சின்னசேலம் அருகே டிராக்டர் மெக்கானிக் உடல் நசுங்கி பலி

கனகராஜ் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம் அருகே டிராக்டர் மெக்கானிக் உடல் நசுங்கி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

சேலம் மாவட்டம் கங்க வல்லி வட்டம் நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (வயது 45). டிராக்டர் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். ஓர்க்ஷாப்பின் வாசலில் டிராக்ட ரை நிறுத்திவிட்டு முன்பக்கமாக நேற்று பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலையில் வந்த வாகனம் டிராக்டரின் பின்னால் மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய கனக ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com