என் மலர்
மதுரை
- இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா தொடங்கியது.
- அன்பின் விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை
மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர்மறை மாவட்ட குடும்ப நல்வாழ்வு மைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் பால்ராஜ் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத் தார். தொடர்ந்து தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெப மாலை வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நடைபெறு கிறது.
அருட்தந்தையர்கள், பால் பிரிட்டோ (சமயநல்லூர்) ஜோசப் அந்தோணி (நாகமலைபுதுக்கோட்டை) ஜெயராஜ் ( பாஸ்டின் நகர்) அருளானந்தம் (வடக்கு வட்ட அதிபர்) மரிய மைக்கேல் (சதங்கை) பென டிக்ட் பர்னபாஸ் (மறைப் பணி நிலையம்) சகாயம் (ரட்சகர் சபை ) டேனியல், சந்தியாகு (அருளக குருக்கள்) ஆகியோர் பங்கேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்று கிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 24-ந்தேதி (சனிக்கிழமை) மாலை சகாய அன்னை திரு உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை திருப்பலி முடிந்ததும் கொடியிறக்கப் பட்டு அன்பின் விருந்துடன் திருவிழா நிறைவு பெறு கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் சேகர் தலைமையில் பங்கு அருட்பணி பேரவை யினர், துறவற சபையினர், அன்பிய பொறுப்பாளர்கள், பங்கு இறை மக்கள் ஆகி யோர் செய்து வருகின்றனர்.
- மாணவர்கள் உதவித்தொகை பெற மீண்டும் இணையதளம் தொடக்கப்பட்டுள்ளது.
- வருகிற 30-ந்தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் கல்வி பயின்ற ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்வத ஆதி திராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான https:/tnadtwscholarship.tn.gov.in/ என்ற இணையதளம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வருகிற 30ந்தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. மேலும், காலநீட்டிப்பு வழங்க இயலாத சூழ்நிலையுள்ளதால் குறித்த காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகையினை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்டது.
- போலீசார் 3 வாலிபர்களை கைது செய்தனர்.
மதுரை
செல்லூர் சத்தியமூர்த்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் (வயது45). இவர் செல்லூர் 50 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை 3 வாலிபர்கள் வழி மறித்த னர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அபூபக்கரிடம் இருந்து ரூ.1,500-ஐ பறித்துக்கொண்டு தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசில் அபூபக்கர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் வழிப்பறி செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
இந்த நிலையில் வழிப்பறி செய்த வாலிபர்கள் செல்லூர் நந்தவனம் ஈ.வே.ரா. பெரியார் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் கர்ணன், செல்லூர் மண வாளன் நகர் 2-வது தெருவை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன், மூர்த்தி என்பது தெரியவந்தது. இதில் கர்ணணையும் மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூர்த்தியை தேடி வருகின்றனர்.
செல்போன்கள் திருட்டு
சிவகங்கை மாவட்டம் அம்பலத்தாடி போஸ்ட் மான்குடியை சேர்ந்தவர் சேதுராமன் மகன் சூரிய பாண்டி(20). இவர் தல்லா குளம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தேர்வு எழுத சென்றார். அப்போது அவரது பையில் அவருடைய செல்போன் மற்றும் நண்பர்களின் 8 செல்போன் களை வைத்துவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 9 செல்போன் கள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து அவர் தல்லா குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அதே கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சேதுராமன் பையில் இருந்து செல் போன்களை திருடி சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 9 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.
- கல் மனம் படைத்த தாய் தனது மகளை பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டார்.
- பாட்டியிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மதுரை:
மதுரை சம்பக்குளத்தை சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது தாய் அந்த சிறுமியை வளர்க்க முன்வரவில்லை. இதனால் செல்லூரில் உள்ள தந்தை வழி பாட்டி பராமரிப்பில் சிறுமி வளர்ந்து வந்தார்.
அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு அங்கு வந்த அவரது தாய் தனது மகளை சம்பக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அப்போது கல் மனம் படைத்த தாய் தனது மகளை பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டார். இதற்காக தினந்தோறும் இரவு சிறுமிக்கு தெரியாமல் அவருக்கு தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பின் சில காமுகர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அப்போது சிறுமியின் உடலிலும் சிகரெட் சூடு வைத்ததாகவும் தெரிகிறது. பாலியல் பலாத்காரத்தில் மகள் கருவுறாமல் இருப்பதற்காக தாய் மாத்திரைகளையும் கொடுத்துள்ளார். பாலியல் வன்கொடுமையால் சொல்லொண்ணா துயரத்திற்கு உள்ளான அந்த சிறுமி தனது தாயிடம் இருந்து தப்பி பாட்டியிடம் வந்து சேர்ந்தார். அவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி உடனே போலீசில் புகார் செய்ய திட்டமிட்டார். இதையறிந்த விபசார கும்பலை சேர்ந்த புவனேஷ் என்பவன் போலீசில் புகார் செய்தால் சிறுமி மீது ஆசிட்வீசி, கொலை செய்வேன் என்றும், சிறுமியின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளான்.
ஆனால் சிறுமியின் பாட்டி இந்த விவகாரம் தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 13 வயது சிறுமி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது உண்மை என தெரியவந்தது. அதற்கு அவரது தாய் மற்றும் சித்தி, பெரியம்மா உள்பட 8 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய், அவரது சித்தி, பெரியம்மா மற்றும் சிறுமியியை பாலியல் பலாத்காரம் செய்த அருண், புவனேஷ், சேகர், மணிகண்டன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களையும் கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பெற்ற மகளையே பணத்துக்காக தாய் விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.
- விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது சொரிக்காம்பட்டி பெருமாள் கோவில்பட்டி. இங்கு காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு ஆனி மாதம் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. இந்த விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையாசாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை நடந்தது. காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கினர். பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன. 250 மூடை அரிசியில் சாதம் தயாரானது.
இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் கலைந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவர்.
இன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொர்க்கம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, குண்ணனம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.
ஜாதி மத வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்திற்காக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக கறுப்பு நிறத்தில் உள்ள வெள்ளாடுகளை வளர்த்து நேர்த்திகடனாக செலுத்துவது வழக்கமாக உள்ளது.
- கட்டிட ஒப்பந்ததாரர்-வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மேல அனுப் பானடி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் மாரியப் பன் (வயது 58). குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த மாரி யப்பன் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரியப்பன் விஷம் குடித்து இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனையூர் ராமமூர்த்தி நகர் கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் அழகேசன்(57). இவருக்கு மனநல பாதிப்பு இருந்தது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்தநிலையில் சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அழகே சன் கைலியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டியூர் சங்கு நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(32). கருத்து வேறுபாடு காரண மாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரகாஷ் வீட்டில் மின்சார வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மாத ஆண் குழந்தை திடீரென இறந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மேல அனுப்பானடி சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன். திருமண மான இவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சுடலை காளி என பெற்றோர் பெயர் சூட்டினர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பேச்சு மூச்சின்றி கிடந்ததை பார்த்த பெற்றோர் குழந்தையை தூக்கிக்கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர் கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். குழந்தையின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து லோகேஸ்வரன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் கோவில்களில் ஆனி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
- விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மதுரை
மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்கி ஜூலை 2-ந்தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்தி களுடன் 100 கால் மண்ட பத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருள்வர்.
வருகிற 26-ந்்தேதி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு வெள்ளியம்பல நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு ஆனி உத்திர திருமஞ்சனம் நடை பெறும். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளுக்கு பிறகு காலை 7 மணிக்கு பஞ்ச சபை நடராஜர்-சிவகாமி அம்மன் பல்லக்கில் எழுந்த ருளி மாசி வீதிகளில் வலம் வருவார்கள்.
