என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • பாண்டியனுக்கும் வாஞ்சிநாதனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • பாண்டியன் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது68) விவசாயி. இவருக்கும், இவரது மகன் வாஞ்சிநாதன்(39) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியன் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பாண்டியன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சங்கராபுரம் சிறப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • வெங்கடேசன் வீட்டின் முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க தரைத்தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினார்.
    • எதிர்பாராதவிதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெங்கடேசன் மீது விழுந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடசெட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53) கட்டிட தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க தரைத்தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெங்கடேசன் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் இடிபாடுகளை அகற்றி பலியான வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மனைவி குமுதவள்ளி கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
    • 5 கடைகளில் இருந்து ரூ.500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள கடைகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ராஜா உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பாசில், அன்பரசன், சந்திரன் வள்ளி மற்றும் ஊழியர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து அரசம்பட்டு கிராமத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளின் உரிமை யாளர்க ளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். இந்த சோதனை யில் மொத்தம் 5 கடைகளில் இருந்து ரூ.500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • செலின்மேரி வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
    • ஒரு மரத்தில் செலின்மேரி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    சங்கராபுரம் அருகே மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் பத்தியநாதன் மனைவி செலின்மேரி (வயது46). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் செலின்மேரி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இது குறித்து வடபொன்பரப்பி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செலின்மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்கு றிச்சி அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு ப்பதிவு செய்து அவரது தற்கொ லைக்கான காரணம் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

    • ரேகா சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • மணிதேவன் தனது தங்கையை காணவில்லை என தியா கதுருகம் போலீசில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் உதயமா ம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 43), இவரது மகள் ரேகா (22)/ இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து பார்த்த போது இவரை காணவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் மகன் மணிதேவன் (28) என்பவர் தனது தங்கையை காணவில்லை என தியா கதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • அழகிய கூழாங்கற்களை கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே பச்சைவேலி கிராமப் பகுதியில் உளுந்தூர்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட அழகிய கூழாங்கற்கள் இருந்தது.இதனையடுத்து லாரி டிரைவரான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 23) என்பவரை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அழகிய கூழாங்கற்களை கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூழாங்கற்கள் கடத்தப்படுவது தொடர்நிகழ்வாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • மன உளைச்சல் ஏற்பட்ட தரணி வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள சேந்தநாடு பகுதியில் சேர்ந்தவர்தர்மலிங்கம். இவரது மனைவி சிவரஞ்சனி. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது மகள் தரணி (வயது 14)அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய அம்மாசிவரஞ்சனிதண்ணீர் பிடிக்க சொன்னதாக தெரிகிறது. இதனை தரணிமறுத்ததால் அவருடைய தாய் திட்டியதாக தெரிகிறது.

    இதில் மன உளைச்சல் ஏற்பட்ட தரணி வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் ராமதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தரணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாநில அளவிலான போட்டி கள் நடத்தி பரிசுக ளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்கப்படுத்த உத்தரவி ட்டுள்ளார்.
    • காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழ ங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை விளையாட்டு துறைகளில் முதன்மை மாநிலமாக கொண்டு வருத ற்கான தொடர் நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி என்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி, இதன் மூலம் வெற்றி பெறுவோர்களுக்கு மாநில அளவிலான போட்டி கள் நடத்தி பரிசுக ளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்கப்படுத்த உத்தரவி ட்டுள்ளார்.

    இந்த போட்டிகள் மாற்றுத்திறனாளிகளு க்கான பிரிவு, அரசு ஊழியர்களுக்கான பிரிவு, பொதுமக்களுக்கான பிரிவு, பள்ளி மாணவர்களுக்கான பிரிவு, கல்லூரி மாணவர்க ளுக்கான பிரிவு என 5 பிரிவின்கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி களில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க ப்பட்டது.

    இதேபோல் கள்ளக்குறி ச்சி மாவட்டத்தில் முதல மைச்சர் கோப்பை போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பிரிவில் 534 மாணவர்களும், கல்லூரி மாணவர்கள் பிரிவில் 174 மாணவர்களும், பொது பிரிவில் 227 நபர்களும், அரசு ஊழியர்கள் பிரி வில் 182 நபர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 70 நபர்களும் என மொத்தம் 1,187 நபர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். இவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசு 406 நபர்க ளுக்கு ரூ 3,000 வீதம் ரூ.12,18,000, 2-ம் பரிசு 403 நபர்களுக்கு ரூ 2,000 வீதம் ரூ. 8,06,000, 3-ம் பரிசு 378 நபர்களுக்கு ரூ.1,000 வீதம் ரூ. 3,78,000 என மொத்தம் 1,187 நபர்களுக்கு ரூ. 24,02,000-த்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழ ங்கப்பட்டது. இதனால் 1,187 நபர்கள் பயனடை ந்துள்ளனர்.

    மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டதிலிருந்து மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு பள்ளி மாணவர்கள் பிரிவில் 193 மாணவ மாணவியர்களும், கல்லூரி மாணவர்கள் பிரிவில் 63 மாணவ மாணவியர்களும், பொதுமக்கள் பிரிவில் 80 நபர்களும், அரசு ஊழியர்கள் பிரிவில் 62 நபர்களும், மாற்றுத்திறனாளி பிரிவில் 39 நபர்களும் என மொத்தம் 437 நபர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவி லான போட்டியில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு நன்றியை தெரிவி த்துள்ளனர். இவ்வாறு மாவட்ட கலெ க்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மூக்கனூர் அனந்தாங்கல் ஏரியில் 3 பேர் 2 டிராக்டர்களில் கடத்துவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். இதைபார்த்த காவலர்கள், அங்கு விரைந்து சென்று, மண் கடத்தியதாக புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த டிரைவர்கள் மணிகண்டன்(25), சிவா(25), உலகுடையாம்பட்டை சேர்ந்த மாதேஷ்(20) ஆகியோரை காவலர்கள் கைது செய்து, மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாகனங்களின் உரிமையாளர்கள் மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி, மதியழகன், பன்னீர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது65) இவரது மனைவி செல்லம்மாள் (59) . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் இளைய மகன் கோவிந்தராஜ் சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தபோது நயினார் பாளையம் அருகே உள்ள ஈரியூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய கோவிந்தராஜ், செல்வத்துடன் சேர்ந்து 2020 ஆம் ஆண்டு 17 லட்சத்திற்கு நெல் அறுவடை எந்திரம் வாங்கி தொழில் செய்து வந்துள்ளனர். அப்போது 17 லட்சம் ரூபாயை செல்வம் 8 1/2 லட்சம் ரூபாயும், கோவிந்தராஜ் 8 1/2 ரூபாயும் கடனாக பிரித்துக் கொண்டனர்.

    இந்நிலையில் செல்வத்திடம் இருந்த நெல் அறுவடை எந்திரத்தை கோவிந்தராஜ் மேலூரில் உள்ள தனது வீட்டில் நிறுத்திக் கொண்டார் என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் செல்வம் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் நெல் அறுவடை எந்திரத்தை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் நேற்று கோவிந்தராஜ் மற்றும் அவரது தந்தை ரங்கன், தாயார் செல்லம்மாள் ஆகியோரை அழைத்து விசாரித்துள்ளனர்.

    அதன்பின்பு செல்வம் மீது கோவிந்தராஜ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனு மீது இரு தரப்பினருக்கும் இன்று விசாரணை செய்யப்படுவதாக இருந்த நிலையில் நேற்று இரவு ரங்கன் அவரது மனைவி செல்லம்மாள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவரது உடலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவரும் மகன் வாங்கிய கடனுக்காக மன உளைச்சலால் இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 100-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் உளுந்தூர்பேட்டைக்கு சென்று கல்வி பயின்று செல்கின்றனர்.
    • தங்கள் கிராமத்திற்கு என்று தனி அரசு பஸ் பள்ளி நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே ஊ செல்லூர் கிராமத்தில் சுமார் 1000-திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் உளுந்தூர்பேட்டைக்கு சென்று கல்வி பயின்று செல்கின்றனர். தடம் எண் 35 அரசு பஸ்சில் மாணவர்கள் எந்தவித சிரமமும் இன்றி பள்ளிக்குச் சென்று வந்தனர். 

    இந்நிலையில் சில நாட்களாக குறிப்பிட்ட அரசு பஸ் அந்த ஊருக்கு செல்லவில்லை என தெரிகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊ செல்லூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இன்று அரசு பஸ்ஸை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்திற்கு என்று தனி அரசு பஸ் பள்ளி நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஒரு வாரத்தில் தனி அரசு பஸ் ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
    • போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்யன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக குடிபோதையில் வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து வந்தது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறிய 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

    ×