என் மலர்
மதுரை
- பயணிகளை ஏற்றுவதில் தகராறில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
- எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.
மதுரை
மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் மருதுபாண்டியன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் 38, ஆட்டோ டிரைவர். மதுரை பாத்திமா நகர் விருமாண்டி மகன் மோகன் என்ற அரசு. இவரும் ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவருக்கும் ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று பைபாஸ் ரோட்டில் டீக்கடை முன்பாக இருவரும் நின்றபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஷாஜகானின் கைவிரலை மோகன் பலமாக கடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீசில் ஷாஜகான் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மோகனை கைது செய்தனர்.
- வீரிருப்பு பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல் பெட்ரோல் பங்க் நடத்த அனுமதி கேட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது
- இடவசதிகள், பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட வேண்டும்.
மதுரை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலு காவை சேர்ந்தவர் சக்கர வர்த்தி. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சங்கரன் கோவில் தாலுகா வீரிருப்பு கிராமத்தில் பெட்ரோல் பங்க் நடத்து வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்தேன். அதை நிராகரித்தனர். எனக்கு தடையில்லா சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு தனி நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்ததற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் காரணங்கள் ஏற்புடையதல்ல. அதிகாரிகள் நிராகரித்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக மனுதாரருக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, பெட்ரோலிய துறையானது மத்திய அரசின் வசம் உள்ளது. ஆனால் இடவசதிகள், பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தடையில்லா சான்றை மாநில அரசின் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத்துறையினரிடம் பெற வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் உள்ளன.
அந்த வகையில் வீரிருப்பு பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல் பெட்ரோல் பங்க் நடத்த அனுமதி கேட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தர வுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- காவலாளியை டிரைவர் தாக்கினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் டி.டி.மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக இருப்பவர் ஜோசப் (வயது 68). இவர் பணியில் இருந்த போது ஆரப்பாளையம் புட்டு தோப்பு செக்கடி தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் தான் ஓட்டி வந்த ஆட்டோவை திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தி உள்ளார். அவரிடம் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தும்படி ஜோசப் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை ஆபாசமாக பேசி தாக்கினார். இது குறித்து கரிமேடு போலீசில் ஜோசப் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
மதுரை நடராஜ் நகர் ஜான்சன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் சோபிதா அபிதா (வயது 22). இவர் மணப்பெண் அலங்காரம் செய்து வருகிறார். இதனால் பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். ஆண் நண்பர்களுடனும் அடிக்கடி பேசியுள்ளார். இதனை பாஸ்கரன் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சோபிதா அபிதாவையும், சகோதரி மற்றும் தாயையும் ஆபாசமாக பேசியள்ளார். அதனை சோபிதா அபிதா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் சோபி ஆபிதாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கரிமேடு போலீசில் சோபிதாஅபிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.
- பூச்செடி என்று நினைத்து கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இளைஞர்களை குறி வைத்து சர்வ சாதார ணமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.
மதுரை
மதுரை மேலமடை அருகே எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிவகுமார் என்பவர் வீட்டில் பூச்செடி களுக்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிவகுமாரின் மகன் கார்த்திக் சில வாரங்களுக்கு முன்பு தேனியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பூச்செடி விதைகள் எனக்கூறி சிலவற்றை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.
அதனை பூ விதை என தவறுதலாக நினைத்து தொட்டியில் வைத்து கஞ்சா செடியை கார்த்திக் வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக கார்த்திக் கைது செய்யப்பட்டார்.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமூக விரோதிகள் பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து சர்வ சாதார ணமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதுரை நகரில் மேம்பாலங்கள்-பொது கட்டிடங்களை போஸ்டர்கள் அலங்கோலமாக்குகிறது.
- விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காளவாசல் மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.
மதுரை
தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியான மதுரை நகரம் காலத்திற்கு ஏற்ப நாள்தோறும் பல்வேறு மாற்றங்களை அடைந்து வருகிறது. தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கும் மதுரையில் அரசியல் கட்சியினர் மாநாடு, பொதுக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி சினிமா ஆர்வம்மிக்க மக்கள் அதிகம் வசிக்கும் மதுரை நகரில் பல்வேறு நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக மதுரையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடப்பது வாடிக்கையாக உள்ளது. அரசியல் கட்சியினர் நடத்தும் மாநாடு, பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். கம்ப்யூட்டர் காலமாக மாறினாலும் போஸ்டர் கலாச்சாரம் மட்டும் தமிழகத்தில் இன்னும் மாறவே இல்லை.
