என் மலர்
கடலூர்
பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதை எதிர்த்து காவிரி டெல்டா மாவட்டங்களில் 29-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் சங்க குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம்:
கடலூர், நாகை மாட்டங்களை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விழிப்புணர்வு பிரசார பயணம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பிரசார குழுவினர் கடந்த 7-ந் தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் பிரசாரம் செய்தனர்.
நேற்று மாலை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகைக்கு வந்தனர். பின்னர் சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க அவைகளை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நாம் போராடி கொண்டிருக்கிறோம். ஆனால், இங்கு ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய ரசாயன மண்டலம் ஆகிய திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
பெட்ரோலிய ரசாயன மண்டல பணிகள் நாகை, கடலூர் மாவட்டங்களில் 47 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்படும்.
இதனை எதிர்த்து தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 29-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் தஞ்சை மண்டல தலைவர் ராஜேந்திரன், கடலூர் மாவட்ட தலைவர் விநாயக மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மழை கொட்டியது. இதில் இடி தாக்கி மீனவர் ஒருவர் இறந்து உள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்துள்ள பூ.மாணம்பாடியை சேர்ந்தவர் சங்கர் (வயது 50), மீனவர். இவர் நேற்று இரவு பைபர் படகில் பூ.மாணம்பாடி வெள்ளாற்றின் முக துவாரத்தில் மீன் பிடிக்க சென்றார்.
அப்போது புவனகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
வெள்ளாற்றின் முக துவாரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த சங்கரின் பைபர் படகில் இடி தாக்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த தகவல் அவரது குடும்பத்துக்கு தெரிய வந்ததும் அவர்கள் கதறி அழுதனர்.
இடி தாக்கி மீனவர் இறந்த தகவல் பரங்கிப்பேட்டை போலீசாருக்கு இன்று காலை தெரிய வந்தது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று வெள்ளாற்றின் முகத்துவாரத்தில் இறந்து கிடந்த சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இடி தாக்கி மீனவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருத்தகிரீஸ்வரர் கோவில் சிலைகள் திருட்டு தொடர்பான வழக்கில் விருத்தாசலம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுபாஷ் கபூர் ஆஜரானார்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள அர்த்தநாரீஸ்வரர், பிரத்யங்கரா தேவி, கணபதி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி ஆகிய கற்சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது தொடர்பாக சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர், லட்சுமி நரசிம்மன், ஊமைத்துரை, அண்ணாதுரை, வல்லபபிரகாஷ், ஆதித்யபிரகாஷ் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் திருச்சியிலும், சிலர் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விருத்தாசலம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சி மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து விருத்தாசலம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயகுமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். அங்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்ததும் சுபாஷ் கபூர் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்தது. தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால் 50 கிராமங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 1½ ஆண்டுகளாக மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் அவதியடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கடலூர் மாவட்டத்தில் இரவிலும், பகலிலும் பரவலாக மழை பெய்தது. திடீரென்று கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது.
கடலூர், பண்ருட்டி, கீழிருப்பு, மேலிருப்பு, மேட்டுக்குப்பம், காட்டுப்பாளையம், வீசூர், முத்தாண்டிக்குப்பம், நெய்வேலி போன்ற பகுதிகளில் 4 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது.
பண்ருட்டி பகுதியில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கருக்கை-வீசூர் சாலையில் இருந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. அதில் பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் உடைந்து சேதமாகின.
மேலும் வெள்ளவாரி ஓடை பகுதியில் மழை ஏற்படும் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இருபுற கரைகளில் ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மணல் மூட்டைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அதுபோல பெரிய காட்டுப்பாளையத்தில் பெரியஓடையில் பாலம் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்த பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் இதன் அருகே பொதுமக்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக புறவழிச் சாலையும் சேதமடைந்தது.
பாலங்கள் மழையால் அடித்துச் செல்லப்பட்டதால் பண்ருட்டியில் இருந்து சேந்தநாடு, வீசூர், பெரியக்காட்டுப்பாளையம் வழியாக நெய்வேலி செல்லக்கூடிய வாகன போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் 50 கிராமங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.
இந்த நிலையில் பண்ருட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைந்த கரை பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடலூர் மற்றும் பண்ருட்டி பகுதிகளில் நேற்று நள்ளிரவும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

இந்த தொடர் மழையால் வீசூர் மற்றும் கருக்கை, பண்ருட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், கம்பு, மணிலா உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் 300 ஏக்கர் அளவில் பாதிப்படைந்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சவுக்கு தோப்புக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பலத்த மழை பெய்த போது காட்டாற்று வெள்ளத்தில் பண்ருட்டி அருகே உள்ள வீசூர், பெரியகாட்டுப்பாளையம் ஆகிய 2 கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அதே பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

விசூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதை விவசாயிகள் காண்பித்த காட்சி.
இந்த தொடர் மழையால் வீசூர் மற்றும் கருக்கை, பண்ருட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், கம்பு, மணிலா உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் 300 ஏக்கர் அளவில் பாதிப்படைந்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சவுக்கு தோப்புக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பலத்த மழை பெய்த போது காட்டாற்று வெள்ளத்தில் பண்ருட்டி அருகே உள்ள வீசூர், பெரியகாட்டுப்பாளையம் ஆகிய 2 கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அதே பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
கம்மாபுரத்தில் மருத்துவம் படிக்காமல் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 60) இவர் மருத்துவம் படிக்காமல் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார துறையினருக்கு புகார் சென்றது.
இதையடுத்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கம்மாபுரத்தில் உள்ள ராமசந்திரன் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவரிடம் மருத்துவம் படித்தற்கான உரிய சான்றிதழ் எதுவும் இல்லை.
இதையடுத்து அவரை கம்மாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராமசந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நடந்து சென்ற பெண்ணை தாக்கி 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மனைவி கொளஞ்சியம்மாள்(வயது 30). இவர் இன்று காலை அருகில் உள்ள அய்யனார்பாளையத்தில் வசித்து வரும் தனது உறவினரை பார்க்க நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று கொளஞ்சியம்மாள் அருகே வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் கொளஞ்சியம்மாளை தாக்கி அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கி நகை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

நெய்வேலியில் வேலை தேடி திருச்சிக்கு சென்ற பட்டதாரி வாலிபர் மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் பகுதியை சேர்ந்தவர் விஜயரங்கன். இவரது மகன் மனோஜ் பாபு (வயது 26). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலை தேடி திருச்சிக்கு சென்றார். அதன் பின்னர் மனோஜ்பாபு வீடு திரும்ப வில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மகனை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை.
இதனை தொடர்ந்து அவரது தாய் அனுஜா தேவி நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மனோஜ் பாபுவை தேடி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடியிருக்க வேண்டும் என கலெக்டர் ராஜேஷ் அறிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15-ந் தேதி சுதந்திர தினத்தன்று கடலூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடியிருக்க வேண்டும்.
இதனை மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர் பேரிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடலூரில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜி என்கிற யாசிம் (வயது 26). இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலையில் அவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து பெற்றோர்அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து புதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விஜிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோய் குணமாகாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜனதா கட்சிகள் கைகோர்த்துள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று நெய்வேலி கூட்டத்தில் பிரகாஷ்கரத் கூறினார்.
நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் தனியார் மயத்தை தடுத்திடவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெய்வேலியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜனதா கட்சிகள் கைகோர்த்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு மத்திய பா.ஜனதா அரசிடம் மாநில அரசு எந்தவித உதவிகளையும், உரிமைகளையும் கேட்டு பெறவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்.
இந்தியா 70-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. தற்போது மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் சுதந்திர போராட்டத்தில் துளிஅளவுகூட பங்கு இல்லை. சுதந்திர இந்தியாவில் பொருளாதார கொள்கை உருவாக்கப்பட்ட போது அதில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
அப்படி உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றுதான் நெய்வேலி என்.எல்.சி. ஆகும். மத்திய ஆளும் பா.ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் பணிகளை செய்து வருகிறது. நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஒன்றுபட்டு வருகின்றனர். நாட்டில் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

டாஸ்மாக் ஊழியரிடம் மர்ம மனிதர்கள் ரூ.3½ லட்சத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள சின்னாண்டிகுழியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் புதுசத்திரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வசூலான பணம் ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர். புதுசத்திரம் ரெயில்வே கேட் பகுதியை கடப்பதற்காக மோட்டார் சைக்கிளை கருணாநிதி மெதுவாக இயக்கினார்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்ம மனிதர்கள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை கருணாநிதியின் மோட்டார் சைக்கிள் மீது மோத விட்டனர்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கருணாநிதி காயம் அடைந்தார். இதை பயன்படுத்தி மர்ம மனிதர்கள் கருணாநிதி வைத்திருந்த ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
காயமடைந்த கருணாநிதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து புதுசத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அருகே ஆம்னி பஸ் வாய்க்காலில் பாய்ந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 35 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சிதம்பரம்:
சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர்.
சிதம்பரத்தை அடுத்த பு.உடையூர் பகுதியில் அந்த பஸ் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோர வளைவில் திரும்பும்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது.
இதை அறிந்த பயணிகள் அலறினர். பின்னர் பஸ்சில் இருந்த அவசரகால வழி வழியாக அனைவரும் பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். இந்த விபத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.