என் மலர்
தமிழ்நாடு

தமிழகத்தில் நீதியின் வழியில் ஆட்சி- அமைச்சர் ரகுபதி பெருமிதம்
- தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீதியின் வழியிலான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார்.
- நீட் வழக்கில் மாணவர்களின் கருத்து முக்கியம் எனவும், மாநில அரசின் நிலைப்பாட்டையும் பார்க்க வேண்டும் என்ற அவரது கருத்து நம்பிக்கை அளிக்கிறது.
மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.
விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீதியின் வழியிலான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தனிநபர் சுதந்திரம் தொடர்பாக பல்வேறு சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி உள்ளார். நீட் வழக்கில் மாணவர்களின் கருத்து முக்கியம் எனவும், மாநில அரசின் நிலைப்பாட்டையும் பார்க்க வேண்டும் என்ற அவரது கருத்து நம்பிக்கை அளிக்கிறது. அவரது நம்பிக்கை வார்த்தைகள், நீதித்துறை மீதான பொது மக்களின் நம்பிக்கையை மென்மேலும் வலுப்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story