என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அம்புஜவல்லிபேட்டையில், இரண்டு குடும்பத்தினருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு இன்று சிகிச்சைக்காக வந்தனர்.
அப்போது, இரு தரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதனால் பயந்துபோன மற்ற நோயாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் போலீசார் வந்து இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தினர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #VirudhachalamClash
இந்த கோவில் வைஷ்ணவ தலங்களில் சிறப்பு பெற்றதாகும். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்துநாள் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
அதில் ஏழாவது நாள் தேர்திருவிழா வர்த்தக சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிவீதி உலாநடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
அதனை முன்னிட்டு இன்று அதிகாலை பூவராகபெருமாள் மற்றும் அம்புஜவல்லி தாயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடந்து உற்சவர் சாமிகளான எக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவி தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பின்னர் தேரில் வீற்றியருளச்செய்தனர்.
இதையடுத்து வாண வேடிக்கை மேளக்கச் சேரியுடன் தேரோட்டம் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்திபரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்,
விழாவையெட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்கலால் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.
19-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர் கலந்து கொள்கின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த எடக்குப்பம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி லெனின் தலைமையினான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 12 மூட்டைகள் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். உடன் லெனின் தலைமையிலான அதிகாரிகள் அந்த ஆட்டோவை குட்கா மூட்டைகளுடன் பறிமுதல் செய்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். தாசில்தார் கவியரசு அதிகாரி லெனினிடம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
உடன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விருத்தாசலம் போலீசார் பறிமுதல் செய்த இடம் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிக்கு அப்பாற்பட்ட இடம் எனக் கூறினார்கள். இதனால் நிலையான கண்காணிப்புக்குழு ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் விளாங்காட்டூர் தாமோதரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். #Gutkhaseized #LSPolls
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை சண்முகா கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 21) வேன் டிரைவர்.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் விஜயகுமார் கிடைக்கவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே விஜய குமார் கடப்பாரையால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விஜயகுமாரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
விஜயகுமாரை கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடலூர் உழவர் சந்தையில் அம்மா மக்கள் முன்னேற்றகழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார்.
பாரதிய ஜனதாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கூறியவர் ஜெயலலிதா. அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றம் சென்றதோடு ஜெயலலிதா உயிரோடு இருந்தால் சிறைக்கு சென்றிருப்பார். என்று கூறியவர்கள் பா.ம.க. வினர். அவர்களுடன் தமிழகத்தை ஆளுவோர் கூட்டணி வைத்துள்ளனர்.
ஜெயலலிதா இருக்கும் வரை ஜி.எஸ்.டி. வரியை தடுத்து வந்தார்.
மதச்சார்பற்ற கூட்டணி எனக் கூறும் தி.மு.க. இந்து மதத்தை விமர்சித்து வருகிறது. தற்போது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் தி.மு.க.வை. கைவிட்ட நிலையில், இந்துக்களுக்கு நாங்கள் விரோதியல்ல, எங்கள் வீட்டு பெண்களும் கோவிலுக்கு செல்வார்கள் என்று கூறி வருகிறார் மு.க.ஸ்டாலின்.
எந்த மதத்தினரும் யாரையும் தரம் தாழ்த்துவது இல்லை. ஆனால் தாங்கள்தான் இந்து மதத்தை கண்டுபிடித்தவர்கள் போல பாரதிய ஜனதா கட்சியினர் கூறிக்கொள்கின்றனர். இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என்று கூறுகின்றனர்.
தி.மு.க. இந்து எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளது. அரசியல்வாதிகள் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
நீட் தேர்வு, குடிநீர், மீனவர் பிரச்சினை, என்.எல்சி. நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை, விவசாயவிளை பொருள்களுக்கு விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
இதுகுறித்து அரசியல்வாதிகள் பேச வேண்டும். தற்போது தமிழகத்தை மட்டுமன்றி இந்தியாவையும் மீட்க வேண்டிய நிலைஉள்ளது. தமிழகத்தில் படித்த இளைஞர்கள் ஒரு கோடிபேர் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள்.
மத்தியில் முந்தைய காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வைப்பு தொகையை தி.மு.க. இழந்தது.
கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது என்பது உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் தான் வெற்றிபெறுவார்கள் என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கிறார்கள்.
ஆனால் உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் 80 சதவீதம் இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தாய்மார்களும், பெரியோர்களும் இன்று புதிய மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். அவர்களும் எங்களை ஆதரிக்கிறார்கள்.
எனவே பொதுமக்கள் ஜாதி, மதம், குறித்துப் பேசு வோரைப் புறக்கணித்து அ.ம.மு.க.வை ஆதரிக்க வேண்டும். மாநில கட்சிகளால் மட்டுமே மாநில பிரச்சினைகளை தீர்க்க முடியும். தேசியக் கட்சிகளை மக்கள் நம்பக் கூடாது. பணம் கொடுத்து மக்களை வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி நீர் வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி 47.50 அடியை எட்டியது.
இங்கிருந்து பாசனத்துக்காக 34 மதகுகள் வழியாகவும், சென்னை குடிநீருக்காக ராட்சத குழாய் மூலமும் 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வெயில் சுட்டெரித்து வருவதாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியது.
கடந்த வாரம் ஏரியின் நீர்மட்டம் 43.20 அடியாக இருந்தது. நீர்மட்டம் 39 அடியாக குறைந்து விட்டால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும் சூழ்நிலை உருவாகியது.
