என் மலர்
காஞ்சிபுரம்
பல்லாவரத்தை அடுத்த பம்மல், அண்ணா நகர் நல்லதம்பி சாலையை சேர்ந்தவர் சீதாபதி (வயது 65). இவரது தங்கை சுமதி (60). இவர் தனது அண்ணன் சீதாபதியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சீதாபதிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து அவரை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்ததில் சீதாபதிக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக தெரிகிறது. இதைஅறிந்த சுமதி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
தனக்கு ஆதரவாக இருந்த அண்ணனுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் மிகவும் மனவேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சுமதி வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். தீயில் கருகிய அவர் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுமதியை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்ணனுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டதால் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூரில் ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி உள்ளது. இங்கு கேஷியராக பணியாற்றி வந்தவர் மோகன். இவர் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக இங்கு பணிபுரிந்து வந்தார்.
கிராமப்புற பகுதி என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் தங்களது செல்போன் எண், இ-மெயில் முகவரியை வங்கி கணக்குடன் இணைக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் பலரது வங்கி கணக்கில் இருந்து பணம் குறைந்து இருந்தது. இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் ரூ. 7 லட்சம் வரை கேஷியர் மோகன் மோசடி செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
வங்கி கணக்குடன் செல்போன் எண், இ-மெயில் முகவரியை இணைக்காத வாடிக்கையாளர்களை குறி வைத்து அவர் சிறிது, சிறிதாக பணத்தை சுருட்டி இருக்கிறார்.
இதையடுத்து கேஷியர் மோகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கல்பாக்கம் அடுத்த வாயலூரை சேர்ந்தவர் ரகு, கூலித்தொழிலாளி. இவரது மகள் இந்துஷ்ரி (வயது 13). வாயலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் நடக்கும் முக்கிய பாட வகுப்புகளை மாணவி இந்துஷ்ரி புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை வகுப்பாசிரியரும் தலைமை ஆசிரியரும் கண்டித்தனர். மேலும் இது பற்றி இந்துஷ்ரியின் பெற்றோரிடமும் கூறினர்.
இதில் மனவேதனை அடைந்த இந்துஷ்ரி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆவேசம் அடைந்த மாணவியின் உறவினர்கள் ஆசிரியர்களை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் ஏகாம்பரம் போலீசார் மாணவியின் உறவினர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர். இது குறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த சாலவான் குப்பத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் அர்ச்சனா (வயது14). நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ரவிச்சந்திரன் தினசரி மது அருந்தி விட்டு வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்தார். இதை தட்டிக்கேட்ட மனைவி அர்ச்சனாவை அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் மன முடைந்த அர்ச்சனா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள கரசங்கால் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு ஆண்டாக வீடுகளில் கட்டப்பட்டு இருந்த ஆடு, மாடு மற்றும் கோழிகள் தொடர்ந்து திருடு போய் வந்தன. மேலும் கொள்ளை சம்பவங்களும் அடிக்கடி நடந்து வந்தது.
இதையடுத்து திருட்டு- கொள்ளை சம்பவங்களை தடுக்க கரசங்கால் கிராமத்தில் உள்ளவர்கள் ஏராளமானோர் வீடுகளில் நாய்களை வளர்க்க தொடங்கினர்.
மர்ம நபர்கள் கிராமத்துக்குள் நுழையும் போது நாய்கள் குரைத்ததால் அவர்கள் தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் கரசங்கால் கிராமத்தில் கடந்த 6 மாதமாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் வெகுவாக குறைந்தன.
இந்த நிலையில் கரசங்கால் கிராமத்தில் உள்ள தெருக்களில் நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டு இருப்பது தெரிந்தது.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் இறைச்சியில் விஷத்தை கலந்து வீச்சி சென்று உள்ளனர். இதனை தின்ற 20 நாய்கள் இறந்துள்ளன.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஒரத்தி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை கும்பலுக்கு தடையாக நாய்கள் இருந்ததால் அவற்றை விஷம் வைத்து கொன்று இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
கால்நடைகள் திருட்டு அதிகரித்ததை தொடர்ந்து அனைத்து வீட்டிலும் நாய்கள் வளர்க்க தொடங்கினர். இதனால் கடந்த 6 மாத காலம் கால்நடைகள் திருட்டு போவது குறைந்து இருந்தது.
நேற்று முன்தினம் இரவு இறைச்சியில் பூச்சி மருந்தை வைத்து தெரு முழுவதும் திருட்டு கும்பல் வீசி உள்ளனர். அதை சாப்பிட்ட நாய் மற்றும் நாய்குட்டிகள் 20-க்கும் மேற்பட்டவை பலியாகி உள்ளது.
