என் மலர்
ஈரோடு
ஈரோடு:
தமிழக காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பிறந்தநாள் விழா ஈரோட்டில் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் இளங்கோவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-
இன்று எனக்கு மிகவும் விசேஷமான நாள். ஏனென்றால் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது.
இது ராகுல் காந்தியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி ஆகும். ராகுல் காந்தியைப் பார்த்து பொடிப் பையன் என்று எள்ளி நகையாடுபவர்களுக்கு அவர் மரண அடி கொடுத்து 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்துள்ளார்.
இதன்மூலம் ராகுல்காந்தி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். ஆளும் மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குறுதியை எப்போதும் நிறைவேற்றியதில்லை .
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதி என்னவாயிற்று?
எனவே இந்த சூழ்நிலையை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கு இப்போதே நாம் தயாராக இருக்க வேண்டும் .
நிச்சயமாக தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும்.
இவ்வாறு இளங்கோவன பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி. ராகுல் காந்தி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். கட்சி மேலிடம் விரும்பினால் பாராளுமன்ற தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #evkselangovan #parliamentelection
ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் உள்ள நீல்கிரிஸ் உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடந்து வருகிறது.
இதில் 35 வயது முதல் 70 வயது பிரிவில் வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இன்று கால் இறுதி போட்டிகள் நடந்தது.
இதில் தமிழ்நாடு பேட் மிட்டன் அசோசியேஷன் தலைவரும், பா.ம.க. மாநில இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு விளையாடினார்.
முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகதாது அணை பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது. சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கால் இறுதி இரட்டையர் பிரிவு போட்டியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். #PMK #AnbumaniRamadoss #CentralGovt
கோபி கலை அறிவியல் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு மாணவ-மாணவிகளை பெற்றோரே விரும்பித்தான் அனுப்புகிறார்கள். இதுபற்றி பள்ளிகளுக்கு அறிவுரை எடுத்து கூறப்படும்.
தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர்கள் ரூ.7500 சம்பளம் பெற்று பணிபுரிகிறார்கள். ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு இவர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து மாணவ- மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டைபுதூரை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி அருக்காணி (வயது 70). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது.
அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த 10-ந் தேதி அவரது கணவர் முத்துசாமி தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டில் அருக்காணி மட்டும் இருந்தார். 11-ந் தேதி காலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலை, வாய், மூக்கு பகுதியில் காயம் இருந்தது.
கட்டிலில் பிணமாக கிடந்த அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்த சென்றிருப்பது தெரியவந்தது. தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையாளியை பிடிக்க கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், பெருந்துறை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் துரைசாமி ஆகி யோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர். கொலையுண்ட அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் அதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் கொடுமுடி அருகே உள்ள வருந்தியாபுரம் என்ற இடத்தில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் குப்பம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (54) என்பவர் தனது மகன் நவீன்குமாருடன் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
போலீசாரிடம் மாரிமுத்து முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மாரிமுத்துவிடம் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர்.
அப்போது மூதாட்டி அருக்காணியை கொலை செய்ததாக மாரிமுத்து ஒப் புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயியான மாரிமுத்துவுக்கு 1½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலங்களுக்கு மருந்து அடிக்கும் தொழிலையும் மாரிமுத்து செய்து வந்தார்.
தொழில் செலவுக்காக கடனுக்கு அருக்காணியிடம் மாரிமுத்து பணம் வாங்கி உள்ளாராம். இந்த நிலையில் அவருக்கு மேலும் பணம் தேவைப்பட்டு உள்ளது. எனவே கடந்த 10-ந் தேதி இரவு அருக்காணியின் வீட்டுக்கு மாரிமுத்து சென்றார்.
அங்கு அருக்காணியிடம் மாரிமுத்து பணம் கேட்டார். ஆனால் பணம் கொடுக்க அருக்காணி மறுத்துள்ளார். ‘‘ஏற்கனவே வாங்கிய பணத்தை கொடு. அப்போதுதான் மீண்டும் பணம் தருவேன்’’ என்று அருக்காணி கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மாரி முத்து அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து அருக்காணியை தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் அருக்காணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை (தாலிக் கொடி) பறித்துக் கொண்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அருக்காணியின் தாலிக் கொடியில் 4 பவுன் தாலிச் செயினை வங்கியில் மாரிமுத்து அடமானம் வைத்து ரூ. 65 ஆயிரம் பெற்றுள்ளார். தாலியை வீட்டில் வைத்திருந்தார். இந்த தகவல் அறிந்த போலீசார் தாலியையும், தாலிச்செயினையும் கைப்பற்றினர்.
