என் மலர்
மதுரை
- நாளை திருக்கல்யாணம் நடக்க இருப்பதால் மதுரை விழாக்காலம் கொண்டுள்ளது.
- 3-ந் தேதி தேரோட்டம் நடக்க இருக்கிறது.
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டனர்.
ஆவணி முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் மதுரையை ஆட்சி செய்வதாக ஐதீகம்.
மீனாட்சி அம்மனுக்கு முடி சூட்டும் வைபவம் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் 8-ம் நாளில் நடக்கும்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று இரவு நடந்தது.
இதையொட்டி நேற்று காலை தங்கப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் எழுந்தருளி கீழச்சித்திரை வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசி வீதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி காட்சி அளித்தனர். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 3 மணி அளவில் புறப்பட்டு கோவிலை அடைந்தனர்.
அதை தொடர்ந்து மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை கூறும்வகையில் பட்டாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்தன.
இந்த நிகழ்வுகள் அம்மன் சன்னதி ஆறுகால பீடத்தில் தொடங்கியது. காப்பு கட்டிய சரவணன் பட்டர் மற்றும் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் ஆகியோர் பட்டாபிஷேக பூஜைகளை தொடங்கினர். இரவு 7.20 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.
பின்னர் மீனாட்சி அம்மனுக்கு அந்த வைர கிரீடம் சூட்டி நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு தங்கத்தினால் ஆன செங்கோலும் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்த கண்கொள்ளா காட்சியை தரிசித்தனர்.
அப்போது மீனாட்சி அம்மனுக்கு மீன்கொடியும் அளிக்கப்பட்டது. இளஞ்சிவப்பு நிற பட்டு புடவையில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
பின்பு மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல், அம்மன் பிரதிநிதியாக கோவில் துணை கமிஷனர் அருணாசலத்திடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் கொடுத்தார்.
அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். அவருடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தார்.
பட்டத்து அரசியான மீனாட்சியை காண 4 மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு இருந்தனர். இதன் மூலம் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்கியது.
பட்டத்து அரசியாக பொறுப்பேற்ற பின்பு மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வை நினைவூட்டும் திக்கு விஜயம் நிகழ்ச்சி, இன்று (திங்கட்கிழமை) மாசி வீதிகளில் நடக்கிறது. அதை தொடர்ந்து நாளை (2-ந் தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
திருக்கல்யாணம் நடைபெறும் வடக்கு, மேற்கு ஆடி வீதிகளில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருக்கல்யாண மேடை ரூ.25 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
திருக்கல்யாணம், அதற்கு மறுநாள் (3-ந் தேதி) தேரோட்டமும் நடக்க இருக்கிறது. 4-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவை, 5-ந் தேதி வைகையில் எழுந்தருளல் என முக்கிய நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதால் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- தானியங்கி எந்திரத்தின் மூலம் மது விற்பனை செய்யும் ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
- பிரதமர் மோடியின் 100-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் கலைஞர் எழுதிய செம்மொழி பாடல் ஒலிபரப்பப்பட்டது தேர்தல் யுக்திகளில் ஒன்று.
மதுரை:
தானியங்கி மது விற்பனை ஏற்புடையதல்ல எனவும், மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறினார்.
மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியின் வெற்றியை இலக்காக வைத்து அங்குள்ள தமிழர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்கு சேகரிக்க இருக்கிறேன். தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவை மையமாக வைத்து பா.ஜ.க., தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மதத்தின் அடிப்படையில் வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறது. அதை அவர்கள் ஒரு களமாக பயன்படுத்துகின்றனர்.
எனவே கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியை அப்புறப்படுத்துவது, தென் மாநிலங்களின் நலன்களுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் மக்கள் அந்த முடிவில் இருக்கிறார்கள். என்றாலும், பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான களத்தில் காங்கிரசோடு விடுதலை சிறுத்தைகள் கைகோர்க்கிறது.
கர்நாடகத்தில் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து, அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவர் இருக்கும்போதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என இடைமறித்து அதை நிறுத்தியுள்ளனர். கன்னட வாழ்த்து பாடலை பாடச் சொல்வது அவர்களுக்கான உரிமை. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஒரு பகுதியில், ஒட்டுமொத்த தமிழ் வாக்காளர்களையும் அவமதிக்கக்கூடிய வகையில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தானியங்கி எந்திரத்தின் மூலம் மது விற்பனை செய்யும், ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமும் இல்லை.
படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ள இயக்கம் தி.மு.க. என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில், தேர்தல் வாக்குறுதியிலேயே அதை கூறி இருக்கிறார். எனவே படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முதல்- அமைச்சர் முன்வர வேண்டுமே தவிர, தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுவை பெற வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஏற்புடையதல்ல.
திருக்குறளை பேசுவது, பாரதியார் பாடலை பாடுவது, அவ்வப்போது தமிழை இடையே எழுதி வைத்து இந்தியில் படிப்பது இவையெல்லாம் பா.ஜ.க. கையாளக்கூடிய தேர்தல் தந்திரங்களில் ஒன்று. இந்தியை திணிக்க வேண்டும், சமஸ்கிருதத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. அதில் ஒரு முயற்சி தான், பிரதமர் மோடியின் 100-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் கலைஞர் எழுதிய செம்மொழி பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதுவும், அவர்களின் தேர்தல் யுக்திகளில் ஒன்று.
தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டது, வேதனை அளிக்கக் கூடிய சம்பவம். மணல் மாபியா கும்பல் அவரை கொடூரமாக தாக்கிப்படுகொலை செய்திருக்கிறார்கள். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மணல் மாபியா கும்பல் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கு அரசு, சிறப்பு படை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று தலைமை கழகத்திற்கு அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதி இருப்பது கண்டனத்திற்குரியது.
- தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைப்பது தொடர்பான திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை ம.தி.மு.க.வினர் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.
மதுரை:
மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று தலைமை கழகத்திற்கு அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதி இருப்பது கண்டனத்திற்குரியது. ஆரம்ப காலம் முதலே அவர் தலைமையின் கருத்துக்கு எதிர் கருத்துக்களை தான் கூறி வருகிறார். தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தாலும் ம.தி.மு.க.வுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது.கட்டுப்பாடான கொள்கை கொண்ட கட்சி ம.தி.மு.க.
தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைப்பது தொடர்பான திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை ம.தி.மு.க.வினர் முழுமையாக புறக்கணிக்க வேண்டும். பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயத்தை பொது வெளியில் வெளியிடுவது முறையல்ல.
வாரிசு அரசியல் என்று அவர் குறிப்பிடுவது முறையற்ற கருத்தாகும். தலைமை நிலைய செயலாளராக துரை வைகோவை தேர்ந்தெடுப்பதற்கு வைகோ விரும்பவில்லை. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் முழு சம்மதத்தோடுதான் கட்சியின் விதிப்படிதான் அவர் தலைமை நிலைய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அந்த பதவிக்கு பொறுப்பானவர்தான்.இதில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை. கட்சி தலைமைக்கு அவர் தகுதியானவர்தான்.
பொதுவாக கட்சியில் நிர்வாகிகளெல்லாம் தேர்ந்தெடுக்கப்படும்போது கட்சி கட்டுப்பாட்டை விதி முறைகளுக்கு உட்பட்டு தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது.
ஒரு பதவிக்கு இரண்டுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுவது இயல்பான முறை. அதில் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு பேசி தலைவர் சமாதானம் செய்துவிடுவார். கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை நேரடியாக சந்தித்துப்பேசும் தலைவர் வைகோ. உடல் நிலை சரியில்லாத போதுகூட அவர் சோர்வடைந்தது இல்லை. அவரால் கட்சியில் அனைவரும் உற்சாகத்துடன்தான் இருக்கிறார்கள். ஆரம்ப காலம் முதல் கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை திருப்பூர் துரைச்சாமி வழக்கமாகக் கொண்டு உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆயுதங்களுடன் திரிந்த 6 வாலிபர்கள் கைதனார்கள்.
- சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்தது தெரியவந்தது.
