என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • 2 குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே குரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 41). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காசிவேலின் மகன் இறந்தது தொடர்பாக 2 குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பாலு, அவரது மனைவி இந்திரா, ஹரிணி மற்றும் அவரது உறவினர் பாலாஜி ஆகியோர் வெளியில் சென்று தனது வீட்டிற்கு சென்றனர். அப்போது எதிரில் வந்த காசிவேல், அவரது மனைவி லட்சுமி, உறவினர்கள் சின்னமணி, மஞ்சுளா ஆகியோர் இவர்களை வழிமறித்தனர். அவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பாலு மனைவி இந்திரா (32) கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமரவேல் தனது மோட்டார் சைக்கிைள வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார்.
    • அதை மர்மநபர் யாரோ திருடிச்சென்றது தெரிந்தது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம் பராம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல்(46). இவர் தனது மோட்டார் சைக்கிைள வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிைள காணவில்லை. அதை மர்மநபர் யாரோ திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிைள திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்.

    • கோவில் பின்புறம் வைத்து உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
    • சி.சி.டி.வி. கேமரவை மேலே திருப்பி விட்டு விட்டு ஹார்டு டிஸ்கை மட்டும் திருடி சென்றுள்ளனர்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து நயினார் பாளையம் செல்லும் சாலையில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இரவு சென்ற மர்ம நபர்கள் உண்டியலை தூக்கிச் சென்று கோவில் பின்புறம் வைத்து உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். கோவில் கருவறை பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி. ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகம் சின்னசேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், தனிபிரிவு போலீஸ்காரர் கணேசன் ஆகியோர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணியானது 3 நாட்களுக்கு முன்பு தான் நடைபெற்றதால் பெரிய அளவில் பணம் திருட்டு போகாமல் தப்பியது என்றும், அதனால் உண்டியலில் 300 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் சி.சி.டி.வி. கேமரவை மேலே திருப்பி விட்டு விட்டு ஹார்டு டிஸ்கை மட்டும் திருடி சென்றுள்ளனர் என்றும் கோவில் உள்ளே இருந்த சாமி நகைகள், வெண்கல சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது ஆனால் திருடர்கள் குறி வைத்து ஹார்ட் டிஸ்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர் எனமுதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • வெங்கடேசன் சொந்த வேலை காரணமாக எலவனாசூர் கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் வெங்கடேசன் (வயது 39) இவர் நேற்று சொந்த வேலை காரணமாக தனது மனைவி நிவாஷினி மற்றும் குழந்தை பிரகதீஸ்வரன் ஆகியோருடன் எலவனாசூர் கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் வேலை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்பொழுது தியாகை பெரியநாயகி அம்மன் கோவில் அருகே சென்றபோது தனக்கு முன்னாள் சென்ற டிராக்டரை முந்தி சென்றார். அப்போது டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி நிவாஷினி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • குளத்தூர்,புதுப்பாலப்பட்டு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
    • 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 31 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ேபாலீஸ் சப்- இன்ஸ்ரபெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர், புதுப் பாலப்பட்டு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த சி.ஏழுமலை(41), ஆர்.ஏழு மலை (42), புதுப்பாலப் பட்டு கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 31 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • 3 சென்ட் நிலத்தை சகாதேவன் செல்விக்கு இன்னும் அளந்து தரவில்லை
    • புகார் அளிக்கப்பட்டு அதுவும் விசாரணையில் இருந்து வருகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இருசன் மனைவி செல்வி (வயது 41), இவர் அதே நாகக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவனிடம் 10 சென்ட் நிலம் கிரையம் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் 3 சென்ட் நிலத்தை சகாதேவன் செல்விக்கு இன்னும் அளந்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக செல்வி, சகாதேவன் குடும்பத்தினரிடம் தனக்கு சேர வேண்டிய நிலத்தை கொடுக்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    இதனால் எழுந்த பிரச்சனையில் சின்ன சேலம்போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதுவும் விசாரணையில் இருந்து வருகிறது. இதற்கிடையில் செல்விக்கு சேர வேண்டிய இடத்தில் சகாதேவன் குடும்பத்தினர் கல், மண் கொட்டி உள்ளனர். அதைப் பார்த்து செல்வி ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டபோது கோபம் அடைந்த சகாதேவன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சகாதேவன் மகன் மணிகண்டன் இவரது மனைவி கலையரசி சகாதேவனின் மனைவி அங்கம்மாள் மற்றும் உறவினர்கள் ராஜேந்திரன், விண்ணம்மாள், மணிவேல், செல்வம், மணிமாறன், சகாதேவன், பார்த்தசாரதி, வெங்கடேசன், பாஞ்சாலை, சங்கர், உள்ளிட்ட 13 பேர் செல்வியிடம் தகராறு செய்து அசிங்கமாக திட்டி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து செல்வி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சின்ன சேலம் போலீசார் செல்வியை தாக்கிய 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பசுபதி ஊருக்கு புறப்பட்டு வருவதாக பசுபதி, அவரது மனைவியிடம் செல்போனில் கூறினார்.
    • ஆஸ்பத்தி ரிக்கு செல்ல பசுபதி யின் மனைவி அறிவுறுத்தி யுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அடுத்த வரஞ்சரம் பகுதியை சேர்ந்த வர் பச்சையப்பன் என்ற பசுபதி (வயது 37). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். வெளி மாநி லங்களுக்கு லோடு ஏற்றிச் செல்லும் பச்சை யப்பன், 15 அல்லது 25 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார். நேற்று மாலை ஊருக்கு புறப்பட்டு வருவதாக பசுபதி, அவரது மனைவியிடம் செல்போனில் கூறினார். தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு, நெஞ்சு வலிப்பதாக பசுபதி மனை விடம் கூறியுள்ளார். அருகில் உள்ள ஆஸ்பத்தி ரிக்கு செல்ல பசுபதி யின் மனைவி அறிவுறுத்தி யுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை தியாகதுருகம் அருகே உள்ள வேளாக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரையில் பசுபதி மர்மமான முறை யில் இறந்து கிடந்தார். அதனை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பசுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக் குறிச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பசுபதி கால் கழுவ வந்த போது மாரடைப்பால் இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து வீசி சென்றனரா? என்பன போன்ற பல்வேறு கோணங் களில் விசாரணை நடததி வருகின்றனர்.

    • ெரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடிபட்டு இறந்துகிடந்தார்.
    • வாலிபர் நீல கலர் ஜீன்ஸ் பேண்ட், ரோஸ் கலர் முழுக்கை சட்டை அணிந்து இருந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா அமையாகரம் அருகே உள்ள ெரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடிபட்டு இறந்துகிடந்தார்.இது குறித்து தகவல் அறிந்த சேலம் ெரயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜெயபால், தலைமை காவலர்கள் பால கிருஷ்ணன், விக்னேஷ், மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயில் மோதி இறந்த வாலிபர் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அந்த வாலிபர் சேலத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் ெரயிலில் அடிபட்டு இருக்கலாம் எனரெயில்வே போலீசார் தெரிவித்தனர். ரெயில் மோதி இறந்த வாலிபர் நீல கலர் ஜீன்ஸ் பேண்ட், ரோஸ் கலர் முழுக்கை சட்டை அணிந்து இருந்தார் எனவும், இடது மற்றும் வலது மார்பு அடியில் இரு பக்கமும் மச்சம் உள்ளதாகவும் தெரிவித்தனர். இது குறித்து சேலம் ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனகராஜ் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் கங்க வல்லி வட்டம் நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (வயது 45). டிராக்டர் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். ஓர்க்ஷாப்பின் வாசலில் டிராக்ட ரை நிறுத்திவிட்டு முன்பக்கமாக நேற்று பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த சாலையில் வந்த வாகனம் டிராக்டரின் பின்னால் மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய கனக ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகின்ற 13-ந் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில கூறி இருப்பதாவது:- கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வருகின்ற 13-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதில் 18 வயது முதல் 26 வயது வரை உள்ளமாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ முடித்துள்ள மாணவர்கள் இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சக்திவேல் பரமசிவம் என்பவரிடம் ஜேசிபி எந்திர டிைரவராக வேலை செய்து வந்தார்.
    • ஜே.சி.பி எந்திர டிரைவர் சக்திவேலை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கூகையூர் போயர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி வள்ளியம்மாள்(வயது 58), கூலிவேலை செய்து வருகின்றனர். இவருக்கு இந்திரா என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். மகளை நைனார் பாளையத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். சக்திவேலுக்கு சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    சக்திவேலின் மனைவி மற்றும் பிள்ளைகள் சென்னையில் அவரது பெற்றோருடன் தங்கி வருகின்றனர். சக்திவேல் கடந்த 4 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா புலிக்கரம்பூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம்(43) என்பவரிடம் ஜேசிபி எந்திர டிைரவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சக்திவேலுக்கு சரிவர சம்பளம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தற்போது சக்திவேல் டிரைவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் சக்திவேல், பரமசிவம் ஆகியோர்களுக்குள் கொடுக்கல், வாங்கல் பிரசினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது .

    இந்நிலையில் கடந்த 4-ம் தேதி காலை 10.30 மணியளவில் சக்திவேல் தன் வீட்டில் இருந்தபோது, 2 மோட்டார்் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் லஷ்மணபுரம் சாலையில் ஜேசிபி எந்திரம் கவிழ்ந்து விட்டது. அதனால் ஜே.சி.பி எந்திர டிரைவர் சக்திவேலை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதை நம்பிய சக்திவேல் அவர்களுடன் மோட்டார்் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின்னர் சில மணி நேரம் கழித்து சக்திவேலின் தாய்க்கு வந்த போனில் சக்திவேலை கடத்தி விட்டதாகவும், ரூ. 5 லட்சம் பணம் தந்துவிட்டு சக்திவேலை மீட்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் சக்திவேலை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

    இதுகுறித்து வள்ளியம்மாள் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட சக்திவேலை தேடி வந்தனர். இந்நிலையில் செல்போன் டவர் மூலம் திட்டக்குடி அருகே புலிக்க ரும்பூர் பரமசிவம் என்பவரது மாடி யில் இருந்த சக்திவேலை மீட்டனர். மேலும் இந்த வழக்கில் ஜேசிபி இயந்திர உரிமையாளர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பரமசிவம்(43), அவரது டிரை வர் சுப்ரமணி மகன் ரமேஷ்(36), ஜெயகுமார் மகன் ஜெகதீஷ்(23), ராஜா மகன் ரவி(19), முத்துகிருஷ்ணன் மகன் பெரியசாமி(23), பழனிவேல் மகன் வெற்றிசெல்வன்(19), சவுந்தர்ராஜன் மகன் சந்திரன்(20) மற்றும் பென்னாடம் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் தனராஜ் (42) உள்ளிட்ட 8பேரை கீழ்குப்பம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பழனிவேல் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 43). இவர் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை 8 மணியளவில் கடையை திறந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கடையை சுற்றிப்பார்த்தார். கடைக்குள் இருந்த சிகரெட் பாக்கெட்டுகள் திருடு போயிருந்தது. மேலும், எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

    இது தொடர்பாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடையின் பின்புற சுவரை துளையிட்டு உடைத்து கடையினுள் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்றதை போலீசார் கண்டறிந்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×