என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு
- வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 53) கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவர் சம்பவத்தன்று மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருக்கோவிலூரில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வந்த நந்தகுமார் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அறையில் இருந்த பீரோவை பார்த்தபோது அதன் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ஒரு வெள்ளி தட்டு, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமை யிலான போலீசார் விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.






