என் மலர்
கள்ளக்குறிச்சி
- கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.
- விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் மற்றும் கண்காணிக்கவும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வடபொன்பரப்பி போலீஸ் நிலையம் சார்பில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.
இந்த கண்காணிப்பு கேமராவை யாரோ மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை உடைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.
- சத்தம் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு கேட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள நீரால் பங்காரம் பகுதியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீர் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில் இந்த ஏரியில் சில நாட்களாக இரவு நேரங்களில் வாகனம் செல்லும் சத்தம் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு கேட்டுள்ளது. மறுநாள் காலையில் சென்று பார்த்ததில் ஏரியில் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதும் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் மண் திருடப்படுவதையும் அறிந்த அப்பகுதி மக்கள் மண் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க ஏரிக்கு சென்றுள்ளனர்.
பொதுமக்கள் வருவதை தெரிந்து கொண்ட மணல் திருடர்கள் மண் திருட பயன்படுத்திய2 கிட்டாச்சி வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனர்.பின்னர் இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கும் வருவாய் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இது போன்ற சட்டத்திற்கு எதிராகவும் நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடமாடும் மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகன அங்காடி இயக்குவதற்கு, சுய உதவிக்குழு உறுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர், விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே விற்பனை வாகன அங்காடி வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் உறுப்பினர் உள்ள சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும், சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் பூர்த்தி செய்திருக்க வேண்டும், வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும், அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் பயனாளிக்கு வழங்கப்படும், வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை, வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திற்கே ஒப்படைக்கவேண்டும். விதிமுறைகள் மீறி செயல்படும் உறுப்பினரிடமிருந்து வாகன அங்காடி திரும்ப பெற்றுக்கொள்ளப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி பறிமுதல் செய்யப்படும். வாகன அங்காடிக்கு வாடகை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பராமரிப்பு செலவினங்களை சம்பந்தப்பட்ட பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி உடைய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் நலிவுற்ற குடும்ப உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் இவ்வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, பயனாளிகளை தேர்வு செய்யப்படவுள்ளது. எனவே, மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க தகுதியானவர் விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நிறைமதி கிராமம், நீலமங்கலம்(அஞ்சல்) கள்ளக்குறிச்சி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 16-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
- சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய மணி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிரா மத்தை சேர்ந்த பச்சை யம்மாள் (35) என்பவரை கைது செய்தபோலீசார் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- பூமாலை மனைவி சிலம்பாயி.
- அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை மனைவி சிலம்பாயி (வயது 70), இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியின் காரணமாக விஷ தழையை அரைத்து குடித்துள்ளார். இதனால் மயக்கமடைந்தஅவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். இதுகுறித்து இவரது மகள் பச்சையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
- நேற்று இரவு தியாகதுருகம் அடுத்த எஸ். முகையூர் கிராமத்திற்கு வந்து, குடியிருப்பு பகுதியில் நீர் குடித்து திரும்பிச் சென்றது.
- வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மானை காப்புக்காட்டில் புதைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் காப்புக்காட்டில் வனப்பகுதி உள்ளது. இங்கு மான், குரங்கு, காட்டுப்பன்றி, முயல் போன்ற விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. கோடை காலத்தில் காடுகளில் ஏற்படும் குடிநீர் பஞ்சம், உணவு பற்றாக்குறை உருவாவதால் இவைகள் அனைத்தும் ஊருக்குள் வந்து செல்வது வழக்கம். அதன்படி, காப்புக்காட்டு வனப்பகுதியில் இருந்த மான் ஒன்று, நேற்று இரவு தியாகதுருகம் அடுத்த எஸ். முகையூர் கிராமத்திற்கு வந்து, குடியிருப்பு பகுதியில் நீர் குடித்து திரும்பிச் சென்றது. அப்போது ஊருக்குள் இருந்த நாய்கள் இந்த மானை விரட்டியது. இதனை கண்ட ஒரு சிலர் நாயை விரட்டினர். இருந்தபோதும் கும்பலாக இருந்த நாய்கள் மானை விரட்டி கடித்து குதறின.
இதில் அங்குள்ள ஓம்சக்தி கோவில் அருகில் மான் மயங்கி விழுந்தது. இந்த மானிற்கு பொதுமக்கள் குடிநீர் வைத்தனர். அதனை குடிக்காமல் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மானை காப்புக்காட்டில் புதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு கோடை காலத்திலும், காட்டில் இருந்து மான், முயல் போன்றவைகள் ஊருக்குள் வருவதும், அவைகளை நாய்கள் கடிப்பதால் உயிரிழப்பும் தொடர்கதையாக உள்ளது. எனவே, காப்புக்காடு வனப்பகுதியில் பழ மரங்களை வைத்து பராமறித்து விலங்குகளுக்கு உணவு வழங்க வேண்டும். காட்டைச் சுற்றியும் தொட்டி கட்டி விலங்குகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- 6 அடமான போலி ஆவணங்களை தயார் செய்து, அதன்மூலம் ரூ.17 லட்சத்து 20 ஆயிரத்து 131 மோசடி செய்தது தெரிந்தது.
