என் மலர்
காஞ்சிபுரம்
சோழிங்கநல்லூர்:
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் நந்தகுமார், இவரது மனைவி அருள் பிரியா(24). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.
இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இதனால் பெற்றோர் நகை போடவில்லை. இதனால் மாமியார் அநாகரிகமாக பேசினார். இதனால் வேதனை அடைந்த அருள் பிரியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாமியார் கொடுமையால் மகள் அருள் பிரியா தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்
நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகுமாரிடம் விசாரணை நடத்தினர்.
திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது.
சோழிங்கநல்லூர்:
சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஒரு வழக்கில் 3 மாதங்களா புழல் சிறையில் இருந்தார். தன் மனைவி ஜெயிலில் வந்து பார்க்காததால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டார்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர் தனது நண்பர்களுடன் தனது மனைவியை வெட்டி கொலை செய்ய முயன்றார். திருவான்மியூர் போலீசார் விரைந்து வந்து சரண்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக திரு வான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திசென்னை கண்ணகி நகரை சேர்ந்த பிரபு, விக்கி, ஆட்டோ டிரைவர் விமல், சென்னை பெரியார் நகரை சேர்ந்த பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். ராஜேஸ் உல்பட 2 பேரை தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருந்தாலோ, பட்டாசு தயாரித்தாலோ, வீட்டிலேயே வைத்து விற்பனை செய்தாலோ, நிதி சீட்டு நடத்தி அதன் மூலம் பொது மக்களுக்கு பட்டாசு விநியோகம் செய்தாலோ சட்டப்படி குற்றமாகும்.
இவ்வாறு ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் வெடி பொருட்கள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருட்கள் விதிகள் 2008-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டாசு கடை நடத்த உரிமம் பெற்றுள்ள வியாபாரிகள் கடையில் உரிமத்தின் நகலை பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிபடுத்திட வேண்டும். விதிகளுக்குட்பட்டு தீ தடுப்பு சாதனங்களுடன் கடை அமைக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள், அனுமதியில்லாமல் பட்டாசு விநியோகம் செய்யும் நபர்களிடமிருந்து பட்டாசு வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Diwali
சோழிங்கநல்லூரை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சரண்யா.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஒரு வழக்கில் ராஜேசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை மனைவி சரண்யா ஜெயிலுக்குள் பார்க்க செல்லவில்லை என்று தெரிகிறது. கணவரை ஜாமீனில் வெளியே எடுக்க முயற்சி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ராஜேஷ் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். தன்னை பார்க்க வராததால் மனைவி சரண்யா மீது கோபமும் அவரது நடத்தையில் சந்தேகமும் அடைந்தார்.
இதையடுத்து மனைவி சரண்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். நேற்று மாலை பெசன்ட்நகர், சிவசுந்தர அவென்யூ பகுதியில் நடந்து சென்ற சரண்யாவை ராஜேசும், அவரது நண்பர்களும் சரமாரியாக வெட்டி தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயம் அடைந்த சரண்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கண்ணகிநகரை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷ் உள்ளிட்ட அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எளிமையாள் கோட்டூர், எடையார்பாக்கம், மதுரமங்கலம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் பூந்தமல்லியில் உள்ள ககலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினமும் கம்பெனி வேனில் வேலைக்கு செல்வது வழக்கம்.
இன்று காலை 15-க்குதத் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு வேன் எளிமையாள்கோட்டூர் வழியே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை உர வயல் வெளியில் கவிந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 15 பெண்கள் மற்றும் டிரைவர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளச்சேரி:
கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 18). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தனது செல்போனில் அடிக்கடி ‘கேம்’ விளையாடி வந்தார். இதனை அவரது தாய் கண்டித்து செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டனர். இதனால் மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோழிங்கநல்லூர்:
செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 58), தொழிலாளி. இவர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக சைக்கிளில் சென்றார்.
சுனாமி குடியிருப்பு சந்திப்பில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த மாநகர பஸ் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மாமல்லபுரம்:
பையனூரை அடுத்த பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கும் திருப்போரூரை அடுத்த மானாம்பதியை சேர்ந்த கவுசல்யாவுக்கும் (22) கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி திருமணம் நடந்தது.
