தியாகதுருகம் அருகே டிராக்டர் மோதி வாலிபர் சாவு

வெங்கடேசன் சொந்த வேலை காரணமாக எலவனாசூர் கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார்.
தியாகதுருகம் அருகே  டிராக்டர் மோதி வாலிபர் சாவு
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் வெங்கடேசன் (வயது 39) இவர் நேற்று சொந்த வேலை காரணமாக தனது மனைவி நிவாஷினி மற்றும் குழந்தை பிரகதீஸ்வரன் ஆகியோருடன் எலவனாசூர் கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் வேலை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்பொழுது தியாகை பெரியநாயகி அம்மன் கோவில் அருகே சென்றபோது தனக்கு முன்னாள் சென்ற டிராக்டரை முந்தி சென்றார். அப்போது டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி நிவாஷினி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com