உசிலம்பட்டியில் ஜாக்டோ- ஜியோ மனித சங்கிலி

உசிலம்பட்டியில் ஜாக்டோ- ஜியோ மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
உசிலம்பட்டியில் ஜாக்டோ- ஜியோ மனித சங்கிலி
Published on

உசிலம்பட்டி

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கநாதன், கார்த்திகேயன், மனோகரன், அய்யங்காளை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தீனன், செல்வி, தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com