என் மலர்
கடலூர்
- சாரங்கபாணி மகன் ஜெகவீரப்பாண்டியன் என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடைபெற்றது.
- புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடலூர்:
விருத்தாச்சலம் தாலுக்கா நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் வனிதா என்பவருக்கும் பண்ருட்டி தாலுக்கா மேலிருப்பு கிராமம் சாரங்கபாணி மகன் ஜெகவீரப்பாண்டியன் என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் 2 வருடம் வாழ்ந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது மனைவி வனிதாவினால் தனக்கும் தனது குடும்பத்தில் உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளுக்கும் பிரச்சனை அடிக்கடி வருவதை தவிர்க்க வேண்டி தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மனுதாரர் வனிதா தனது கணவரை காணவில்லை என காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 23.01.2019 ல் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காணாமல் போனவரை கண்டுபிடித்து வனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வனிதா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தி்ல் தனது கணவர் அவரது குடும்பத்துடன் சேர்ந்து வரதட்சணை கேட்டுதுன்புறுத்துவதாக போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினமே வனிதாவின் கணவர் ஜெகவீரபா ண்டியன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளி வந்தவர் நிபந்தனை ஜாமினின் பேரில் 30 நாட்கள் தினந்தோறும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுள்ளார். தற்போது 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளிநாடு (கத்தார்) சென்று விட்டார்.
இந்த தகவல் அவரது மனைவி வனிதாவிற்கு நன்குதெரியும் ஆனால் அவர் வெளிநாடு சென்றது பிடிக்காமல் அவரக்கு மன உளைச்சல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் .மேற்படி வனிதா 23.11.2022 ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019 ல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என கொடுத்த புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தனது கணவர் உயிருடன் உள்ளாரா அல்லது உறவினர்களால் கொல்லப்பட்டாரா என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது சம்மந்தமாக காடாம்புலியூர் காவல் துறையினர் மேலிருப்பு கிராமம் சென்று ஜெகவீரபாண்டியனின் உறவினர்களிடம் விசாரணை செய்ததில் அவர் வெளிநாடு கத்தாரில் உள்ளதாகவும், அவருடன் வீடியோ காலில் பேசி அவருக்கும் அவரது மனைவிக்குமான பிரச்சனைக்கான காரணம் அறிந்து அவர் பேசிய வீடியோ வாக்குமூல பதிவினை பதிவு செய்யப்பட்டது. இந்த பதிவினை போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பித்த உடன் நீதிமன்றம் சார்பில் மேற்படி காணாமல் போன ஜெகவீரபாண்டியனிடம் வீடியோ காலில் பேசி உண்மை தன்மையை வெளிப்படுத்தினார். இதனை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் உண்மையை புரிந்து கொண்டு மேற்படி மனுதாரர் மீது நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாலும் காவலர்களை அலைக்க ழித்ததாலும் உண்மைக்கு புறம்பான மனுவினை சுய லாபத்திற்க்காக பயன்படுத்தியதற்க்காக ரூ. 50,ஆயிரம்அபராதம் 4 வார காலத்திற்க்குள் கட்ட வேண்டும். அப்படி தவறு்ம் பட்சத்தில் சிறைதண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் மேலும் இந்த மனு வினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடியில் இருந்து நெய்வேலிக்கு சென்றனர்.
- சுகுமாருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சி ப்பாடி அயன்குடி கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 45). என்.எல்.சி.யில் வேலைபார்த்து வந்தார். இவரது நண்பர் ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த சுகுமாறன். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடியில் இருந்து நெய்வேலிக்கு சென்றனர். வடலூர் சந்திப்பில் சென்ற போது அதே சமயம் பார்வதிபுரத்தை சேர்ந்த என்.எல்.சி. தொழிலாளி சந்திரகலா (38) என்பவரும் மொபட்டில் வந்தார்.
