

கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அண்ணா நகரில் வசிப்பவர் ராமலிங்கம் மகன் சங்கர்( வயது 35). இவருக்கும் இவரது அண்ணன் கார்த்திக்குக்கும் சொத்து பாகப்பிரிவினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கார்த்தி, அவரது தம்பி ராஜீவ்காந்தி, கார்த்தியின் மனைவி சத்தியா, ராஜீவ் காந்தியின் மனைவி பிரியா ஆகிய 4 பேரும் சேர்ந்து சங்கரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
அதேபோல் சங்கர் மற்றும் அவரது தந்தை ராமலிங்கம் இருவரும் சேர்ந்து கார்த்தியின் மனைவி சத்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சங்கர் மற்றும் சத்யா ஆகியோர் தனித்தனியாக கொடுத்த இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட திருக்கோவிலூர் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த6 பேர் மீது 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.