என் மலர்
கள்ளக்குறிச்சி
- ரேகா சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
- மணிதேவன் தனது தங்கையை காணவில்லை என தியா கதுருகம் போலீசில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் உதயமா ம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 43), இவரது மகள் ரேகா (22)/ இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து பார்த்த போது இவரை காணவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் மகன் மணிதேவன் (28) என்பவர் தனது தங்கையை காணவில்லை என தியா கதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
- அழகிய கூழாங்கற்களை கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
திருநாவலூர் அருகே பச்சைவேலி கிராமப் பகுதியில் உளுந்தூர்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட அழகிய கூழாங்கற்கள் இருந்தது.இதனையடுத்து லாரி டிரைவரான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 23) என்பவரை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அழகிய கூழாங்கற்களை கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூழாங்கற்கள் கடத்தப்படுவது தொடர்நிகழ்வாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
- தரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
- மன உளைச்சல் ஏற்பட்ட தரணி வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள சேந்தநாடு பகுதியில் சேர்ந்தவர்தர்மலிங்கம். இவரது மனைவி சிவரஞ்சனி. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது மகள் தரணி (வயது 14)அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய அம்மாசிவரஞ்சனிதண்ணீர் பிடிக்க சொன்னதாக தெரிகிறது. இதனை தரணிமறுத்ததால் அவருடைய தாய் திட்டியதாக தெரிகிறது.
இதில் மன உளைச்சல் ஏற்பட்ட தரணி வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் ராமதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தரணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாநில அளவிலான போட்டி கள் நடத்தி பரிசுக ளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்கப்படுத்த உத்தரவி ட்டுள்ளார்.
- காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழ ங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை விளையாட்டு துறைகளில் முதன்மை மாநிலமாக கொண்டு வருத ற்கான தொடர் நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி என்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி, இதன் மூலம் வெற்றி பெறுவோர்களுக்கு மாநில அளவிலான போட்டி கள் நடத்தி பரிசுக ளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்கப்படுத்த உத்தரவி ட்டுள்ளார்.
இந்த போட்டிகள் மாற்றுத்திறனாளிகளு க்கான பிரிவு, அரசு ஊழியர்களுக்கான பிரிவு, பொதுமக்களுக்கான பிரிவு, பள்ளி மாணவர்களுக்கான பிரிவு, கல்லூரி மாணவர்க ளுக்கான பிரிவு என 5 பிரிவின்கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி களில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க ப்பட்டது.
இதேபோல் கள்ளக்குறி ச்சி மாவட்டத்தில் முதல மைச்சர் கோப்பை போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பிரிவில் 534 மாணவர்களும், கல்லூரி மாணவர்கள் பிரிவில் 174 மாணவர்களும், பொது பிரிவில் 227 நபர்களும், அரசு ஊழியர்கள் பிரி வில் 182 நபர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 70 நபர்களும் என மொத்தம் 1,187 நபர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். இவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசு 406 நபர்க ளுக்கு ரூ 3,000 வீதம் ரூ.12,18,000, 2-ம் பரிசு 403 நபர்களுக்கு ரூ 2,000 வீதம் ரூ. 8,06,000, 3-ம் பரிசு 378 நபர்களுக்கு ரூ.1,000 வீதம் ரூ. 3,78,000 என மொத்தம் 1,187 நபர்களுக்கு ரூ. 24,02,000-த்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழ ங்கப்பட்டது. இதனால் 1,187 நபர்கள் பயனடை ந்துள்ளனர்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டதிலிருந்து மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு பள்ளி மாணவர்கள் பிரிவில் 193 மாணவ மாணவியர்களும், கல்லூரி மாணவர்கள் பிரிவில் 63 மாணவ மாணவியர்களும், பொதுமக்கள் பிரிவில் 80 நபர்களும், அரசு ஊழியர்கள் பிரிவில் 62 நபர்களும், மாற்றுத்திறனாளி பிரிவில் 39 நபர்களும் என மொத்தம் 437 நபர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவி லான போட்டியில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு நன்றியை தெரிவி த்துள்ளனர். இவ்வாறு மாவட்ட கலெ க்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
- நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
- மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மூக்கனூர் அனந்தாங்கல் ஏரியில் 3 பேர் 2 டிராக்டர்களில் கடத்துவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். இதைபார்த்த காவலர்கள், அங்கு விரைந்து சென்று, மண் கடத்தியதாக புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த டிரைவர்கள் மணிகண்டன்(25), சிவா(25), உலகுடையாம்பட்டை சேர்ந்த மாதேஷ்(20) ஆகியோரை காவலர்கள் கைது செய்து, மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாகனங்களின் உரிமையாளர்கள் மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி, மதியழகன், பன்னீர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சின்னசேலம் அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
- கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது65) இவரது மனைவி செல்லம்மாள் (59) . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதில் இளைய மகன் கோவிந்தராஜ் சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தபோது நயினார் பாளையம் அருகே உள்ள ஈரியூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய கோவிந்தராஜ், செல்வத்துடன் சேர்ந்து 2020 ஆம் ஆண்டு 17 லட்சத்திற்கு நெல் அறுவடை எந்திரம் வாங்கி தொழில் செய்து வந்துள்ளனர். அப்போது 17 லட்சம் ரூபாயை செல்வம் 8 1/2 லட்சம் ரூபாயும், கோவிந்தராஜ் 8 1/2 ரூபாயும் கடனாக பிரித்துக் கொண்டனர்.
இந்நிலையில் செல்வத்திடம் இருந்த நெல் அறுவடை எந்திரத்தை கோவிந்தராஜ் மேலூரில் உள்ள தனது வீட்டில் நிறுத்திக் கொண்டார் என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் செல்வம் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் நெல் அறுவடை எந்திரத்தை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் நேற்று கோவிந்தராஜ் மற்றும் அவரது தந்தை ரங்கன், தாயார் செல்லம்மாள் ஆகியோரை அழைத்து விசாரித்துள்ளனர்.
அதன்பின்பு செல்வம் மீது கோவிந்தராஜ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனு மீது இரு தரப்பினருக்கும் இன்று விசாரணை செய்யப்படுவதாக இருந்த நிலையில் நேற்று இரவு ரங்கன் அவரது மனைவி செல்லம்மாள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவரது உடலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவரும் மகன் வாங்கிய கடனுக்காக மன உளைச்சலால் இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 100-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் உளுந்தூர்பேட்டைக்கு சென்று கல்வி பயின்று செல்கின்றனர்.
- தங்கள் கிராமத்திற்கு என்று தனி அரசு பஸ் பள்ளி நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே ஊ செல்லூர் கிராமத்தில் சுமார் 1000-திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் உளுந்தூர்பேட்டைக்கு சென்று கல்வி பயின்று செல்கின்றனர். தடம் எண் 35 அரசு பஸ்சில் மாணவர்கள் எந்தவித சிரமமும் இன்றி பள்ளிக்குச் சென்று வந்தனர்.
இந்நிலையில் சில நாட்களாக குறிப்பிட்ட அரசு பஸ் அந்த ஊருக்கு செல்லவில்லை என தெரிகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊ செல்லூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இன்று அரசு பஸ்ஸை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்திற்கு என்று தனி அரசு பஸ் பள்ளி நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஒரு வாரத்தில் தனி அரசு பஸ் ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
- போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்யன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக குடிபோதையில் வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து வந்தது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
- கொசுப்புழு ஒழிப்பு முகாம் மற்றும் டயர்கள் அப்புறப்படுத்தும் முகாம் நடைபெற்றது.
- டெங்கு கொசுப்புழு உருவாகும் இடம், வீட்டை சுற்றி தூய்மை யாக வைத்து கொள்ளவேண்டும் .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பொது சுகாதார துறையின் துணை இயக்குநர் ராஜா உத்தரவின் பேரில் ரிஷிவந்தியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரிஷிவந்தியம் மற்றும் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் கொசுப்புழு ஒழிப்பு முகாம் மற்றும் டயர்கள் அப்புறப்படுத்தும் முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் தீபிகா தலைமையில் நடைபெற்ற முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் தெய்வீகன், குமாரசாமி, பிரசாந்த், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் டயர்கள் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், ஊராட்சி துப்பரவு பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டு டெங்கு கொசுப்புழு உருவாகும் இடம், வீட்டை சுற்றி தூய்மை யாக வைத்து கொள்ளவேண்டும், காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்து வாங்கி சாப்பிட கூடாது என அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கினார்கள்.