இதைத்தொடர்ந்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 31-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்தது.
பின்னர் கடந்த 4-ந் தேதி கீழணைக்கு தண்ணீர் வந்தது. அங்கிருந்து கடந்த 8-ந் தேதி 2 ஆயிரம் கனஅடி நீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.40 அடியாக உயர்ந்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது.
கீழணையில் இருந்து தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ந்து வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து நேற்று இரவு வீராணம் ஏரி முழுக்கொள்ளவான 47.50 அடியை எட்டியது. இதனால் ஏரி தற்போது கடல்போல் காட்சி அளிக்கிறது. வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து இன்று 1,300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு 59 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லை. வீராணம் ஏரியை நம்பியே சென்னை மக்கள் உள்ளனர்.
வீராணம் ஏரி நிரம்பி உள்ளதால் சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் அளவு விரைவில் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். கோடைகாலத்தில் வீராணம் ஏரி வறண்டு காணப்படும். ஏரியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். இந்த நிலையில் சென்னை குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தற்போது ஏரி நிரம்பி காட்சி அளிக்கிறது. இதைப்பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பி உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். #VeeranamLake
கடலூர்:
கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அய்யப்பனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்தநிலையில் முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் சேர உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அய்யப்பன் வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனையிட்டனர். மேலும் அவரது ஆதரவாளர் பிரகாஷ் உறவினர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் எம்.சி.சம்பத் செயல்பாடு சரியில்லை என்ற காரணத்தினால் நான் அடுத்த கட்ட முடிவுக்கு எனது ஆதரவாளர்களுடன் செல்ல உள்ளேன்.
இது சம்பந்தமாக எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வந்தேன். இந்தக் கூட்டத்தை தடுப்பதற்கும், செல்வாக்கை குறைப்பதற்கும் பொய்யான தகவலின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் எனது வீட்டை சோதனையிட்டனர். அப்போது எனது வீட்டில் ஒன்றும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்து விட்டு சென்றனர்.
எனது செல்வாக்கை குறைப்பதற்கும் எனது தலைமையில் ஆதரவாளர்களை சேர்ப்பதை தடுப்பதற்கும், அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கும் இந்த சோதனை நடந்திருக்கலாம்.
அமைச்சர் எம்.சி.சம்பத் அல்லது அவரின் ஆதரவாளர்கள் தூண்டுதல் பேரில் இங்கு சோதனை நடந்து இருக்கும். ஏனென்றால் எனக்கு எங்கும் எதிரிகள் இல்லை. அடுத்த கட்ட முடிவு எடுத்த பிறகு நான் முழு வீச்சில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அ.தி.மு.க.வில் இருந்து நான் செல்வதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத்தின் குடும்ப அரசியல், நிர்வாகிகளை மதிக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.
மேலும் எங்களது கோரிக்கைகளை தலைமையிடம் தெரிவித்தோம். ஆனால் கடலூர் மாவட்டத்திற்கு வந்திருந்த முதலமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேசவில்லை. மேலும் இதற்கு நடவடிக்கை எடுத்து தீர்வு ஏற்படுத்த வில்லை. இதனால் தான் நாங்கள் அடுத்தகட்ட முடிவுக்குச் செல்ல உள்ளோம். மேலும் எங்களை அழைத்து பேசுவார்கள் என காத்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு எம்.எல்.ஏவாக இருந்தேன். எனக்கு ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் இருந்து வருகின்றனர். ஆகையால் என் மீது இனி வருங்காலங்களில் அமைச்சர் எம்.சி.சம்பத் பொய் புகார் அளிப்பார்.
நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகிவிட்டேன். ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டேன்.
முன்னாள் எம்.எல்.ஏ. துரை அன்பரசன், மாவட்ட மகளிரணி செயலாளர் நாகரத்தினம், பொதுக்குழு உறுப்பினர் நெல்லிக்குப்பம் காசிநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டனர்.
அதற்கான கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக்கு அனுப்பி உள்ளார்கள். மேலும் இனி வரும் காலங்களில் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகும் கடிதத்தை தலைமைக்கு அனுப்ப உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #ministermcsampath #exmlaayyappan
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்துசேரும். மழைக் காலத்தில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி 47.50 அடியை எட்டியது. சென்னைக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வெயில் சுட்டெரித்து வருவதாலும், வீராணம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும் தற்போது ஏரி வறண்டுவரும் நிலை ஏற்பட்டது. சென்னைக்கு குடிநீர் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 30-ந் தேதி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணை வழியாக கீழணை வந்தது. அங்கிருந்து கடந்த 7-ந் தேதி அதிகாலை முதல் வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரதொடங்கியது.
இதை தொடர்ந்து வீராணம் ஏரியில் நீர் மட்டம் உயர தொடங்கியது. இந்த நிலையில் கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு இன்று காலை 2,400 கன அடி நீர் வந்தது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.03 அடியாக இருந்தது. ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 46.25 அடியாக உயர்ந்து உள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து நேற்று சென்னைக்கு 62 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று 60 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
ஏரிக்கு இதே அளவு தண்ணீர் கீழணையில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் இன்னும் 4 நாட்களில் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டும். அதன் பிறகு இங்கிருந்து சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #VeeranamLake