மதுரை
மதுரை கே.புதூர் போலீசார் பாலாஜி நகரில் ரோந்து சென்றனர். அப்போது கோல்டன் சிட்டி பின்புற பகுதியில் எருக்கலை நத்தம் சூர்யா (வயது 25), பாலமேடு வெள்ளையம் பட்டி முத்துப்பட்டி தெரு முருகன் மகன் அஜித் என்ற கருவாயன் (22) ஆகிய 2 பேர் ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் அண்ணா நகர் எஸ்.எம்.பி. காலனியில் ஆயுதங்களுடன் திரிந்த கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி என்ற ஒயிட் (32), எஸ்.எம்.பி. காலனி சக்திவேல் மகன் ஜோதிகுமார் என்ற எலும்பன் (23) ஆகிய 2 பேர் குற்ற செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் ஆயுதங்களு டன் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இேதபோல் பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் அருகே ஆயுதங்களுடன் திரிந்த வண்டியூர் காளி யம்மன் கோவில் தெரு சேதுராமன் மகன் சூரிய பிரகாஷ் என்ற கல்கட்டை (24), முந்திரிதோப்பு, மவு லானா சாகிப் தெரு மணி கண்டன் என்ற உசிலைமணி (34) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீ சார் கைது செய்தனர்.
- ஜவுளிக்கடை வியாபாரியை வீடு புகுந்து தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வீடு புகுந்து வாசுதேவனை தாக்கினர்.
மதுரை
மதுரை வெங்கலக்கடை தெருவை சேர்ந்தவர் வாசு தேவன் (வயது 58). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருக் கும், இவரது சகோதரர்க ளுக்கும் இடையில் ஏற்கனவே சொத்து சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.
இந்த நிலையில் வாசு தேவன் சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது சகோதரர் மாதவன், அவரது மனைவி காஞ்சனா மற்றும் சாரதா ஆகிய 3 பேர் வீடு புகுந்து வாசுதேவனை சரமாரியாக தாக்கினர்.
இது தொடர்பாக வாசு தேவன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாதவன், காஞ்சனா, சாரதா ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதே வழக்கில் காஞ்சனா கொடுத்த புகாரின் அடிப் படையில் வாசுதேவன், ஜெயராஜ் ஆகிய 2 பேரை யும் போலீசார் கைது செய்தனர்.
- அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
- தாய் மாரியம்மாள் போலீசில் புகார் செய்தார்.
மதுரை
மதுரை விராட்டிபத்து அரிஜன காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.கொத்தனார். இவரின் தம்பி திரவியம். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
இந்த நிலையில் திரவியம் சம்பவத்தன்று நள்ளிரவு குடிபோதையில் தெருவில் நின்று தகராறு செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட பாலமுருகன் தம்பியை கண்டித்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது.
இதைத்தொடர்ந்து ஆத்திரத்துடன் சென்ற திரவியம் வேல் கம்புடன் வந்து அண்ணன் பாலமுரு கனை சரமாரியாக தாக்கி னார். இதில் பாலமுருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது.
அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார்.
இது தொடர்பாக பால முருகனின் தாய் மாரியம்மாள் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து திரவியத்தை கைது செய்தார்.
- மதுரையில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் திறந்து வைத்தார்.
- பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதுரை
சித்திரை திருவிழாவை யொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமி நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொருட்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார்.
வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன்,
எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மணிவண்ணன்.
டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி, ஐ.சி.டி.சி ஆற்றுநர்கள் ரவிக்கண்ணன், வீரபத்திரன், ஜெயபாலன், தொண்டு நிறுவனங்களான பிரதர் சிகா ரூபி, பக்கீர் வாவா, பேஸ் அறக்கட்டளை பாரதி கண்ணம்மா, தாய் விழுதுகள் அறக்கட்டளை மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு பொருட்காட்சி திறப்பு விழாவில் 100-க்கும் மேற்பட்ட பயனா ளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- மதுரை மாநகராட்சி 20-வது வார்டில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

20-வது வார்டு தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டதால் மோசமாக காணப்படும் தெரு.
மதுரை
மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியான 20-வது வார்டு விளாங்குடியில் சொக்கநாத புரம் 1, 2-வது தெருக்களில் பாதாள சாக்கடை, முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டது.
இதுபோன்று பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டது. இதுதொடர்பாக 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதிசித்தன் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
சாலை மறியல்
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோ ரியும், தெருக்களில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடி சாலை அமைத்துத்தர வலியுறுத்தியும் இன்று காலை கவுன்சிலர் நாக ஜோதிசித்தன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி உதவி ஆணையாளர், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் பிரச்சினை, புதியசாலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
- மதுரை மாவட்டத்தில் தொழிலாளர் துறையினர் சோதனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இணைய தளத்தில் புகார் தெரிவிக்கலாம்.
