என் மலர்
நீங்கள் தேடியது "சவ ஊர்வலத்தில் மோதல்"
ஸ்ரீபெரும்புதூர்:
படப்பையை அடுத்த நாவலூர் குடியிருப்பை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 60). இவரது மகன் ரவி. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று நாவலூர் குடியிருப்பு பகுதியில் ஒருவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ரவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மற்றும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட மோதலில் பாண்டியனும், அவரது நண்பர்களும் சேர்ந்து ரவியையும், அவரது தந்தை பழனியப்பனையும் சரமாரியாக தாக்கினர்.
படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். ரவிக்கு மருத்துவ மனையில் தீவிர சிகித்தை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.






