என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பூர் அருகே பெண்ணை தாக்கி 8 பவுன் நகை பறிப்பு
    X

    வேப்பூர் அருகே பெண்ணை தாக்கி 8 பவுன் நகை பறிப்பு

    வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நடந்து சென்ற பெண்ணை தாக்கி 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மனைவி கொளஞ்சியம்மாள்(வயது 30). இவர் இன்று காலை அருகில் உள்ள அய்யனார்பாளையத்தில் வசித்து வரும் தனது உறவினரை பார்க்க நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று கொளஞ்சியம்மாள் அருகே வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

    பின்னர் அவர்கள் கொளஞ்சியம்மாளை தாக்கி அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கி நகை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×