மதுரை
மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகிேயாரது ஆலோசனை பேரில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஏப்ரல் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது தராசுகளை மறுமுத்திரையிடாதது, தரப்படுத்தாத எடை அளவுகள் பயன்படுத்தியது, மறுபரிசீலனை சான்று காட்டி வைக்காதது, நிறுவன உரிமங்கள் புதுப்பிக்காதது ஆகியவற்றிற்காக 26 நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டது.
குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பதிவுச்சான்று பெறாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்த, அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதலாக விற்பனை செய்த 5 நிறுவனங்கள் சிக்கியது.
குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் 14 உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அந்த நிறுவனங்களிடம் இருந்து 23 ஊழியர்களுக்கு ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 260 சம்பள நிலுவைத் தொகை பெற்று வழங்கப்பட்டது.
மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிற்கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 1 குழந்தை தொழிலாளர் மற்றும் 4 வளரிளம் பருவ ஊழியர்கள் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் பதிவுச் சான்று பெற, தராசுகளை முத்திரையிட labour.tn.gov.in இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 18 வயது நிறைவடையாத குழந்தைகளை அபாய கரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.அவ்வாறு செய்தால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ரூ.50 ஆயிரம் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. குழந்தை தொழிலாளர் குறித்து 1098, 155214 அல்லது ''Pencil portal'' இணையதளம் வழியாக புகார் செய்யலாம்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்- பாதுகாவலர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க இயலும். எடை அளவைகள் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் முரண்பாடு தெரிய வந்தால் ரூ.500 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
முத்திரையிடாத எடை அளவைகள் பயன்படுத்துவோர், அதிகபட்ச சில்லரை விலையைவிட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் பற்றி National Consumer Helpline எண். 1915 அல்லது இணைய தளத்தில் புகார் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.
- மதுரையில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை கோரிப்பாளை யம் ஜம்புராபுரம் தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி ரேகா (வயது 37). இவர் இரவு கணவர் லெனினுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அவர்கள் விளாங்குடி பகுதி யில் சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அவர்கள் ரேகா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த ரேகா கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மதுரை கருப்பாயூரணி, மீனாட்சி நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சசிரேகா (46). இவர் நேற்று இரவு மோட் டார் சைக்கிளில் கோமதி புரத்துக்கு சென்றார். அந்த வழியாக மோட்டார் சைக்கி ளில் வந்த 2 மர்ம நபர்கள் சசிரேகா அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இது பற்றி சசிரேகா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த 2 நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்பது ெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- தொண்டர்கள் கலந்து கொண்டனர்
மதுரை
மதுரை விளாங்குடியில் மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பட்டியலணி தலைவர் சிவாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விளாங்குடி பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில தலைவர் சிவாஜி பேசுகையில், விளாங்குடி செம்பருத்தி நகரில் மாநகராட்சி நிர்வாகம் அனுபவம் இல்லாத ஊழியர்களை பாதாள சாக்கடை தோண்டுதல், பைப் பதித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுத்துகிறது.
அங்கு அரைகுறையாக பணிகள் நடந்து வரு கின்றன. இதனால் பொதுமக்களும் முதியோர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அவசர உதவிக்கு 108 ஆம்புலன்சு கூட வர முடியவில்லை.
விளாங்குடியில் அனுபவம் இல்லாத வர்களுக்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அனுபவம் உள்ள நபர்களிடம் பணிகளை ஒப்படைக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆண்- பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்
- மதுரை மாநகரில் சித்திரை திருவிழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
- பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகி யவை முக்கிய நிகழ்ச்சி களாகும்.
இந்த நிலையில் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேற்று மதுரை வந்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவில் போதிய பாது காப்பு கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது சித்திரை திருவிழா பாதுகாப்பு தொடர்பாக அதிகாரி சங்கர் பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பல்வேறு பகுதி களுக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், அழகர் கோவிலில் சுவாமி புறப்படும் இடம் ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கும் வைபவத்துக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்தாண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றுக்குள் 2 பக்தர்கள் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். நடப்பாண்டு திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வகையில் போலீசார் பாது காப்பு பணிகளை மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளனர்.
இதற்காக மதுரை மாநகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.






