search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சின்னசேலம் ஏரியிலிருந்து அனுமதி இன்றி மண் ஏற்றிவந்த லாரியை பிடித்த கலெக்டர்
    X

    சின்னசேலம் ஏரியிலிருந்து அனுமதி இன்றி மண் ஏற்றிவந்த லாரியை பிடித்த கலெக்டர்

    • கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தனது குடும்பத்துடன் சொந்த காரில் சென்றார்.
    • மாமூல் கொடுத்துவிட்டு தான் மண் எடுத்து விற்பனை செய்கிறோம், பர்மீட் இல்லை என்று டிரைவர் பதில் கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அடுத்த வடபொன்பரப்பியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இங்கு சனிப்பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தனது குடும்பத்துடன் சொந்த காரில் சென்றார். இரவு 7 மணியளவில் சின்னசேலம் ஏரிக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரியில் இருந்து மண்ணை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வெளியில் வந்தது. கலெக்டர் ஷ்ரவன்குமார் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். ஏரியில் இருந்து வந்த லாரியை நிறுத்தி லாரியில் என்ன ஏற்றி வருகிறாய் என்று கேட்டுள்ளார்.

    இதற்கு லாரி டிரைவர், ஏரி மண்ணை ஏற்றி வருகிறேன். இதற்கு கலெக்டர் அனமதி எங்கே என்று கேட்டுள்ளார். எல்லோருக்கும் மாமூல் கொடுத்துவிட்டு தான் மண் எடுத்து விற்பனை செய்கிறோம், பர்மீட் இல்லை என்று டிரைவர் பதில் கூறினார். கலெக்டர் ஷ்ரவன்குமார் சம்பவ இடத்திற்கு உடனே வருமாறு தாசில்தார் இந்திரா, சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். இந்த சம்பவம் குறித்து லாரி டிரைவர் உரிமையாளரிடம் போனில் கூறினார். லாரி உரிமையாளரின் உதவியாளர் சதீஷ் அங்கு வந்தார்.

    டிரைவர் கணேசன் (வயது 26), சதீஷ் (35) ஆகியோர் கலெக்டர் ஷ்ரவன்கு மாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் 2 பேரையும் பிடித்து சென்றனர். தாசில்தார் இந்திரா லாரியை பறிமுதல் செய்தார். லாரி டிரைவர் கணேசன், சதீஷ் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசனை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏரி மண்ணை திருட்டு த்தனமாக ஏற்றி வந்த டிரைவர், லாரி உரிமையாளரின் உதவியாளர் கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×