ஜூலை 3-ந்தேதி உச்சி கால பூஜையில் மூலவர் சொக்கநாத பெருமானுக்கு முக்கனி அபிஷேகம் நடை பெறும். இதற்கு பக்தர்கள் அபிஷேக பொருட்களை 25-ந் தேதி 7 மணிக்குள் வழங்கலாம். தொடர்ந்து பிரியாவிடையுடன் சுந்தரே சுவரர், மீனாட்சி அம்மன் தனித்தனி வெள்ளிக் குதிரை வாகனங்களில் சித்திரை வீதிகளில் வலம் வருவார்கள். வருகிற 23-ந்தேதி மாணிக்கவாசகர் புறப்படும், ஜூலை 3-ந்தேதி அருணகிரி நாதர் புறப்பாடும் நடை பெறும்.
திருப்பரங்குன்றம் கோவில்
திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் வருகிற 24-ந்தேதி காப்பு கட்டு தலுடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்ட பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
10-ம் நாள் நிகழ்ச்சியாக ஜூலை 3-ந் தேதி முக்கனி பூஜை நடைபெறும். அன்றைய தினம் உச்சிகால வேளையில் சுப்பிரமணியர், சத்யகிரீசுவரர், பவளக் கனிவாய் பெருமாள், துர்க்கை, கற்பக விநாய கருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியா ளர்கள் செய்து வருகின்றனர்.
- 4 வழிச்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை
மதுரை வாடிப்பட்டி 4 வழிச்சாலை நடுவில் சிமெண்டால் தடுப்பு அமைக்கப்பட்டு அரளிப்பூ செடிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வளர்க்கப் பட்டு வருகிறது. அதனை தண்ணீர் விட்டு பராமரிக்கா ததால் காய்ந்து சருகாக காணப்படுகிறது.
இந்த நிலையில் குலசேகரன்கோட்டை பிரிவு அருகே 4 வழிச்சாலை தடுப்பில் காய்ந்த அரளிப்பூ செடிகள் திடீரென தீப்பி டித்து எரியத்தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவியது. இதனால் 4 வழிச்சாலை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிய டைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக் அப்துல்லா தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
- அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் மீட்கப்பட்டது.
- வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 6-வது பிளாட்பாரம் அருகே 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இறந்து கிடந்தார். அவர் கருப்பு, வெள்ளை கோடு போட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். இதேபோல் மாட்டுத்தாவணி டவுன் பஸ் நிறுத்தம் அருகே 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். வெள்ளை சட்டை அணிந்திருந்தார். இவர்களை பற்றி விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி ேபாலீசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு இடையூறாக இருந்த 11 கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
- இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை
மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தென் மாவட்டங்களில் முக்கிய மருத்துவமனையாக உள்ள இங்கு விபத்து, தீக்காய சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.
இதன் காரணமாக அண்டை மாவட்டங்களான சிவகங்கை, தேனி, ராமநாதபு ரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்வதுண்டு. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள் உரு வாக்கப்பட்டு சிகிச்சைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி மருத்துவ மனையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் தற்போது அரசு ஆஸ்பத்திரி வளா கத்தில் புதிய டவுன் பஸ் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தி ற்கு சுற்றுச்சுவர் அமைப்ப தற்கு வெளிப்புறமாக இருந்த 10 கடைகள் இடையூறாக இருந்தது. இதையடுத்து கடைகளை காலி செய்யுமாறு கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாநகராட்சி சார்பில் உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை கடைகளை காலி செய்யவில்லை.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று போலீசார் பாதுகாப்புடன் அரசு ஆஸ்பத்திரி முன்பு இடையூறாக இருந்த 11 கடைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
- அங்கிருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலூர்
மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள வெல்ல நாதன்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடை அருகே அனுமதியின்றி திறந்தவெளியில் மது பார் இயங்கி வந்தது. இங்கு வரும் குடிமகன்களால் அப்பகுதி யில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் மேலூர் கோட்டாட்சியர் பிர்தவுஸ் பாத்திமா மற்றும் அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மதுபார் அனுமதியின்றி நடத்துவது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் மது பார் கூடத்துக்கு சீல் வைத்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த வாரம் அரசு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக மது விற்றதாக கச்சிராயன்பட்டி டாஸ்மாக் கடை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்டு செய்தது குறிப்பிடத்தக்கது.