மூதாட்டி கொலை வழக்கில் கைதாகியுள்ள மாரிமுத்துவுக்கு செல்வி (46) என்ற மனைவியும், நவீன்குமார் என்ற மகனும், மகாலட்சுமி (28), ஆனந்தி (21) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
மகள்களுக்கு திருமணமா கிவிட்டது. நவீன்குமார் சித்தோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.எம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இன்று 71-வது பிறந்தநாள்.
இதையொட்டி ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சக்திதுரைசாமி மண்டபத்தில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சி தொண்டர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதையொட்டி 71 கிலோ கேக்கை நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராக வாங்கி வைத்திருந்தனர். அந்த கேக்கை வெட்டி தானும் உண்டு தொண்டர்களுக்கு வழங்கினார். அப்போது கூடி இருந்த தொண்டர்கள் தான்மானத் தலைவர் இளங்கோவன் வாழ்க, அண்னை சோனியா காந்தி வாழ்க, வருங்கால பிரதமர் ராகுல்காந்தி வாழ்க என கோஷமிட்டனர்.
விழாவில் நிர்வாகிகள் 71 கிலோ எடை கொண்ட லட்டுகளை வழங்கினர். மேலும் இளங்கோவனுடன் கட்சி நிர்வாகிகள் செல்பியும் எடுத்து கொண்டனர். #EVKSElangovan
கோபி அருகே உள்ள நாமக்கல்பாளையத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடந்தது. முகாமில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மனுக்கள் பெற்று குறைகள் கேட்டார்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிளஸ்-2 வகுப்பு முடியும் போதே மாணவ- மாணவிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய பாட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பள்ளிகளுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இந்த குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் ‘‘மெய் நிகர்’’ வகுப்பறை அமைக்கப்படும்.
இந்தாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும் என 4 வகை சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளது.

மறைந்த ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் தொடர்ந்து நல்ல புதிய திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறார். இதை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி நலமாக வாழ வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
சமீபத்தில் வெளியான ரஜினியின் 2.0 படத்தில் செல்போன் டவர்களால் பறவைகள் குறிப்பாக சிட்டு குருவிகள் இறந்து விழுவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு செல்போன் டவர்களால் பறவைகள் இனமே அழிந்து வருவதாகவும், வருங்காலத்தில் இதை குறைக்க வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.
அந்த படத்தில் வந்த காட்சி போன்ற சம்பவம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நடந்துள்ளது. பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கொடுமுடி அடுத்த சாலை புதூர் சந்தை வளாகத்தில் பல ஆண்டுகளாக வேப்பமரம், புளியமரம், புங்கை மரம் என பலவகை மரங்கள் உள்ளன.
இந்த மரங்களில் நூற்றுக்கணக்கான பறவைகள் குறிப்பாக மைனா குருவிகள் அதிக அளவில் கூடுகள் கட்டி வசித்து வருகின்றன.

இது பற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘மைனா குருவிகள் இறந்து விழுந்த பகுதிக்கு அருகில் 200 மீட்டர் தூரத்தில் செல்போன் டவர்கள் உள்ளன. அந்த செல்போன் டவர்களால்தான் மைனாக்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு இறந்து விழுகின்றன’’ என்று புகார் கூறினார்கள்.
இது பற்றி விசாரணை நடந்து வருகிறது. #Sparrows
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் அடுத்த மூலையூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44).விவசாயி.
வனப்பகுதியையொட்டி உள்ள இவர் தன் வீட்டு முன் வாழைகள் மரங்கள் பயிரிட்டுள்ளார். மேலும் அருகே இவருக்கு சொந்தமான 2½ ஏக்கர் தோட்டமும் உள்ளது. தோட்டத்தில் 10 மாடுகளை வளர்த்து வருகிறார். தோட்டத்தில் மாடுகளை கட்டி விட்டு மாடுகளுக்கு செடி- கொடி, தழைகளை போட்டு செல்வார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினரிடம் கூறி வந்தனர்.
இதற்கிடையே அந்த யானை நேற்று இரவும் ஊருக்குள் புகுந்தது.
