என் மலர்
கள்ளக்குறிச்சி
- அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.
- சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எருமை மாடுகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இவ்வாறு கேரளாவிற்கு கொண்டு செல்லும் எருமை மாடுகள், லாரிகளில் ஏற்றப்பட்டு நள்ளிரவு நேரங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை கடந்து செல்கிறது.
அதேபோல, இன்று அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.
இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து மகா சபை நிர்வாகிகள் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த லாரிகளை மடக்கி சிறை பிடித்தனர்.
மாடுகள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அதனை பிடித்து வைத்திருப்பதாகவும் புகார் செய்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் 4 லாரிகளையும் சோதனையிட்டனர். லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து லாரிகளை மடக்கி பிடித்த இந்து மகா சபை நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எருமை மாடுகளை சட்ட விரோதமாக கொண்டு சென்றால், அவைகள் கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் லாரி டிரைவர்களிடம் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து இந்து மகா சபா நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் எருமை மாடுகளை கேரளாவிற்கு கொண்டு செல்வதற்கான ஆவணங்களை போலீசாரிடம் லாரி டிரைவர்கள் காட்டினர். இதைத்தொடர்ந்து லாரிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- திருநாவலூர் அருகே மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவாலூர் அருகே உடையனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 40), சோனக்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (49). இவர்கள் அதே ஊரில் மதுபாட்டில் விற்பனை செய்து வந்தனர். இது குறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- கண்ணன் விவசாய நிலத்திற்கு சென்றார்.
- கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 46) விவசாயி. இவர் நேற்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்து மின் மோட்டாரில் மின் வயரை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. அக்கம், பக்கம் விசாரித்ததில் தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் மூர்த்தி (37) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கண்ணன் மின் மோட்டாரில் இருந்து 15 மீட்டர் மற்றும் அதே பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மின் மோட்டாரில் இருந்து 10 மீட்டர் மின்சார வயரை திருடியது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 ஆயிரம் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தனது குடும்பத்துடன் சொந்த காரில் சென்றார்.
- மாமூல் கொடுத்துவிட்டு தான் மண் எடுத்து விற்பனை செய்கிறோம், பர்மீட் இல்லை என்று டிரைவர் பதில் கூறினார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அடுத்த வடபொன்பரப்பியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இங்கு சனிப்பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தனது குடும்பத்துடன் சொந்த காரில் சென்றார். இரவு 7 மணியளவில் சின்னசேலம் ஏரிக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரியில் இருந்து மண்ணை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வெளியில் வந்தது. கலெக்டர் ஷ்ரவன்குமார் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். ஏரியில் இருந்து வந்த லாரியை நிறுத்தி லாரியில் என்ன ஏற்றி வருகிறாய் என்று கேட்டுள்ளார்.
இதற்கு லாரி டிரைவர், ஏரி மண்ணை ஏற்றி வருகிறேன். இதற்கு கலெக்டர் அனமதி எங்கே என்று கேட்டுள்ளார். எல்லோருக்கும் மாமூல் கொடுத்துவிட்டு தான் மண் எடுத்து விற்பனை செய்கிறோம், பர்மீட் இல்லை என்று டிரைவர் பதில் கூறினார். கலெக்டர் ஷ்ரவன்குமார் சம்பவ இடத்திற்கு உடனே வருமாறு தாசில்தார் இந்திரா, சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். இந்த சம்பவம் குறித்து லாரி டிரைவர் உரிமையாளரிடம் போனில் கூறினார். லாரி உரிமையாளரின் உதவியாளர் சதீஷ் அங்கு வந்தார்.
