என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சங்கருக்கும் இவரது அண்ணன் கார்த்திக்குக்கும் சொத்து பாகப்பிரிவினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • இருவரும் சேர்ந்து கார்த்தியின் மனைவி சத்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அண்ணா நகரில் வசிப்பவர் ராமலிங்கம் மகன் சங்கர்( வயது 35). இவருக்கும் இவரது அண்ணன் கார்த்திக்குக்கும் சொத்து பாகப்பிரிவினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கார்த்தி, அவரது தம்பி ராஜீவ்காந்தி, கார்த்தியின் மனைவி சத்தியா, ராஜீவ் காந்தியின் மனைவி பிரியா ஆகிய 4 பேரும் சேர்ந்து சங்கரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    அதேபோல் சங்கர் மற்றும் அவரது தந்தை ராமலிங்கம் இருவரும் சேர்ந்து கார்த்தியின் மனைவி சத்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சங்கர் மற்றும் சத்யா ஆகியோர் தனித்தனியாக கொடுத்த இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட திருக்கோவிலூர் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த6 பேர் மீது 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும், விவாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2-ம் காலாண்டிற்கான ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது,

    மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தவறுடையதாக கருதப்படும் வழக்குகளின் விசாரனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தற்போது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத வழக்குகள், நீதிமன்ற விசா ரணை நிலுவை வழக்குகள், பிழையுடையதாக கருதப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு விவாதிக்கப்பட்டது. அனைத்து வழக்குகளின் மீதும் விசாரணைகள் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவிகள் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும், ஆதிதிராவிட மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பாகவும், மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும், விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் வன்கொடுமை அதிக அளவில் நடைபெறும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறும், பட்டியலின மக்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நடவடி க்கைகள் மேற்கொள்ளவும், இக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியதன்படி, நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்பு டைய அலுவலர்கள், காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரமேஷ், மனோஜ்குமார், மகேஷ் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சம்பத் அவரது பாட்டி வீட்டில் சம்பத் தூங்கினார்.
    • பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பத் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பேரால் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் சம்பத்(வயது35) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பழைய சிறுவங்கூரில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு அவரது பாட்டி வீட்டில் சம்பத் தூங்கினார். மறுநாள் காலையில் சம்பத் மயங்கிய நிலையில் கிடந்ததாக தொிகிறது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பத் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை செய்து வருகின்றனர்.

    • முரளிபாபு கூலித் தொழிலாளி திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • மனமுடைந்த முரளிபாபு வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்தவர் முரளிபாபு (வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முரளிபாபுவிற்கும் அவரது மனைவி அஷ்டலட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் அஷ்டலட்சுமி கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனால் மனமுடைந்த முரளிபாபு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முரளிபாபுவின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
    • 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு தமிழ்நாடு அரசு செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புகைப்பட கண்காட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்த ப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகளையும் 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    • மாதையன் பால் சீலிங் வேலை செய்து வந்தார்.
    • எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மாதையன் (வயது 42). பால் சீலிங் வேலை செய்து வந்தார். இவர் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 26-ந்தேதி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • புனித அந்தோணியார் திருவிழாவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் மாலை 6 மணி அளவில் சென்றுள்ளார் .
    • சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் அருண்குமார் (வயது 32 ) கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி மேல் நாரியப்பனூரில் உள்ள புனித அந்தோணியார் திருவிழாவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் மாலை6 மணி அளவில் சென்றுள்ளார் . ராயப்பனூர் செல்லும் சாலையில் உள்ள சுடுகாட்டு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திருவிழாவிற்கு சென்று உள்ளார்.

