என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தற்கொலை செய்தது ஏன்?
    X

    இளம்பெண் தற்கொலை செய்தது ஏன்?

    • இளம்பெண் தற்கொலை செய்தது ஏன்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததால் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த கே.போத்தப்பட்டியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த குழந்தை களுக்கு இன்று (26-ந்தேதி) காதணி விழா நடத்த இருந்த னர்.

    இந்த நிலையில் நேற்று அமர்நாத் மது குடித்து விட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சென்று விட்டதாக கூறப் படுகிறது. காதணி விழா நடைபெற இருந்த நிலையில் கணவர் பொறுப்பில்லாமல் சென்று விட்டதால் மீனா மனமுடைந்தார். அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் உசிலம்பட்டி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக மீனா சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் ஆம்புலன்சில் உடலை ஏற்றவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததால் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×