டிரைவர் கணேசன் (வயது 26), சதீஷ் (35) ஆகியோர் கலெக்டர் ஷ்ரவன்கு மாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் 2 பேரையும் பிடித்து சென்றனர். தாசில்தார் இந்திரா லாரியை பறிமுதல் செய்தார். லாரி டிரைவர் கணேசன், சதீஷ் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசனை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏரி மண்ணை திருட்டு த்தனமாக ஏற்றி வந்த டிரைவர், லாரி உரிமையாளரின் உதவியாளர் கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சங்கருக்கும் இவரது அண்ணன் கார்த்திக்குக்கும் சொத்து பாகப்பிரிவினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
- இருவரும் சேர்ந்து கார்த்தியின் மனைவி சத்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அண்ணா நகரில் வசிப்பவர் ராமலிங்கம் மகன் சங்கர்( வயது 35). இவருக்கும் இவரது அண்ணன் கார்த்திக்குக்கும் சொத்து பாகப்பிரிவினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கார்த்தி, அவரது தம்பி ராஜீவ்காந்தி, கார்த்தியின் மனைவி சத்தியா, ராஜீவ் காந்தியின் மனைவி பிரியா ஆகிய 4 பேரும் சேர்ந்து சங்கரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
அதேபோல் சங்கர் மற்றும் அவரது தந்தை ராமலிங்கம் இருவரும் சேர்ந்து கார்த்தியின் மனைவி சத்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சங்கர் மற்றும் சத்யா ஆகியோர் தனித்தனியாக கொடுத்த இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட திருக்கோவிலூர் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த6 பேர் மீது 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
- மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும், விவாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2-ம் காலாண்டிற்கான ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது,
மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தவறுடையதாக கருதப்படும் வழக்குகளின் விசாரனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தற்போது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத வழக்குகள், நீதிமன்ற விசா ரணை நிலுவை வழக்குகள், பிழையுடையதாக கருதப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு விவாதிக்கப்பட்டது. அனைத்து வழக்குகளின் மீதும் விசாரணைகள் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவிகள் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும், ஆதிதிராவிட மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பாகவும், மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும், விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் வன்கொடுமை அதிக அளவில் நடைபெறும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறும், பட்டியலின மக்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நடவடி க்கைகள் மேற்கொள்ளவும், இக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியதன்படி, நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்பு டைய அலுவலர்கள், காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரமேஷ், மனோஜ்குமார், மகேஷ் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சம்பத் அவரது பாட்டி வீட்டில் சம்பத் தூங்கினார்.
- பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பத் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே பேரால் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் சம்பத்(வயது35) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பழைய சிறுவங்கூரில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு அவரது பாட்டி வீட்டில் சம்பத் தூங்கினார். மறுநாள் காலையில் சம்பத் மயங்கிய நிலையில் கிடந்ததாக தொிகிறது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பத் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை செய்து வருகின்றனர்.
- முரளிபாபு கூலித் தொழிலாளி திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
- மனமுடைந்த முரளிபாபு வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்தவர் முரளிபாபு (வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முரளிபாபுவிற்கும் அவரது மனைவி அஷ்டலட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் அஷ்டலட்சுமி கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த முரளிபாபு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முரளிபாபுவின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
- 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு தமிழ்நாடு அரசு செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புகைப்பட கண்காட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்த ப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகளையும் 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
- மாதையன் பால் சீலிங் வேலை செய்து வந்தார்.
- எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மாதையன் (வயது 42). பால் சீலிங் வேலை செய்து வந்தார். இவர் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 26-ந்தேதி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- புனித அந்தோணியார் திருவிழாவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் மாலை 6 மணி அளவில் சென்றுள்ளார் .
- சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் அருண்குமார் (வயது 32 ) கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி மேல் நாரியப்பனூரில் உள்ள புனித அந்தோணியார் திருவிழாவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் மாலை6 மணி அளவில் சென்றுள்ளார் . ராயப்பனூர் செல்லும் சாலையில் உள்ள சுடுகாட்டு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திருவிழாவிற்கு சென்று உள்ளார்.
பின்னர் மீண்டும் இரவு 11 மணி அளவில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து தருமாறு அருண்குமார் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் மகன் குமரேசன் (வயது 29) பெருமாள் மகன் செந்தில்குமார் (வயது 39 )ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 3 வீடுகளில் விபசாரம் நடைபெறுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டை சேர்ந்த துரை என்பவரையும் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மயிலாம்பாறை, பொய்குணம் சாலை ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகே உள்ள 3 வீடுகளில் விபசாரம் நடைபெறுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்ம ஜோதி, ஜெயமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் தகவல் கிடைக்க பெற்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 3 பெண்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து, செல்போன் மூலம் வாடிக்கை யாளர்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 3 வீடுகளில் இருந்த 8 அழகிகள் மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளரான சங்கராபுரம் அடுத்த சோழம் பட்டை சேர்ந்த துரை (43) என்பவரையும் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