- வட்டார மேலாளர் சமதகிரி நிலப்பா சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தனியார் கிளை நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் தலைமை அலுவலராக சின்னசேலம் அருகே கடத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 26), உதவி தலைமை அலுவலராக பூண்டி அம்மையரகம் கிராமத்தை சேர்ந்த சின்னராஜ் (25), இளநிலை உதவியாளராக சங்கராபுரம் பூட்டை சாலையை சேர்ந்த ராஜசேகர் (26) ஆகியோர் பணி புரிந்து வந்தனர். இந்த கிளை நிறுவனத்தில் அதிகாரிகள் குழுவினர் தணிக்கை செய்தனர்.
இதில் ஏழுமலை உள்பட 3 பேரும் சேர்ந்து நகையை அடமானம் வைத்தது போல் 6 அடமான போலி ஆவணங்களை தயார் செய்து, அதன்மூலம் ரூ.17 லட்சத்து 20 ஆயிரத்து 131 மோசடி செய்தது தெரிந்தது.இது குறித்து தனியார் நிறுவனத்தில் வட்டார மேலாளர் சமதகிரி நிலப்பா சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, சின்னராஜ், ராஜசேகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பிரேக்கில் ஏற்பட்ட பழுதால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடியது.
- பஸ் கடையின் மீது மோதி விடும் என்ற அச்சத்தில் ஷேக் கவுஸ் பாஷா பஸ்சிலிருந்து கீழே குதித்தார்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூருக்கு இன்று காலை வந்தது. திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பை கடந்து 5 முனை சந்திப்பு சாலை அருகே வந்தபோது பஸ்சில் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். ஆனால் பிரேக்கில் ஏற்பட்ட பழுதால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி அந்த பகுதியில் இருந்த ஒரு செல்போன் கடையில் மோதியது. இதனால் கடையின் முன்பக்கம் சேதமானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் பஸ் கடையின் மீது மோதி விடும் என்ற அச்சத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஷேக் கவுஸ் பாஷா (வயது 60) என்பவர் பஸ்சிலிருந்து கீழே குதித்தார். செல்போன் கடையில் வேகமாக மோதிய பஸ் பின்னால் வந்ததுபோது ஷேக் பாஷா மீது மோதி கீழே விழுந்தார். இதில் சாலையில் கிடந்த கல் மீது விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சேக் பாஷா இறந்தார். பஸ்மோதி நின்ற போது பின்னால் வந்த ஆட்டோ மோதியது.
அதன் பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்றும் மோதியது. ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் பஸ்சில் பயணம் செய்த மூதாட்டி, சிறுமி, டிரைவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தில் இறந்த ஷேக் கவுஸ் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலையில் ஆட்டோ மற்றும் தனியார் பஸ் மோதி விபத்து நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 53) கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவர் சம்பவத்தன்று மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருக்கோவிலூரில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வந்த நந்தகுமார் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அறையில் இருந்த பீரோவை பார்த்தபோது அதன் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ஒரு வெள்ளி தட்டு, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமை யிலான போலீசார் விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முருகனும், ஜமுனாவும் நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
- 15 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50000 கொள்ளையடிக்கப்பட்டது .
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருணகிரியார் தெருவில் வசிப்பவர் முருகன் (வயது 45). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜமுனா (40). உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருநெ ல்வேலி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகனும், ஜமுனாவும் நேற்று இரவு சென்றனர். இவர்களது மகன்களை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு சென்றனர்.
இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள், முருகன், ஜமுனா தம்பதியரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை பார்த்தனர். உறவினர் வீட்டில் இருந்த முருகன், ஜமுனாவின் 2 மகன்களிடம் இதனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோருக்கு போன் செய்தனர். அவர்களின் வழிகாட்டுதல் படி பீரோவில் இருந்த பொருட்கள் உள்ளனவா என்று பார்த்தனர். இதில் பீரோவின் பாதுகாப்பு அறை உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்ட னர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் யாரையும் கவ்விப்பி டிக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீ சார் பூட்டிய வீட்டின் கதவு, பீரோவை உடைத்து தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகி ன்றனர். உளுந்தூர்பே ட்டை நகரின் மையப்பகுதியில் எப்போ தும் ஆள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் கொள்ளை நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கள்ளக்குறிச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
- கலந்து கொள்ள இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்வரன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமை தனி யார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.
தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார் துறை நிறுவனங்கள் அவ்வப்பொழுது கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால் இம்முகாமிற்கு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ள இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்ப டமாட்டாது. எனவே இவ்வேலை வாய்ப்பு முகாமிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞ ர்களும், தனியார்த்துறை நிறுவனங்களும் வருகிற 16- ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள டேனிஷ் மிஷன் நகர தொடக்க ப்பள்ளியில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- அதிரடி சோதனைகளை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார்.
- தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனைகளை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மணலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமயந்தி (வயது 40), குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், வரஞ்வரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட உடையநாச்சி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத்(45), நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த காசி (48), சங்கரபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊராங்கனி கிராமத்தில் வெங்கடேசன் மனைவி செல்வி(43), ஜவுளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மனைவி கல்யாணி(60), கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த முருகன்(45) ஆகியோர் தங்களது மளிகை கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மணலூர்பேட்டை, வரஞ்சரம் மற்றும் சங்கராபுரம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 4 கடைகளை மூடி சீல் வைத்தனர்.






