search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The wall collapsed"

    • வெங்கடேசன் வீட்டின் முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க தரைத்தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினார்.
    • எதிர்பாராதவிதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெங்கடேசன் மீது விழுந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடசெட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53) கட்டிட தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க தரைத்தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெங்கடேசன் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் இடிபாடுகளை அகற்றி பலியான வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மனைவி குமுதவள்ளி கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் பலத்தமழை பெய்தது.
    • இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர்.

    கடலூர்:  

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள டி.புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். அவரது மனைவி நிர்மலா (வயது 49). இவர்களது மகன் அய்யப்பன். கடந்த சில நாட்களாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் பலத்தமழை பெய்தது. இதன் காரண மாக சோமசுந்தரத்தின் வீடு மழையில் நனைந்திருந்தது. சம்பவத்தன்று சோமசுந்தரம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.

    அப்போது கனமழை காரணமாக வீட்டுசுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் இடிபாடு களுக்குள் சிக்கினர். அவர்கள் வேதனையால் அலறிதுடித்தனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ள வர்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா நேற்று நள்ளிரவு இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து டி.புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×