    பின்னர் மீண்டும் இரவு 11 மணி அளவில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து தருமாறு அருண்குமார் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் மகன் குமரேசன் (வயது 29) பெருமாள் மகன் செந்தில்குமார் (வயது 39 )ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 3 வீடுகளில் விபசாரம் நடைபெறுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டை சேர்ந்த துரை என்பவரையும் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மயிலாம்பாறை, பொய்குணம் சாலை ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகே உள்ள 3 வீடுகளில் விபசாரம் நடைபெறுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்ம ஜோதி, ஜெயமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் தகவல் கிடைக்க பெற்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது 3 பெண்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து, செல்போன் மூலம் வாடிக்கை யாளர்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 3 வீடுகளில் இருந்த 8 அழகிகள் மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளரான சங்கராபுரம் அடுத்த சோழம் பட்டை சேர்ந்த துரை (43) என்பவரையும் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • ஜரினாபீயிடம் சலிமா ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
    • சலிமா மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் தேவபாண்டலம் வந்து ஜரினாபீயை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தை சேர்ந்தவர் கமருதீன் மனைவி ஜரினாபீ (வயது51). இவரின் உறவினரான தியாகதுருகம் அன்சர் மனைவி சலிமா (வயது42) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜரினாபீ செல்போன் மூலம் சலிமாவிடம் வாங்கிய கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சலிமா மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் தேவபாண்டலம் வந்து ஜரினாபீயை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சலீமா, நிஷா ஆகியோர் மீது சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சமய அறநிலைய துறையினர் சரிவர கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
    • அது குறித்து கேட்டால். கேள்வி கேட்கும் நபர்களை சிலர் கூட்டாக சேர்ந்து அடித்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே எலவடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் கடந்த 10 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மாரியம்மன் கோவிலுக்கு உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் வேண்டுதலின் பெயரில் சாமிக்கு தங்க நகைகள் நன்கொடையாக பல ஆண்டுகளாக செலுத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.இந்தக் கோவிலை இந்து சமய அறநிலைய துறையினர் சரிவர கண்டு கொள்ளாமல் இருப்பதால் இந்த கோவி லுக்கு அறங்காவலர்கள் போன்று செயல்படும் சிலர் அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்த தங்கத்திலான தாலி, தாலிக்கொடி, ஒட்டியானம் போன்ற நகைகளை வெளியில் எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரூ.9 லட்சத்திற்கு கோவில் நகைகள் விற்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

    இப்படி இந்த கோவில் நிர்வாகத்தில் சிலர் தலையிட்டு முறைகேடு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதைக் கண்ட சிலர் அது குறித்து கேட்டால். கேள்வி கேட்கும் நபர்களை சிலர் கூட்டாக சேர்ந்து அடித்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த நபர்கள் கோவில் உண்டியலில் சேரும் ரொக்க பணம் மற்றும் கோவில் நிலம் ஆகியவற்றையும் முறைகேடாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றால் அவர்கள் இது குறித்து கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக சிலர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து சின்னசேலம் வட்ட இந்து சமய அறநிலைய த்துறையினரிடம் கேட்டபோது சின்னசேலம் வட்டத்தில் 145 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது அவைகளை கண்காணித்து நிர்வகிக்க சிரமமாக உள்ளது என கூறி வருகின்றனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிட்டு எலவடி கிராமத்தில் புற்று மாரியம்மன் கோவிலில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுபிடித்து கோவில் உடைமைகளை மீண்டும் கோவிலுக்கே வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • வீட்டின் அருகில் உள்ள ஓடை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சிக்கினார்.
    • குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சிமாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(38) அவரது வீட்டின் அருகில் உள்ள ஓடை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சின்ன சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நட வடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், சாராய வியாபாரி ராமச்சந்திரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் , ராமச்சந்திரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நேற்று ராமச்சந்திரனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

    • குப்பைகளை ஏற்றிச்செல்லும் மின்கல சுமை தூக்கும் வாகனங்கள் வழங்கும் விழா நடை பெற்றது.
    • கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ருமான வசந்தம் கார்த்தி கேயன் கலந்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 11 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.2½ லட்சம் மதிப்பில் குப்பைகளை ஏற்றிச்செல் லும் மின்கல சுமை தூக்கும் வாகனங்கள் வழங்கும் விழா நடை பெற்றது. ஒன்றி யக்குழு தலைவர் வடிவுக் கரசி சாமி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சென்னம் மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதி தாசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ருமான வசந்தம் கார்த்தி கேயன் கலந்து கொண்டு மேலப்பழங்கூர், பாக்கம், கடம்பூர் உள்ளிட்ட 11 ஊராட்சி மன்ற தலைவர் களிடம் மின்கல சுமை தூக்கும் வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சி யில் ஊராட்சி மன்ற தலை வர்கள், ஒன்றிய கவுன் சிலர்கள் மற்றும் அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

    ×