என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby die"

    • மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மாத ஆண் குழந்தை திடீரென இறந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேல அனுப்பானடி சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன். திருமண மான இவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சுடலை காளி என பெற்றோர் பெயர் சூட்டினர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பேச்சு மூச்சின்றி கிடந்ததை பார்த்த பெற்றோர் குழந்தையை தூக்கிக்கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர் கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். குழந்தையின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இந்த சம்பவம் குறித்து லோகேஸ்வரன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×