கள்ளக்குறிச்சி அருகே மின் மோட்டாரில் வயர் திருடிய வாலிபர் கைது

கண்ணன் விவசாய நிலத்திற்கு சென்றார்.கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி அருகே மின் மோட்டாரில் வயர் திருடிய வாலிபர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 46) விவசாயி. இவர் நேற்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்து மின் மோட்டாரில் மின் வயரை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. அக்கம், பக்கம் விசாரித்ததில் தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் மூர்த்தி (37) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கண்ணன் மின் மோட்டாரில் இருந்து 15 மீட்டர் மற்றும் அதே பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மின் மோட்டாரில் இருந்து 10 மீட்டர் மின்சார வயரை திருடியது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 ஆயிரம் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com