search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "falling into the river"

    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சிவன்-பெருமாள் தீபம் ஆற்றில் விடும் விழா நடந்தது.
    • இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கோவில் செயல் அலுவலர் இரா.சுகுமார் (கூடுதல் பொறுப்பு) முன்னிலையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயணப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுபவது வழக்கம். கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சிவன்-பெருமாள் தீபம் ஆற்றில் விடும் விழா நடந்தது.

    இதனையொட்டி மகுடேசுவரர், வடிவுடையநாயகி அம்பாள், வீர நாராரயணப் பெருமாள், ஶ்ரீ தேவி-பூதேவி, உற்சவ மூர்த்திகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்து வீதி உலா வர முன்பாக சிவன் தீபத்தை கோவில் முதன்மை சிவாச்சாரியார் பாபுசுவாமிகள், பிரபு சுவாமிகள் எடுத்து வந்தனர்.

    பெருமாள் தீபத்தை கோவில் முதன்மை பட்டாச்சாரியார் ஸ்ரீதர் முன்னிலையில் ராஜா சுவாமிகள் காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்தார். ஆற்றங்கரை ஓரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    காவிரி ஆற்றங்கரைப் பகுதிக்கு பொது மக்கள், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார், பட்டாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் காவிரி ஆற்றுக்கு சென்றனர்.

    புதிய படித்துறை, பழைய படித்துறை இரண்டுக்கும் இடையில் உள்ள கொம்பனை என்ற இடத்தில் முதலாவதாக சிவன் தீபத்தை பாபு சிவாச்சாரியார் பக்தர்களின் கரகோசத்துக்கிடையே ஆற்றில் விட்டார். அதனை தொடர்ந்து ராஜா பட்டாச்சாரியார் கோவிந்தா, கோவிந்தா என்ற கரகோசத்துக் கிடையே பெருமாள் தீபத்தை ஆற்றில் விட்டார். தீபம் ஆற்றில் மிதந்து செல்வதை பக்தர்களும், பொதுமக்களும் தொலைவில் நின்று வணங்கி வழிபட்டனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கோவில் செயல் அலுவலர் இரா.சுகுமார் (கூடுதல் பொறுப்பு) முன்னிலையில் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    ×