என் மலர்

  நீங்கள் தேடியது "A young woman"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவர் வீட்டிற்கு வராமல் கள்ளக்காதலி வீட்டில் இருந்ததால் ஆத்திரத்தில் தாக்கினார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை:

  கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கோவிந்தநாயக்கன்பா ளையத்தை சேர்ந்தவர் 38 வயது வாலிபர். கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

  இந்தநிலையில், வாலிபருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 37 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

  இவர்களது கள்ளக்காதல் விவகாரம், வாலிபரின் மனைவிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது கணவரை கண்டித்தார்.

  ஆனால் அவர் அதனை கண்டு கொள்ளாமல் கள்ளக்காதலியுடனான பழக்கத்தை தொடர்ந்தார். அதன்பிறகு தனது வீட்டிற்கு வருவதையும் தவிர்த்த வாலிபர் எப்போதும் கள்ளக்காதலியின் வீட்டிலேயே இருந்தார்.

  தனது கணவர் குடும்பம் நடத்துவதற்கு பணம் தராமல் எந்நேரமும் கள்ளக்காதலியின் வீட்டில் இருப்பதால் வாலிபர் மனைவி கோபம் அடைந்தார். கணவரின் கள்ளக்காதலியை சந்தித்து, இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த அவர், சம்பவத்தன்று, தனது கணவரின் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றார்.

  அங்கு அவரிடம், தனது கணவருடனான கள்ளக்காதலை கைவிட வேண்டும். இனி அவருடன் பேசக்கூடாது என கூறினார்.

  அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபரின் மனைவி, கள்ளக்காதலியை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

  இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், காயம் அடைந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் பெரியநாயக்கன்பாளையம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த சில மாதங்களாக பவித்ராவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.
  • இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  ஈரோடு:

  கவுந்தப்பாடி சலங்கபாளையம், மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி பவித்ரா(22). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

  இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக பவித்ராவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.

  இந்நிலையில் சம்பவத்தன்று கணவர் கலையரசன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த பவித்ரா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார்.
  • இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மொடக்குறிச்சி:

  ஈரோடு நஞ்சைஊத்துக்குளியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சரஸ்வதி (30). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

  சரஸ்வதி அடிக்கடி முன்கோபம்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மேலும் அடிக்கடி சுவற்றில் முட்டிக் கொள்வார். காரணமே இல்லாமல் கணவருடன் கோபித்துக் கொண்டு அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார். பின்னர் சமாதானப்படுத்தி உறவினர்கள் அழைத்து வருவார்கள்.

  இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சரஸ்வதியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

  இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×