காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார்.இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
Published on

மொடக்குறிச்சி:

ஈரோடு நஞ்சைஊத்துக்குளியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சரஸ்வதி (30). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சரஸ்வதி அடிக்கடி முன்கோபம்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மேலும் அடிக்கடி சுவற்றில் முட்டிக் கொள்வார். காரணமே இல்லாமல் கணவருடன் கோபித்துக் கொண்டு அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார். பின்னர் சமாதானப்படுத்தி உறவினர்கள் அழைத்து வருவார்கள்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சரஸ்வதியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com