என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complaint to the police"

    • ஜெயப்பிரியா திருநாவலூர் அன்னை தெரசா கல்லூரியில் என்ஜினியரிங் படித்து முடித்து வீட்டில் இருந்தார்.
    • இரவு 11மணி அளவில்வீட்டிலிருந்து திடீரென்று காணாமல் போனார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் புதுதெரு மகாலிங்கம் இவரது மகள் ஜெயப்பிரியா (23) இவர்,திருநாவலூர் அன்னை தெரசா கல்லூரியில் என்ஜினியரிங் படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (11ம்தேதி) இரவு 11மணி அளவில்வீட்டிலிருந்து திடீரென்று காணாமல்போனார். பல இடங்களில் தேடி எங்கும கிடைக்தாததால் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் இவரது அண்ணன் பிரகாஷ் புகார் கொடுத்தார்.புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவுசெய்து தீவிரமாக தேடி வருகிறார்.

    • ரேகா சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • மணிதேவன் தனது தங்கையை காணவில்லை என தியா கதுருகம் போலீசில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் உதயமா ம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 43), இவரது மகள் ரேகா (22)/ இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து பார்த்த போது இவரை காணவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் மகன் மணிதேவன் (28) என்பவர் தனது தங்கையை காணவில்லை என தியா கதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×