இடையே உள்ள பிரச்சினைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.
- படகுகள் விவகாரத்தில் கடந்த மாதம் 3 விசைப்படகுகளை விடுவித்திருக்கிறோம்.
மதுரை:
மத்திய மந்திரி எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்ககளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற திட்டத்தின் கீழ் ஒரு மாத காலமாக கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காசிக்கும், ராமேசுவரத்துக்கு உள்ள தொடர்பு, காசிக்கும் சிவகாசிக்கும் உள்ள தொடர்பு, காசிக்கும் தென்காசிக்கும் உள்ள தொடர்பு தெரிய வந்தது. தமிழகத்தில் உள்ள பல பகுதிகள் காசியுடன் தொடர்புடையவை.
தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர்களின் உடைகளான பட்டு ஆடைகள், தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றை எடுத்து கூறுகின்ற வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது நம்முடைய சவுராஷ்டிரா தமிழ் சங்கம் சார்பில் வருகிற ஏப்ரல் 16-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு குஜராத்தில் நிகழ்ச்சிகள் நடக்கிறது. சவுராஷ்டிரா மக்கள் தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் பல பகுதிகளில் வசிக்கின்றனர்.
இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்கள் இடையே உள்ள பிரச்சினைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுகிறார்கள் அப்போது தலையிட்டு நமது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கிறார்.
படகுகள் விவகாரத்தில் கடந்த மாதம் 3 விசைப்படகுகளை விடுவித்திருக்கிறோம். மேலும் உள்ள விசைப்படகுகளை மீட்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழக படகுகளை விடுவிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. மீனவர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் திட்டம் இருக்கிறது. சேதமடைந்த படகுகளுக்கும் இன்சூரன்ஸ் இருக்கிறது. மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ராகுல் காந்தி பிரச்சினையை பொறுத்தவரை காழ்ப்புணர்ச்சி இல்லை. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பா.ஜனதா-அ.தி.மு.க.வில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் பெண் போலீசார் 34 ஆயிரத்து 329 பேர் உள்ளனர்.
- ரவுடிகளே, பெண் போலீசாரை பார்த்து பயந்து ஓடி செல்கின்ற நிலை உள்ளது.
மதுரை :
மதுரை விமான நிலையம் அருகே வலையபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில், தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முகாமில், தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு, இளைஞர்களை உற்சாகப்படுத்தி பேசினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் போலீசார் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரே கவலை, அவர்களது குழந்தைகளுக்கு தகுந்த வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான். அதில் பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதி பெரிய ஆளாக வருகின்றனர். சிலர் வேலைக்காக தனியார் நிறுவனத்தை நம்பியுள்ளனர். இதற்காக தனியார் வேலை வாய்ப்பு முகாம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதில், சுமார் ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது. அதில் 800 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு வேலை வாய்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடக்கிறது.
தமிழகத்தில் பெண் போலீசார் 34 ஆயிரத்து 329 பேர் உள்ளனர். அவர்கள், பெரிய, பெரிய ரவுடிகளை எல்லாம் பிடித்து வருகின்றனர். தற்போது ரவுடிகளே, பெண் போலீசாரை பார்த்து பயந்து ஓடி செல்கின்ற நிலை உள்ளது. தவறான எண்ணம் கொண்ட குற்றவாளிகள், பெண் போலீசாரை தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி பெண் போலீசாருக்கு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலை செய்யும் இடத்தில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் பற்றி புகார்கள் வருகிறது. காவல்துறையினரும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெண் போலீஸ் நிலையங்கள் இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எங்கேயும் இல்லை. பெண் போலீஸ் நிலையங்களில், சென்ற ஆண்டு 75 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு, மகளிர் போலீஸ் நிலையங்கள் குறைகளை தீர்க்கக்கூடிய இடமாக இருப்பதால், பெண்கள் தற்போது தைரியமாக புகார் அளிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- நீதிபதிகளுக்கான சவால்கள் குறித்தும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
- இந்தியாவில் நீதிபதிகள் ஒவ்வொரு நாளும் 50-60 வழக்குகளைக் கையாள்கின்றனர்.
மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.
விழாவில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:-
இந்தியாவில் மக்கள் தொகை, உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட பல்வேறு சவால்கள் நம் முன்பாக உள்ளன. நீதிபதிகளுக்கான சவால்கள் குறித்தும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பிற நாடுகளில் நீதிபதிகள் மிகவும் சவுகரியமாக வாழ்கின்றனர். நாளொன்றுக்கு 5,6 வழக்குகளை விசாரிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் நீதிபதிகள் ஒவ்வொரு நாளும் 50-60 வழக்குகளைக் கையாள்கின்றனர்.
அதனால் ஏற்படும் மன அழுத்தம் அதிகம். சமூக வலைதளங்களில் ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. வழக்குகள் முடியும் அதே நேரத்தில் இரு மடங்கு வழக்குகள் புதிதாக தாக்கலாகின்றன. அதனால் தான் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உரிய நீதி வழங்கப்படும் போது, நீதிமன்றங்கள் மீதான சாமானியரின் நம்பிக்கை உயர்கிறது.
நீதிமன்றத்தில் மொழி, மிகப்பெரும் சவாலாக உள்ளது. தமிழ் பழம்பெரும் மொழி. உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடு மொழியாக்க கோரிக்கைகள் முன்வைக்கப் படுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால், வருங்காலத்தில் உச்சநீதி மன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும். இந்திய மொழிகள் நீதி மன்றங்களில் பயன்பாட்டில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடித்தட்டு மக்களும் எளிதாக அணுகும் வகையில் நீதிமன்ற கட்டமைப்பு விரைவில் அமையும்.
பொதுமக்கள் காவலர்களை பார்த்தால் அச்சப்படும் விதமாக இருக்கக் கூடாது. பாதுகாப்பாக உணர வேண்டும். அதே போல் பொதுமக்கள் நீதி மன்றத்தை எளிதில் அணுகும்படி இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீதியின் வழியிலான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார்.
- நீட் வழக்கில் மாணவர்களின் கருத்து முக்கியம் எனவும், மாநில அரசின் நிலைப்பாட்டையும் பார்க்க வேண்டும் என்ற அவரது கருத்து நம்பிக்கை அளிக்கிறது.
மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.
விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீதியின் வழியிலான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தனிநபர் சுதந்திரம் தொடர்பாக பல்வேறு சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி உள்ளார். நீட் வழக்கில் மாணவர்களின் கருத்து முக்கியம் எனவும், மாநில அரசின் நிலைப்பாட்டையும் பார்க்க வேண்டும் என்ற அவரது கருத்து நம்பிக்கை அளிக்கிறது. அவரது நம்பிக்கை வார்த்தைகள், நீதித்துறை மீதான பொது மக்களின் நம்பிக்கையை மென்மேலும் வலுப்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு பிற மாநிலங்களை காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது.
- புதிய நீதிமன்றங்களுக்கேற்ப தேவையான நீதிபதிகளை நியமிக்க போதிய நிதி ஒதுக்கியுள்ளோம்.
மதுரை:
மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டுகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பாராட்டி பேசினர்.
மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.
மதுரை கோர்ட்டில் நடந்த கூடுதல் கட்டிடங்கள் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு பிற மாநிலங்களை காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் நிலை வரும். தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக வழக்குகளை விரைவாக முடிக்க முடியும்.
