என் மலர்
தர்மபுரி
- கபினி அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 350 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்:
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
5-வது நாளாக நேற்று கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவான 124.80 அடி எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 72 கனஅடியாக திறக்க ப்பட்டுள்ளது.
இதேபோல், கபினி அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 350 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5 ஆயிரத்து 420 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 29 ஆயிரத்து 256 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று அது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு 24 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 16 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆறு, அருவியில் குளிக்க 7- நாட்களுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து ள்ளது. 6 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறை களுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்த னர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பி ட்டு மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் யாராவது குளிக்கிறார்களா என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக இரு அணைகள் இந்த ஆண்டில் 4-வது முறையாக நிரம்பின.
3-வது நாளாக நேற்றும் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவான 124.80 அடியுடன் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 79 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 29 ஆயிரத்து 822 கனஅடி திறக்கப்பட்டது.
இதேபோல், கபினி அணையின் நீர்மட்டம் 2,283.96 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 709 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 583 கனஅடி திறக்கப்பட்டது.
இந்த இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 32 ஆயிரத்து 405 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையானது தொடர்ந்து 6-வது நாளாக நீடிக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 5-வது நாளாக நீடிக்கிறது.
இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்து காவிரி ஆற்றின் கரையில் நின்றவாறு ஆற்றில் பாய்ந்து ஓடும் தண்ணீரை ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மீன் சாப்பாடு, பொறித்த மீன்கள் வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் யாராவது குளிக்கிறார்களா என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பா.ம.க. தலைவர் ராமதாஸ், பா.ம.க. செயல்தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என அறிவித்தார்.
- கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்று ராமதாஸ் தெரிவித்தார்.
பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
தொடர்ந்து, தருமபுரியில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க. தலைவர் ராமதாஸ், பா.ம.க. செயல்தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என அறிவித்தார்.
கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
பா.ம..க செயல்தலைவர் பதவியில் இருந்து மகன் அன்புமணியை நீக்கிய ராமதாஸ் அந்த பதவியை மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்கி அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், பதவி நியமனத்திற்கு பின்னர் ஸ்ரீகாந்தி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," பாமக செயல் தலைவர் பதவியை அய்யா எனக்கு தருவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. பாமகவின் வளர்ச்சிக்கு உறுதியாக பாடுபடுவேன்" என்றார்.
- ராமதாஸ் கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
- கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்று அவர் தெரிவித்தார்.
பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தருமபுரியில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க. தலைவர் ராமதாஸ், பா.ம.க. செயல்தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என அறிவித்தார்.
கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
பா.ம..க செயல்தலைவர் பதவியில் இருந்து மகன் அன்புமணியை நீக்கிய ராமதாஸ் அந்த பதவியை மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பின.
இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரத்து 750 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி என மொத்தமாக 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 41 ஆயிரத்து 750 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் இந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 65 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையானது தொடர்ந்து 5-வது நாளாக நீடிக்கிறது. இதேபோல் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒகேனக்கல்:
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரத்து 994 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று காலை அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் கர்நாடக மாநிலத்திலும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 23 ஆயிரத்து 994 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து அதிகரித்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையானது தொடர்ந்து 4-வது நாளாக நீடிக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.
- காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடையானது தொடர்ந்து 3-வது நாளாக நீடிக்கிறது.
- பரிசல் இயக்க தடை 2-வது நாளாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்:
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 2 அணைகளும் முழுமையாக நிரம்பி உள்ள நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரத்து 994 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடையானது தொடர்ந்து 3-வது நாளாக நீடிக்கிறது. மேலும் பரிசல் இயக்க தடை 2-வது நாளாக நீடிக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு.
- வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், கனமழை பாதிப்பு எதிரொலியால் அங்கன்வாடி மையங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 15ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது.
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக காணப்படுகிறது.
இதில் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.),கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் மொத்தம் வினாடிக்கு 18,900 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
இந்த நீர்வரத்து பிலிகுண்டுலு வழியாக தமிழகம் வந்தடைந்தது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்றுமாலை நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக வந்தது. தற்போது நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், 2-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஸ் தடை விதித்துள்ளார்.
இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருவியில் குளிக்க தடைவிதிப்பால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையில் நின்றவாறு ஆற்றில் ஓடும் தண்ணீரை ரசித்து பார்த்தனர்.
பின்னர் அவர்கள் மீன்சாப்பாடு, பொறித்த மீன்கள் வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் யாராவது குளிக்கிறார்களா என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
மேலும் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகளவு திறக்கப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஒகேனக்கல்:
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.
இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 20 ஆயிரமாக வந்த நீர்வரத்து இன்று காலை 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்தது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 8 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 9,500 கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 9 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






