என் மலர்
ஈரோடு
- ஈரோடு மாவட்டத்தில் காலை நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- இதேபோல் இன்று காலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கனமழை காரணமாக பெரும் அவதி அடைந்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக அந்தியூர் வரட்டு பள்ளம் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சத்தியமங்கலம்- கடம்பூர் ஆசனூர் போன்ற மலை கிராமங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் அங்கு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரி, குளங்கள் குட்டைகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு லேசாக சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
வழக்கம்போல் ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளித்தது. மேலும் சேறும் சகதியுமாக இருந்ததால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இதேபோல் இன்று காலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கனமழை காரணமாக பெரும் அவதி அடைந்தனர். பெற்றோர்கள் சிலர் தங்களது குழந்தை களை குடை பிடித்தப்படிய பள்ளிக்கு அழைத்து சென்றனர். சிலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அவதி அடைந்தனர்.
இதேபோல் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். கோபி -குண்டேரி பள்ளம் தாளவாடி கொடுமுடி போன்ற பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
- ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்தனர்.
- ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒேர நாளில் 19,800 பேர் பவானிசாகர் அணை பூங்காவை கண்டு ரசித்தனர். இதன் மூலம் கட்டணமாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் வசூல் ஆனது.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணையையொட்டி பூங்கா அமைந்துள்ளது. நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்தனர்.
சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடியும், சறுக்கு விைளயாடியும் மகிழ்ந்தனர். மேலும் பவானிசாகர் அணை மீனை சுடச்சுட ரசித்து சாப்பிட்டனர். பவானிசாகர் அணை பூங்காவுக்கு நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது.
இதேபோல் இருசக்கர வாகனத்துக்கு ரூ.10-ம், காருக்கு ரூ.30-ம், பஸ், வேன்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒேர நாளில் 19,800 பேர் பவானிசாகர் அணை பூங்காவை கண்டு ரசித்தனர். இதன் மூலம் கட்டணமாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் வசூல் ஆனது.
- சம்பவத்தன்று சோட்டுபுனியா 2-வது மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி மேலே இருந்து கீேழ விழுந்து விட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார்.
- இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டம் உத்சுகி பகுதியை சேர்ந்தவர் சோட்டுபுனியா (30). இவர் ஈேராடு மாவட்டம் பெருந்துறை அருகே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று சோட்டுபுனியா 2-வது மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி மேலே இருந்து கீேழ விழுந்து விட்டார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார். இதுகுறித்து அவரது அண்ணன் சுகான்புனியா கொடுத்த தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
- இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் கோபால்(34)இவருடைய தந்தை சுப்பிரமணி (67). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் சென்று விட்டு மீண்டும் பவானியை நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.
மோட்டார் சைக்கிளை கோபால் ஓடி வந்தார். சுப்பிரமணி பின்னால் அமர்ந்திருந்தார்.
அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே வந்து கொண்டிருந்த பொழுது வடமாநிலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (26) என்பவர் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த சுப்பிர மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைய டுத்து அவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ெமாபட் ஓட்டி வந்த ரவிக்குமார் என்பருக்கு காயம் ஏற்பட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக ஈரோடு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சிவன்-பெருமாள் தீபம் ஆற்றில் விடும் விழா நடந்தது.
- இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கோவில் செயல் அலுவலர் இரா.சுகுமார் (கூடுதல் பொறுப்பு) முன்னிலையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
கொடுமுடி:
கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயணப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுபவது வழக்கம். கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சிவன்-பெருமாள் தீபம் ஆற்றில் விடும் விழா நடந்தது.
இதனையொட்டி மகுடேசுவரர், வடிவுடையநாயகி அம்பாள், வீர நாராரயணப் பெருமாள், ஶ்ரீ தேவி-பூதேவி, உற்சவ மூர்த்திகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்து வீதி உலா வர முன்பாக சிவன் தீபத்தை கோவில் முதன்மை சிவாச்சாரியார் பாபுசுவாமிகள், பிரபு சுவாமிகள் எடுத்து வந்தனர்.
பெருமாள் தீபத்தை கோவில் முதன்மை பட்டாச்சாரியார் ஸ்ரீதர் முன்னிலையில் ராஜா சுவாமிகள் காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்தார். ஆற்றங்கரை ஓரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
காவிரி ஆற்றங்கரைப் பகுதிக்கு பொது மக்கள், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார், பட்டாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் காவிரி ஆற்றுக்கு சென்றனர்.
புதிய படித்துறை, பழைய படித்துறை இரண்டுக்கும் இடையில் உள்ள கொம்பனை என்ற இடத்தில் முதலாவதாக சிவன் தீபத்தை பாபு சிவாச்சாரியார் பக்தர்களின் கரகோசத்துக்கிடையே ஆற்றில் விட்டார். அதனை தொடர்ந்து ராஜா பட்டாச்சாரியார் கோவிந்தா, கோவிந்தா என்ற கரகோசத்துக் கிடையே பெருமாள் தீபத்தை ஆற்றில் விட்டார். தீபம் ஆற்றில் மிதந்து செல்வதை பக்தர்களும், பொதுமக்களும் தொலைவில் நின்று வணங்கி வழிபட்டனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கோவில் செயல் அலுவலர் இரா.சுகுமார் (கூடுதல் பொறுப்பு) முன்னிலையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
- இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார்.
- இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு நஞ்சைஊத்துக்குளியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சரஸ்வதி (30). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சரஸ்வதி அடிக்கடி முன்கோபம்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மேலும் அடிக்கடி சுவற்றில் முட்டிக் கொள்வார். காரணமே இல்லாமல் கணவருடன் கோபித்துக் கொண்டு அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார். பின்னர் சமாதானப்படுத்தி உறவினர்கள் அழைத்து வருவார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சரஸ்வதியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப் பணம் ரூ.36, 190 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் சிவகாமி என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள கால் நடை வளர்ப்புப் பகுதியில் பணம் கட்டி சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பெருந்துறை சப்- இன்ஸ்பெக்டர் செந்தி ல்குமார் தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது அதேப் பகுதியைச் சேர்ந்த சிவகாமியின் மகன் தினேஷ்குமார் (30) மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
மேலும், சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 8 சேவல்கள், சேவல்களின் கால்களில் கட்டப்படும் கத்திகள் 21 மற்றும் சேவல்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், சூதாட்டப் பணம் ரூ.36, 190 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளையும் நாய்கள் கடித்து இறந்தது.
- மேலும் துரை, பாலு ஆகியோரது 4 ஆடுகளையும் செல்வராஜ் என்பவரது கன்று குட்டியும் நாய்கள் கடித்து இறந்து விட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் புதூர் மேற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (65). இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றார்.
இந்த நிலையில் நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அவரது ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து கடித்ததில் 7 ஆடுகள் இறந்து விட்டது. இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளையும் நாய்கள் கடித்து இறந்தது.
மேலும் துரை, பாலு ஆகியோரது 4 ஆடுகளையும் செல்வராஜ் என்பவரது கன்று குட்டியும் நாய்கள் கடித்து இறந்து விட்டது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளும், வீடுகளில் ஆடுகள் வளர்ப்போரும் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்தோடு உள்ளனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் இடம் தெரிவித்தனர். மேலும் பிரம்மதேசம் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி உள்ளனர். தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரம்மதேசம் புதூர் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்தியூர் பேரூராட்சியில் தெரு நாய் பிடிப்பதற்கு கேட்டுள்ளனர். ஒரு நாய் பிடிப்பதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் அந்த நாய்களை பிடிக்க ஒரு மாத காலம் ஆகும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் மிகுந்த வேதனையோடும் அச்சத்தோடும் உள்ளனர்.
- சரியாக படிப்பு வராத ஷபீனா சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) தின்று உள்ளார். மறுநாள் காலையில் ஷபீனா தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார்.
- இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் பசீர்அகமது. இவரது மகள் ஷபீனா (16). இவர் கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் நடந்த தேர்வில் மாணவி ஷபீனா மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் ஷபீனாவை அடிக்கடி டி.வி. பார்க்காதே என்று கண்டித்தும், நன்றாக படி என்றும் அறிவுரை கூறி வந்தனர்.
சரியாக படிப்பு வராத ஷபீனா சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) தின்று உள்ளார். மறுநாள் காலையில் ஷபீனா தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார். இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது தான் எலி பேஸ்ட் விஷத்தை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஷபீனாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென இறந்து விட்டார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஓடாநிலையில் தீரன்சின்னமலை முழுஉருவச்சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- தீரன்சின்னமலை வாரிசுதார்கள் மற்றும் ஓடாநிலை பகுதி மக்களுக்கு கவர்னர் சான்றிதழ் வழங்கினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். தீரன்சின்னமலை மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தீரன்சின்னமலை முழுஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் போது தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பழனி சாதுசுவாமிகள் திருமட மடாதிபதி சாது சண்முக அடிகளார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தீரன் சின்னமலை முழு உருவச்சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஓடாநிலை அருகே தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில் நடந்த தீரன்சின்மலை 217-வது நினைவேந்தல் நிகழ்வில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பின்னர் தீரன்சின்னமலை வாரிசுதார்கள் மற்றும் ஓடாநிலை பகுதி மக்களுக்கு கவர்னர் சான்றிதழ் வழங்கினார்.
அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் சிறந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் நினைவு நாளில் பங்கேற்பது பெருமையாக உள்ளது. இந்திய சுதந்திரத்துக்காக தீரன் சின்னமலை தனது உயிரை தியாகம் செய்தவர். நமது நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்வை இழந்தவர்களையும், ரத்தம் சிந்தியவர்களையும் மறக்க கூடாது. நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை நாம் ஒருபோதும் மறக்க கூடாது. தீரன் சின்னமலைக்கு நாம் நன்றி செலுத்தும் வகையில் சிறந்த பாரதத்தை உருவாக்க வேண்டும்.
நண்பர்களே, தமிழ் மிகவும் பழமையான மொழி. மிகவும் அழகான மொழி. தமிழ் மக்களைப்போன்று நானும் தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது. விரைவில் நானும் உங்களைப்போன்று சரளமாக தமிழில் பேசுவேன் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
- பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.29 அடியாக உள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கடந்த 4 நாட்கள் முன்பு 100 அடியை கட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்ததால் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.29 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,327 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக 300 கன அடியும்,
பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 405 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5 -வது ஆண்டாக பவானிசாகர் அணை 101 அடியை எட்டி உள்ளது. பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்த பொதுப்பணி துறையால் வகுக்கப்பட்ட விதியின் அடிப்படையில் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது பவானிசாகர் அணையின் அடி 101 அடியை தாண்டி உள்ளதால் இன்னும் ஒரு நாளில் 102 அடியை எட்டி விடும்.
இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள பாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கையொட்டி பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை மேல் பகுதியில் பொதுப்பணித்துறை, வருவாய் துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
- இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை
1 லட்சத்து 34 ஆயிரத்து 354 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 150 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






