search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drunken Teenager"

    • மணிகண்டன் மோட்டார் மெக்கானிக். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் மகன் கோவிந்தன் பணம் தர வேண்டியிருந்தது.
    • கிராம மக்கள் ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டு, நடந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் மணிகண்டன் (வயது 29). மோட்டார் மெக்கானிக். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் மகன் கோவிந்தன் (40) பணம் தர வேண்டியிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு வந்த மணிகண்டன், கோவிந்தனிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர், காலையில் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பேனாக்கத்தியால் கோவிந்தனின் முகத்தில் கிழிந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கோவிந்தனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருந்தபோதும் மணிகண்டன் பேனாக்கத்தியை காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளார். அவரை பிடித்த கிராம மக்கள் ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டு, நடந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனால் பயந்து போன மணிகண்டன், கையில் வைத்திருந்த பேனாக்கத்தியால், கழுத்தை குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நொச்சிப்பாளையம் பிரிவில் இருபுறமும் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.
    • உடுமலையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து மீது கல்லெறிய முயன்றார்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையில் நொச்சிப் பாளையம் பிரிவில் இருபுறமும் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இப்பகுதியில் இரவு மது போதையில் வந்த இளைஞர் ஒருவர் உடுமலையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து மீது கல்லெறிய முயன்றார்.

    சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பொதுமக்களின் உதவியோடு மது போதையில் இருந்த வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து, வீரபாண்டி பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நொச்சிபாளையம் பிரிவில் திடீரென ஏற்பட்ட இந்த சம்பவத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் இரு புறமும் அரசு மதுபான கடைகள் இயங்குவதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

    ×