உளுந்தூர்பேட்டை அருகே குடும்ப தகராறில் கூலி தொழிலாளி தூக்குப் போட்டு சாவு

முரளிபாபு கூலித் தொழிலாளி திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மனமுடைந்த முரளிபாபு வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார்.
உளுந்தூர்பேட்டை அருகே குடும்ப தகராறில் கூலி தொழிலாளி தூக்குப் போட்டு சாவு
Published on

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்தவர் முரளிபாபு (வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முரளிபாபுவிற்கும் அவரது மனைவி அஷ்டலட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் அஷ்டலட்சுமி கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த முரளிபாபு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முரளிபாபுவின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com