என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
    X

    ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

    • சோழவந்தான் ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
    • திருக்கல்யாணத்தைக் காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் உள்ள பழமை வாய்ந்த ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் 47-ம் ஆண்டு பிரம்மோற்சவம் விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இதைதொடர்ந்து தினந்தோறும் கருடன், ஆஞ்சநேயர், ஷேசம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி-அம்மன் வீதி உலா சென்றனர்.இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில் மண்டபத்தில் நடந்தது.

    மாப்பிள்ளை வீட்டாராக பாலாஜி பட்டரும் பெண்வீட்டாராக ஸ்ரீபதி பட்டரும் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனக நாராயணபெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது.

    முன்னதாக. மண்டகபடிதாரர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர். தொடர்ந்து ஸ்ரீராமச்சந்திரர். சீதா மாலை மாற்று நிகழ்ச்சியும் நடந்தது. வருகிற 30-ந்தேதி ராமநவமி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கீதா, தாக்கார் அங்கையற்கண்ணி, எழுத்தர் முரளிதரன் செய்திருந்தனர். திருக்கல்யாணத்தைக் காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×