நேற்றுமுன்தினம் கவுசல்யாவின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தந்தையை பார்த்த அழைத்து செல்லும்படி கவுசல்யா, கணவர் அசோக்குமாரிடம் கூறினார். ஆனால் அவர் மனைவியை அழைத்து செல்லவில்லை.அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கவுசல்யா கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் ஆன 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாமல்லபுரம் போலீசாரும் செங்கல்பட்டு ஆர்.டி.ஓவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் குமுதவல்லி. இவர் பி.சி.ஏ. படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த குமுதவல்லி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஜீவா. ஏலச்சீட்டு நடத்தி வருகிறார்.
இவரிடம் அதே பகுதி ஆர்.கே.பி. நகரை சேர்ந்த தோழி நாகஜோதி, கம்பர் தெருவை சேர்ந்த தேவி ஆகியோர் ரூ. 35 லட்சம் கடன் வாங்கினர். பின்னர் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இது குறித்து ஜீவா அவர்களிடம் கேட்டபோது, சரிவர பதில் கூறவில்லை. இதையடுத்து ஜீவா பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பண மோசடி செய்ததாக நாகஜோதி, தேவி ஆகியோரை கைது செய்தனர். #tamilnews
மாமல்லபுரம், தேவநேரி, மணமை, கடம்பாடி, பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம் பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் இன்று காலை மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் இருக்கிறதா? என்று அறிய ரத்த பரிசோதனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர்.
இதை வரிசையில் நின்று கவனித்த மற்ற சாதாரண சளி, இருமல், தலைவலி மற்றும் தொடர் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளும் பயத்தில் தங்களுக்கும் டெங்கு, பன்றி காய்ச்சல் வந்திருக்குமோ என்ற பயத்தில் மருத்துவர்களிடம் கட்டாய ரத்த பரிசோதணைக்கு எழுதி தரும்படி வற்புறுத்தினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவர்களிடையே நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் போதிய விழிப்புணர்வு விளக்கம் கொடுத்து நோயாளிகளை சமாதானப்படுத்தினர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை சிதிலமடைந்ததால் புதிய சிலை செய்யப்பட்டது.
இந்த சிலை செய்ததில் தங்கம் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த சிலை கடந்த 2015 -ம் ஆண்டு அவசர அவசரமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் தங்கம் முறைகேடு நடந்துள்ளதாக காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பக்தர்கள் குழுவைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் காஞ்சீபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு காவல் துறையினருக்கு நீதிபதி மீனாட்சி உத்தரவிட்டார். இதன் பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் புகார்தாரர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தினார். 4.75 கிலோ தங்கம் பயன்படுத்தி சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் நவீன கருவியினை வைத்து சிலையை ஆய்வு செய்தனர்.
இதில் சிலையில் கடுகளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கோயிலின் செயல் அலுவலர், ஸ்தபதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சோமாஸ்கந்தர் சிலையை முழுமையாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்த சிலையை கும்பகோணம் கொண்டு செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
கோவிலில் இருந்து சிலையினை வெளியில் கொண்டு செல்வதாக இருந்தால் ஆகம விதிப்படி பூஜைகள் செய்ய வேண்டும்.
இதற்காக கடந்த சனிக்கிழமை (20-ந் தேதி) சிலைக்கு பாலாலயம் என்ற சிறப்பு பூஜை கோவிலில் நடைபெற்றது. இதையடுத்து சோமாஸ்கந்தர் சிலை மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலை இன்று அதிகாலை 3 மணி அளவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் இந்த சிலைகள் கும்பகோணம் கொண்டு செல்லப்பட்டது. சாமி சிலைகளுடன் கோவில் செயல் அலுவலர் முருகேசன் மற்றும் கோயில் குருக்கள் சென்றனர். சிலைகளை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.
சிலைகள் பற்றிய ஆய்வின் முடிவில் ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடுகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews
காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுகின்றன.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பொன்னையா இன்று அதிகாலை காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கழிவு நீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார்.
பின்னர் ரெட்டிப்பேட்டை பகுதியில் உள்ள கோழிக்கறி கடை மற்றும் ஐஸ் பேக்டரிகள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.
இந்தபகுதியில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாததாலும் முறையான அனுமதி இல்லாமல் மதுபான பார் செயல்பட்டதாலும் உடனடியாக அந்த பாருக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் அனுமதி இல்லாமல் பார் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் சுகாதாரத்தை உறுதி செய்ய கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவடைகிறது. எனவே அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கு சொந்தமான இடங்களை சுத்தமாக வைக்க ஏற்பாடு செய்து வருகின்றன. #DenguFever






