உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்குள் வராத அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்

100-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் உளுந்தூர்பேட்டைக்கு சென்று கல்வி பயின்று செல்கின்றனர். தங்கள் கிராமத்திற்கு என்று தனி அரசு பஸ் பள்ளி நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பஸ்சினை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
அரசு பஸ்சினை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
Published on

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை அருகே ஊ செல்லூர் கிராமத்தில் சுமார் 1000-திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் உளுந்தூர்பேட்டைக்கு சென்று கல்வி பயின்று செல்கின்றனர். தடம் எண் 35 அரசு பஸ்சில் மாணவர்கள் எந்தவித சிரமமும் இன்றி பள்ளிக்குச் சென்று வந்தனர். 

இந்நிலையில் சில நாட்களாக குறிப்பிட்ட அரசு பஸ் அந்த ஊருக்கு செல்லவில்லை என தெரிகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊ செல்லூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இன்று அரசு பஸ்ஸை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்திற்கு என்று தனி அரசு பஸ் பள்ளி நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஒரு வாரத்தில் தனி அரசு பஸ் ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை அங்கிருந்து கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com