என் மலர்
நீங்கள் தேடியது "சாலையில் பிணம்"
- பாரதிராஜா சென்னையில் தங்கி கொத்தானார் வேலை செய்து வந்தார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுக்கா நகர் மன்னார்குடி கிராமத்ை்த சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 32). சென்னையில் தங்கி கொத்தானார் வேலை செய்து வந்தார். இவர் விடுமுறையில் சொந்த கிராமத்திற்கு வந்தார். நேற்று இரவு இவரும், இவரது நண்பர்களான கந்தசாமிபுரம் மணிகண்டன் (32), முருகன் (30) ஆகியோர் கெடிலம் டாஸ்மாக்கில் மது அருந்தினர். மது அருந்திவிட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினர். சேந்தமங்கலம் சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றனர். அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயங்களுடன் பாரதிராஜா சாலையிலேயே இறந்து கிடந்தார். இது தொடர்பான புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு திருநாவலூர் போலீசார் விரைந்தனர்.
அங்கு இறந்து கிடந்த பாரதிராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன பாரதிராஜாவிற்கு தலையின் பின்பக்கம் தவிர வேறு எங்கும் காயம் இல்லை. இதனைத் தொடர்ந்து பாரதிராஜாவுடன் மது அருந்திய மணிகண்டன், முருகனிடம் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாரதிராஜா விபத்தில் இறந்து போனாரா? அல்லது குடி போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்டாரா?
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
போளூர் தாலுக்கா 99 புதுப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் மறைவான இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பார்த்தபோது அவர் ஒரு பையில் திருப்பதி லட்டு மற்றும் துணி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இறந்தவர் எந்த ஊர் பெயர் தெரியவில்லை இறந்த நபர் முன்பு விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்து விட்டு இங்கு வந்து போட்டு விட்டு சென்று விட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