- காவல்துறையினர் பயன்ப டுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும்.
- வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை முடித்து 60 நாட்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் இமைகள் திட்டம் குறித்த விழப்புணர்வு தொட க்கவிழா நிகழ்ச்சி நடைபெ ற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கி பேசிய தாவது:-
பெண் குழந்தைகளை கண் இமைபோல் பாதுகாக்க இமைகள் எனும் மகத்தான திட்டம் தொடங்கப்ப ட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் தலா 50 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை மாவட்ட காவல் அலுவலக த்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் பயன்ப டுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும். பெண் குழந்தைகள் ஒவ்வொருவ ரிடமும் பெண் காவல்துறை யினர் நட்பாக பழகி அவர்களுக்கு பொதுவெ ளியிலோ அல்லது பள்ளி களிலோ ஏதேனும் பாலியல் தொந்தரவு உள்ளதா என்று அறிந்து கொள்ள அறிவுறு த்தபட்டுள்ளது. ஏதேனும் பிரச்சனைகள் அவர்களுக்கு இருந்தால் அதை பெண் காவல்துறையினர் அறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பொதுமக்க ளிடையே காவல்துறையினர் கலந்துரையாடல், தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளை காவல்துறை என்றும் கண் இமைபோல் காக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார். காவல்துறையினரிடம் பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது, அதைச் சார்ந்த சட்டங்கள் பற்றியும், வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை முடித்து 60 நாட்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு தொகை மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்வதுடன் குற்றம் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளுவது குறித்தும் ஆலோ சனை வழங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிர ண்டுகள் ஜவஹர்லால், மணிகண்டன், சங்கர் மற்றும் அனைத்து உட்கோ ட்ட துணை போலீஸ் சூப்பிர ண்டு அனைத்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கலந்து கொண்டனர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார அறிவுறுத்தினார்.
- 85 ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் சுமார் 2,322 பழைய டயர்கள் அகற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி, ஜூலை.5-
தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு, கொசுப்புழு உற்பத்தி ஆகாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார அறிவுறுத்தினார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் பழைய டயர்களை கண்டறிந்து அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் சுகாதாரத்துறையுடன், கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் இணைந்து 85 ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் சுமார் 2,322 பழைய டயர்கள் அகற்றப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலக்டர் கூறியதாவது:-
பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறத்திலும் மழைநீர் தேங்காவண்ணம், தொட்டிகள், உடைந்த மண்பாண்டங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உரல்கள் போன்றவற்றை அகற்றியும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து, டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து முன்னெ ச்சரி க்கை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்கள் காய்ச்சல் என்றால் தாமாகவே கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் தேவையான ரத்த பரிசோதனைகளை செய்து கொண்டு, காய்ச்சலுக்கான முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- மணிகண்டன் மோட்டார் மெக்கானிக். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் மகன் கோவிந்தன் பணம் தர வேண்டியிருந்தது.
- கிராம மக்கள் ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டு, நடந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் மணிகண்டன் (வயது 29). மோட்டார் மெக்கானிக். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் மகன் கோவிந்தன் (40) பணம் தர வேண்டியிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு வந்த மணிகண்டன், கோவிந்தனிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர், காலையில் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பேனாக்கத்தியால் கோவிந்தனின் முகத்தில் கிழிந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கோவிந்தனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருந்தபோதும் மணிகண்டன் பேனாக்கத்தியை காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளார். அவரை பிடித்த கிராம மக்கள் ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டு, நடந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனால் பயந்து போன மணிகண்டன், கையில் வைத்திருந்த பேனாக்கத்தியால், கழுத்தை குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