இறைச்சியில் விஷம் வைத்தது போல பிஸ்கெட் மற்றும் திண்பண்டத்தில் கலந்து போட்டு இருந்தால் ஆடு, மாடு மற்றும் குழந்தைகளும் பலியாகி இருக்கும். நாய்களை விஷம் வைத்து கொன்ற கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஸ்ரீபெரும்புதுர்:
படப்பையை அடுத்த நாவலூர் குடியிருப்பை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 58). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்திருந்தார். இவரது மகன் ரவிக்குமார்.
நேற்று முன்தினம் சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பழனியப்பனையும், அவரது மகன் ரவிக்குமாரையும் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன், சதீஷ் தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ரவிக் குமாருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக படப்பை பகுதியில் பதுங்கியிருந்த பாண்டியன், சதீஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆலந்தூர்:
சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபிதாபி ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சிலரது உடமைகளை சோதனை செய்ததில் தங்கப் பேனா, சாக்லேட், பேப்பர், ஸ்குரு டிரைவர், சோப்பு பவுடர் ஆகியவற்றில் தங்ககட்டிகளை பதுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது.
சென்னை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 6 பேரிடம் இருந்து 2.6 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்து கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.78 லட்சமாகும். சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர்.
சென்னையில் இருந்து நேற்று இரவு இலங்கை சென்ற பயணிகளை சோதனை செய்தனர். அப்போது இலங்கை பயணி ஒருவரிடமும், ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகளிடமும் சோதனை செய்தபோது அமெரிக்க டாலரும், ஐரோப்பிய நாட்டின் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ. 16 லட்சம் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
படப்பையை அடுத்த நாவலூர் குடியிருப்பை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 60). இவரது மகன் ரவி. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று நாவலூர் குடியிருப்பு பகுதியில் ஒருவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ரவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மற்றும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட மோதலில் பாண்டியனும், அவரது நண்பர்களும் சேர்ந்து ரவியையும், அவரது தந்தை பழனியப்பனையும் சரமாரியாக தாக்கினர்.
படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். ரவிக்கு மருத்துவ மனையில் தீவிர சிகித்தை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
செங்கல்பட்டு, அக். 28-
செங்கல்பட்டை அடுத்த கரும் பாக்கத்தை சேர்ந்த வர் சூர்யா (வயது 20). முள்ளிப் பாக்கம், புதுநக ரில் வசித்து வந்தவர் பிரதாப் (19). இருவரும் நண்பர்கள்.
இன்று அதிகாலை 2 பேரும் ஒரு திருமண நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள ஒரே மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டு அருகே திருப்போரூர் கூட்ரோடு பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறு மாறாக ஓடி சாலையோர பனை மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சூர்யா வும், பிரதாப்பும் பலத்த காயம் அடைந்து உயி ருக்கு போராடினர். அவர் களைஅவ்வழியே சென்ற வர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பல னின்றி சூர்யாவும், பிரதாப் பும் பரிதாபமாக இறந்த னர். இது குறித்து செங்கல் பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 54). கார் டிரைவர். இவரது மனைவி கீதா ராதாகிருஷ்ணனுக்கு மதுப்பழக்கம் உண்டு.
இதனை கீதா கண்டித்து அடிக்கடி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கீதா தற்கொலை செய்யப்போவதாக கூறி மண்ணெய் உடலில் ஊற்றி தீக்குச்சியை பற்ற வைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீப்பிடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராதா கிருஷ்ணன் உடல் கருகிய மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
பலத்த தீக்காயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக இறந்தார்.
புட்லூரை அடுத்த மலை வாழ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோதண்டராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை மனைவி கண்டித்து வந்தார்.
கடந்த 23-ந் தேதி மனைவி ஜெயலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டு கோதண்டராமன் தகராறில் ஈடுபட்டார். ஆனால் ஜெயலட்சுமி பணம் கொடுக்கவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த கோதண்டராமன் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கோதண்டராமன் பரிதாமாக இறந்தார்.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வின்சுலாஸ். இவருடைய தம்பி அடைக்கலத்தின் மகள் மோனிஷா ஜெனிபர்(வயது 22). பி.காம் படித்துள்ள இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவருடைய தந்தை அடைக்கலம், உடல் நலம் சரியில்லாமல் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய், வேறு ஒருவருடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மோனிஷா ஜெனிபர், அவரது பெரியப்பா வின்சுலாஸ் வீட்டில் வசித்து வந்தார்.
தந்தை இறந்து விட்டதாலும், தாய் வேறு ஒருவருடன் சென்று விட்டதாலும் பாசத்துக்கு ஏங்கியபடி வாழ்ந்து வந்த மோனிஷா ஜெனிபர் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்து கொண்ட மோனிஷா ஜெனிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மறைமலை நரை அடுத்து பனங்காட்டுரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவருடைய மகன் ஹேமச்சந்திரன் (14). இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு அரசு பஸ்சில் சென்றார். பள்ளி அருகே சென்றதும் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கினார்.
அப்போது மாணவர் ஹேமச்சந்திரன் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிழந்தார்.
இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