குறிப்பாக மதுரையில் சினிமா ரசிகர்கள், அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்பினர் பிரச்சினைக்குரிய வாசகங்களை இடம்பெற செய்து போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.இதனை அதிகாரிகளோ, போலீசாரோ கண்டு கொள்வதில்லை. மதுரை நகரில் தற்போது எங்கு பார்த்தாலும் பெரிய அளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. அரசு பொது கட்டிடங்கள், மேம்பாலங்கள், பஸ் நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களில் போஸ்டர்களை ஒட்டி அலங்கோலப்படுத்தும் நிலை அதிகரித்துள்ளது.
அரசு பல கோடி மதிப்பில் பொது கட்டிடங் களையும், மேம்பாலங்களையும் கட்டுகிறது. அவைகள் திறப்பு விழா காண்பதற்குள் அரசியல் கட்சியினரோ அல்லது மற்ற அமைப்புகளோ போஸ்டர்களை ஒட்டி அலங்கோலப்படுத்தி விடுகின்றனர்.
இதற்கு உதாரணமாக மதுரை தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பறக்கும் மேம்பாலத்தை கூறலாம். இந்த பாலத்தின் தூண்களின் அரசியல் கட்சியினர், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், திறப்பு விழா நடத்துபவர்கள் என பல தரப்பினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அழகாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் தூண்களில் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பார்ப்பதற்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. புதிய மேம்பாலம் போஸ்டர்கள் ஒட்டுவதற்காக கட்டப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது.
அது மட்டுமின்றி பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய தொழில்கள் நடத்துபவர்கள் வரை பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக நோட்டீசுகளை பொது இடங்கள், மின் கம்பங்கள், பஸ் நிறுத்த நிழற்குடைகள் அரசு கட்டிடத்தின் சுற்றுச்சுவர்கள், பொதுக் கழிப்பறைகள், அரசு வைத்திருக்கும் தெரு மற்றும் ஊர் பெயர் பலகைகளில் கூட ஒட்டி மறைத்து விடுகின்றனர். நகரின் அழகை கெடுக்கும் வகையில் ஒட்டப்படும் போஸ்டர் கலாச்சாரத்தை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாததால் இந்த நிலை தொடருகிறது.
ஆகவே இதனை தடுக்க மதுரை நகரில் விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அபராதமும் விதிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- சோழவந்தான் பேரூர் வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை ஆதரித்தும், பொதுச் செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டும் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முன்னதாக ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பேரூர் செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், சோழவந்தான் 10-வது வார்டு செயலாளர் மணிகண்டன், மருத்துவர் அணி கருப்பட்டி டாக்டர் கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம், சோழவந்தான் பேரூர் கவுன்சிலர்கள் வசந்தி கணேசன், ரேகா ராமச்சந்திரன், சரண்யா கண்ணன், சண்முக பாண்டியன், மன்னாடிமங்கலம், தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, சோழவந்தான் பேரூர் துணைச்செயலாளர் தியாகு, நகர இளைஞரணி கேபிள் மணி, சோழவந்தான் பேரூர் வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சோழவந்தான் ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
- திருக்கல்யாணத்தைக் காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தானில் உள்ள பழமை வாய்ந்த ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் 47-ம் ஆண்டு பிரம்மோற்சவம் விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதைதொடர்ந்து தினந்தோறும் கருடன், ஆஞ்சநேயர், ஷேசம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி-அம்மன் வீதி உலா சென்றனர்.இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில் மண்டபத்தில் நடந்தது.
மாப்பிள்ளை வீட்டாராக பாலாஜி பட்டரும் பெண்வீட்டாராக ஸ்ரீபதி பட்டரும் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனக நாராயணபெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது.