நீதித்துறை கட்டமைப்பில் தி.மு.க.அரசு தொலைநோக்குடன் செயல்படுகிறது. புதிய நீதிமன்றங்களுக்கேற்ப தேவையான நீதிபதிகளை நியமிக்க போதிய நிதி ஒதுக்கியுள்ளோம். 3 மாவட்ட நீதிமன்றம் உள்பட 44 நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்ட கல்லூரியை பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிதாக பதிவு செய்த 1000 இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைபிடிக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியை ரூ.7 லட்சமாக இருந்தது. அது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது-
மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்ற வளாகம் ரூ.166 கோடிக்கு தொடங்கப்பட உள்ளது. 2 கீழ் தளம், தரைதளம், முதல் தளம், 2-ம் தளம், 3-ம் தளம் என கட்டப்பட உள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு மிகப்பெரிய இடமாக மதுரையே இருந்துள்ளது. சிலம்பதிகாரத்தில் சட்டம் பற்றி 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பேற்ற பின் நீதித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் முழுவதும் ஆன்லைன் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மனுதாக்கல் உருவாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 10 மொழியாக்கம் செய்ய உத்தரவிட்டது. அதில் சென்னை ஐகோர்ட்டு ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழியாக்கத்தில் முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஸ் பேசுகையில், "உலகில் எந்த பகுதியிலும் நடக்காத ஒரு சம்பவம் மதுரையில் நடந்தது. அதன் மூலம் கண்ணகி மதுரையில் நீதியை பெற்றுள்ளார். மன்னர் தவறாக நீதி வழங்கக்கூடாது என்பதற்கான நிகழ்வு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளது" என்றார்.
உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசியதாவது:-
மதுரை 3 விசயங்களுக்கு பெருமை வாய்ந்தது. முதல் விசயம் பெண்களை அதிகாரப்படுத்துவது. மதுரையில் மட்டுமே பெண்ணிடம் இருந்து ஆணுக்கு சக்தி கிடைக்கிறது. மற்ற நகரங்களில் ஆண்களிடம் இருந்து சக்தி கிடைக்கும்.
இரண்டாவது தமிழ் இலக்கியம் வளர்த்த நகரம் மதுரை.
சமண முனிவர்கள் நாலடியார் என்ற சங்க இலக்கியத்தை கொடுத்த ஊர் மதுரை. மேலும் மதுரை தூங்கா நகரமாக உள்ளது. மூன்றாவது மதுரை கோவில் நகரமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிவகங்கை நகரில் அரண்மனை வாசல் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மேலூர்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து எம்.பி. பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டித்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழையூர் பஸ் நிலையம் முன்புள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிராம கமிட்டி தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் துரைபாண்டி, பொன்.கார்த்திக், வட்டார தலைவர் வைரவன், மணியன், ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, தனியாமங்கலம் மாதவன், சண்முக வேல், பஞ்சவர்ணம் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இதே போல் சிவகங்கை நகரில் அரண்மனை வாசல் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
- அரசு பள்ளி மாணவர்கள் கீழடிக்கு சுற்றுலா சென்றனர்.
- முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் யூனியன் கவுன்சிலர் தென்பழஞ்சி சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் தென்பாண்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு மொழி தலைமையில் மாணவர்கள் 130 பேர், வேடர் புளியங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முத்துப்பிள்ளை, சத்தியபாமா ஆகியோர் தலைமையில் 230 மாணவர்கள் 4 பஸ்களில் கீழடிக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள தொல்லியல் அருங்காட்சியத்தை பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் திருப்பாலையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டனர். பகுதி அமைப்பாளர் சாரதி, ராஜா, நாகேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
- வீட்டின் மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் அக்சயா(21). இவர் கல்லூரியில் முதுகலை அறிவியல் படித்து வந்தார். அக்சயாவின் வீடு 3-வது மாடியில் உள்ளது.
நேற்று காலை வீட்டில் இருந்தபோது 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அக்ச யாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இது குறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புற்றுநோய் பாதித்த பெண்
நெல்பேட்டை சீனி ராவுத்தர் தோப்பை சேர்ந்தவர் பிச்சைக்கனி மனைவி மும்தாஜ் பேகம்(வயது 60). இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த மும்தாஜ் பேகம் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மூதாட்டி
ஆத்திகுளம் பழனிச்சாமி நகர் பெருமாள் மனைவி சீனி புஷ்பம் (62). இவருக்கு நெஞ்சு வலி இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த சீனி புஷ்பம் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.
வாலிபர்
விளாச்சேரி, தெற்கு முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன் (30). இவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே மனைவியை விவாகரத்து செய்தார். தனியாக வசித்து வந்த முகமது உசேனுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. நேற்று மதியம் அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.






