என் மலர்
நீங்கள் தேடியது "Mysterious Corpse"
- பசுபதி ஊருக்கு புறப்பட்டு வருவதாக பசுபதி, அவரது மனைவியிடம் செல்போனில் கூறினார்.
- ஆஸ்பத்தி ரிக்கு செல்ல பசுபதி யின் மனைவி அறிவுறுத்தி யுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அடுத்த வரஞ்சரம் பகுதியை சேர்ந்த வர் பச்சையப்பன் என்ற பசுபதி (வயது 37). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். வெளி மாநி லங்களுக்கு லோடு ஏற்றிச் செல்லும் பச்சை யப்பன், 15 அல்லது 25 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார். நேற்று மாலை ஊருக்கு புறப்பட்டு வருவதாக பசுபதி, அவரது மனைவியிடம் செல்போனில் கூறினார். தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு, நெஞ்சு வலிப்பதாக பசுபதி மனை விடம் கூறியுள்ளார். அருகில் உள்ள ஆஸ்பத்தி ரிக்கு செல்ல பசுபதி யின் மனைவி அறிவுறுத்தி யுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தியாகதுருகம் அருகே உள்ள வேளாக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரையில் பசுபதி மர்மமான முறை யில் இறந்து கிடந்தார். அதனை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பசுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக் குறிச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பசுபதி கால் கழுவ வந்த போது மாரடைப்பால் இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து வீசி சென்றனரா? என்பன போன்ற பல்வேறு கோணங் களில் விசாரணை நடததி வருகின்றனர்.