முன்னதாக. மண்டகபடிதாரர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர். தொடர்ந்து ஸ்ரீராமச்சந்திரர். சீதா மாலை மாற்று நிகழ்ச்சியும் நடந்தது. வருகிற 30-ந்தேதி ராமநவமி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கீதா, தாக்கார் அங்கையற்கண்ணி, எழுத்தர் முரளிதரன் செய்திருந்தனர். திருக்கல்யாணத்தைக் காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள தென்பழஞ்சி பகுதியை சேர்ந்தவர் பாண்டி(வயது 77). இவருக்கு கோமதியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி விட்டது. திருமணமான ஒரு மகளின் வீட்டில் பாண்டி தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
பாண்டிக்கு சொந்தமான தோட்டம் தென்பழஞ்சி பகுதியில் இருக்கிறது. நேற்று இரவு தோட்டத்திற்கு சென்ற அவர், இன்று காலையில் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பாண்டி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பாண்டி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதித்து அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில்களில் 13 லட்சத்து 43 ஆயிரத்து 576 ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும், மேலும் கோவிலில் பதிவேடுகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
- தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரை:
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாபநாசம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் பகுதியில் உள்ள நடுகண்ட விநாயகர் கோவில், வாழுகந்த அம்மன் கோவில், உச்சினி மாகாளி அம்மன் கோவில், சங்கி பூதத்தார் கோவில் திருப்பணி கமிட்டியினர் சேர்ந்து ரூ.13 லட்சத்திற்கும் மேல் கோவில் பணத்தினை மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மண்டல தணிக்கை அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் அந்த கோவில்களில் 13 லட்சத்து 43 ஆயிரத்து 576 ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும், மேலும் கோவிலில் பதிவேடுகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தகுந்த அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், இந்த வழக்கில் மண்டல அலுவலரின் தணிக்கை அறிக்கை மற்றும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்து ஆவணங்களுடன் நெல்லை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைத்தார்.
- தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற போலீஸ்காரர் திடீரென இறந்தார்.
- பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
அவனியாபுரம்
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36). இவரது மனைவி கண்மணி (30) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராஜபாண்டி மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றினார். சில நாட்களாக இவர் மூட்டு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து ராஜபாண்டி வில்லாபுரம் வீரபத்திரப்பிள்ளை காம்பவுண்டு பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று சிகிச்சை அளிக்கும் போது ராஜ பாண்டிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் ராஜபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மனைவி கண்மணி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். அதில், கணவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- பார் ஊழியரை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வீடு புகுந்து அவரை தாக்கினர்.
மதுரை
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 53). இவர் மதுரை அய்யர்பங்களாவில் உள்ள தனியார் பாரில் பாதுகாவலராக உள்ளார்.
சம்பவத்தன்று இரவு 10 பேர் கும்பல் பாருக்கு வந்தது. அவர்கள் குடிபோதையில் தகராறு செய்தனர். இதை நாகராஜ் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் அவரை தாக்கியது. அப்போது வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
இது குறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோசாகுளம் திருக்குமார் (39), அய்யர் பங்களா எழில் நகர் பிரபு (43), பரசுராம்பட்டி பாண்டியன் (36), புதூர் மகாலட்சுமி நகர் ரமேஷ் (39), புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளை ஆண்டிப்பட்டி கார்த்திக் ராஜா (35), பரசுராம்பட்டி இஸ்மாயில் தெரு ராஜா (49) ஆகிேயாரை கைது செய்தனர்.
மதுரை ஒத்தப்பட்டி சிங்காரபுரத்தைச் சேர்ந்தவர் ராகுல்(26). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. ராகுல் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து அவர் சந்தேக நபரின் தாயாரிடம் புகார் தெரிவித்தார். சம்பவத்தன்று இரவு ராகுல் வீட்டில் இருந்தார். அங்கு வந்த கும்பல் வீடு புகுந்து அவரை தாக்கினர். வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சூறையாடப்பட்டது.
இது குறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்திய நாதபுரம் சாதிக் பாட்சா மகன் அப்துல் மாலிக் (19), மகபூப்பாளையம் அன்சாரி நகர் பீர்முகமது மகன் முகமது ஆசிக் (19) ஆகியோரை கைது செய்தனர்.
- அடிப்படை வசதிகள் கேட்டு மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
- பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மதுரை
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித்சிங், மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், உதவி ஆணையர் காளிமுத்தண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த முகாமில் ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப் பாலை, கண்ணனேந்தல், கற்பக நகர், கோமதிபுரம், ஆத்திக்குளம் உள்பட கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள் தங்கள் பகுதிகளில் சாலை வசதி வேண்டியும், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதிமற்றும் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டி கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர்.
அதனை பெற்றுக்கொண்ட மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நேரில் மனுக்கள் குறித்து விசாரணை செய்து உடன டியாக நடவடிக்கை எடுக் கும்படி உத்தரவிட்டார்.
மேலும் இந்த முகாமில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பலர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மனு அளித்தனர்.