விவசாயி செல்வராஜ் வீட்டு முன் உள்ள வாழைகளை தின்றது. பிறகு தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு மாடுகளுக்கு தீனியாக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களையும் கபாளீகரம் செய்தது. பிறகு அங்கிருந்து காட்டுக்குள் புகுந்தது.
இன்று காலை இதை கண்ட செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவரும் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும் மீண்டும் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து ஊருக்குள் புகும் யானையை வர விடாமல் தடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 36). இவர் அந்த பகுதியில் விடுதி நடத்தி வருகிறார். இந்த விடுதியில் 4 மாணவிகள் உள்பட 21 பேர் தங்கி படித்து வந்தனர்.
இந்த நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளிடம் பால்ராஜ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதையொட்டி கடந்த 15-ந்தேதி ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் பால்ராஜ் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அந்த பகுதியில் செயல்பட்டு வந்த விடுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அங்கு மாணவர்கள் மட்டுமே தங்கி படிக்க அனுமதி பெறப்பட்டு இருந்ததாகவும் மாணவிகள் சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த விடுதியில் தங்கி இருந்த 4 மாணவிகள் ஈரோடு கொள்ளுக்காட்டு மேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து டவுன் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
ஈரோடு பழைய பாளையத்தில் செயல்பட்டு வந்த விடுதியில் புகார் வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு மாணவர்கள் மட்டுமே தங்கி இருக்க அனுமதி பெறப்பட்டிருந்தது. 4 மாணவிகள் அங்கு சட்டவிரோதமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவிகள் பாதுகாப்பாக அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதே போன்று வேறு எங்கேனும் அனுமதி இல்லாமல் விடுதிகள் செயல்படுகிறதா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் பொதுமக்களும் தங்கள் பகுதியில் செயல்படும் விடுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். அனுமதி இல்லாமல் செயல்படும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை தணிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்கு நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மேலும் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல் முறையீடு செய்யப்படும். கோர்ட்டின் தீர்ப்புக்கு பிறகு நிலைமை தெரியும். இது குறித்து முதல்வர் ஆராய்ந்து நல்ல முடிவை எடுப்பார்.
எங்களிடம் இருந்து எதிரணிக்கு ஓடிய செந்தில் பாலாஜி இப்போது தி.மு.க.வுக்கு ஓடி உள்ளார். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. நல்ல வியாபாரி. ஆதாயம் எங்கு கிடைக்குமோ அங்கு ஓடுவது அவரது வழக்கம்.
பிளாஸ்டிக் பயன்படுத்துவது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் நடைமுறையில் இருக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார். #KCKaruppannan #Senthilbalaji
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பள்ளிக்கூடம் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருளான ‘குட்கா’ விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டது.
இதையொட்டி கவுந்தப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது 4 கடை உரிமையாளர்கள் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதை கண்டனர்.
அவர்களிடம் இருந்து குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையொட்டி குட்கா விற்பனை செய்ததாக நரேன்லால் (25) பழனிசாமி (55) சிபி அகமது (55), பாலசுப்பிரமணியம் (38) ஆகிய 4 பேரை கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி கைது செய்தார்.
கைதான 4 போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர், மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் என்பவரது மகன் ரவீந்திரன்(வயது 20). இவர் பெருந்துறை அருகேயுள்ள ஒரு தனியார் என்ஜினியிரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு ஈசிஈ படித்து வந்தார்.
ரவீந்திரன் தனது தாயார் செல்வி, தந்தை மற்றும் தங்கை மைவிழி ஆகியோருடன் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி, பாலக்கரை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் துணிதுவைத்துவிட்டு குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அங்கு தனது குடும்பத்தினர் துணி துவைத்து கொண்டிருந்தபோது ரவீந்திரன் வாய்க்காலுக்குள் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறிய அவர் தண்ணீரின் சுழலில் சிக்கி நீரில் மூழ்கி விட்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் வாய்க்காலில் குதித்து அவரை தேடி பார்த்தனர்.
கல்லூரி மாணவர் உடலை அங்குள்ளவர்கள் நீண்ட நேரம் தேடினர். உடல் உடனடியாக கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து தேடினர்.
அவரது உடல் சுழலில் சிக்கி அருகே கரை ஒதுங்கி இருந்தது. 5 மணி நேரத்துக்குப்பிறகு மாலை 5 மணிக்கு அவரது உடல் கிடைத்தது.
அவரது உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






