மண் கடத்திய வழக்கில் பா.ம.க. பிரமுகர் உள்பட மேலும் 2 பேர் கைது

கடந்த சனிக்கிழமை சட்ட விரோதமாக மண் கடத்தி வந்த லாரியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக மடக்கிப்பிடித்தார்.பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மண் கடத்திய வழக்கில்  பா.ம.க. பிரமுகர் உள்பட மேலும் 2 பேர் கைது
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மறவா நத்தம் ஏரியில் கடந்த சனிக்கிழமை சட்ட விரோதமாக மண் கடத்தி வந்த லாரியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக மடக்கிப்பிடித்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோரிடம் மண் கடத்தி வந்த லாரியையும் சம்பந்தப்பட்டவர்களையும் ஒப்படைத்தார். இது குறித்து மறவா நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் சூரிய பிரகாஷ், சதீஷ்குமார், வரதராஜ் ஆகிய 3 பேரையும் சின்னசேலம் போலீசார் அதிரடியாக கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் லாரி உரிமையாளர் மற்றும் பா.ம.க.பிரமுகர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமர் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அைடத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com