அப்போது இருவரும் சாலையோரம் வழிவிடுவதற்காக செல்லும்போது அந்த சமயத்தில் டிப்பர் லாரி வேகமாக வந்தது. இந்த லாரி மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது ேமாதியது.இந்த விபத்தில் திருமுருகன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுகுமாறன், சந்திரகலா ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வரும் வழியில் சந்திரகலா பரிதாபமாக இறந்தார். சுகுமாருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பஸ் நிலையம் முழுவதும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
- வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரம் கைக்கலப்பாக மாறுவது வழக்கமாக உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அண்ணா பஸ்நிலையத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல கோடிக்கணக்கில் செலவு செய்து பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பஸ் நிலையம் முழு வதும் 150 -க்கும் மேற்பட்ட தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்டவை பஸ் நிலையம் முழுவதும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். பஸ் நிலையம் அருகில் காய்கறி மார்க்கெட் உள்ளது.தள்ளு வண்டியில் போட்டி போட்டுக் கொண்டு பஸ் நிலையம் முழுவதையும் தள்ளுவண்டி வியாபாரிகள் தங்கள் வசம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்கள், திட்டக்குடி பகுதியை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறு குரு விவசாயிகள், வணிகர்கள் பல தரப்பினரும் திட்டக்குடி பஸ்நிலையம் உள்பகுதியில் செல்ல முடியாமல் அன்றாடம் தள்ளுவண்டிகாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரம் கைக்கலப்பாக மாறுவது வழக்கமாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பலமுறை திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. போலீசார் மாலை நேரத்தில் 15 அல்லது 30 நிமிடங்கள் மட்டுமே பஸ் நிலையத்திற்கு வருகை தந்து விட்டு சென்று விடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. போலீசார் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தால் மட்டும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மாலை நேரங்க ளில் அரசு பள்ளி மாணவ, மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாண வர்கள் அதிக அளவில் பஸ் நிலையத்திற்கு வருகை தருவ தால் மாணவிகள், மாண வர்கள் நின்று பஸ் ஏற முடியாத சூழ்நிலை அன்றாட காட்சி பொருளாக உள்ளது. பஸ்நிலையத்தில் அன்றாடம் பயணிக்கும் பெண்களிடம் பையில் உள்ள பொருட்கள் திருடுவது அவர்கள் போலீசில் புகார் அளிப்பது தொடக்கதையாக உள்ளது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பஸ் நிலையத்தில் தினந்தோறும் குறைந்தது மாலை நேரத்தில் 3 மணி நேரம் போலீசார் பணியில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலைய த்தில் உள்ள தள்ளுவண்டி அகற்றி வேறு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விருத்தாசலம் அருகே பஸ்சில் ஏறி மாணவர்களை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல் செய்தனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே சின்னவடவாடியில் இருந்து நேற்று காலை அரசு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு விருத்தாசலத்துக்கு வந்து கொண்டிருந்து. இந்த பஸ் வயலூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தபோது வயலூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கும்பல் பஸ்சில் ஏறி சின்னவடவாடியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியல்செய்தனர்.
இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், சின்னவடவாடி கிராம த்தைச் சேர்ந்த மாணவனு க்கும், வயலூரை சேர்ந்த மாண வனுக்கும் கடந்த 2 தினங்களுக்கு முன் பள்ளியில் தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் வயலூரை சேர்ந்த வாலிபர்கள், பஸ்சில் வந்த மாணவர்களை தாக்கியதாக தெரியவந்தது. இதுகுறித்து சின்ன வடவாடியை சேர்ந்த பள்ளி மாணவன் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்த்(20), ராஜேஷ்(23), அஜித்குமார் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க வயலூர் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு வழியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- குண்டியமல்லூரை சேர்ந்த 15 வயது மாணவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- ஏறிய போது வழியில் நிற்காமல் சற்று வழி விடவும் என கூறியுள்ளார்.
கடலூர்:
கடலூர் அருகே குண்டியமல்லூரை சேர்ந்த 15 வயது மாணவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதேப்பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று குறிஞ்சிப்பாடியில் இருந்து குண்டியமல்லூர் பகுதிக்கு அரசு பஸ்ஸில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் முதலில் ஏறி உள்ளார். இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பின்னால் ஏறிய போது வழியில் நிற்காமல் சற்று வழி விடவும் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் 11-ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு 10-ம் வகுப்பு மாணவன் என்னிடம் சண்டை ஏற்படுத்துவது போல் பேசி சென்றுள்ளார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து குண்டியமல்லூர் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவன் இறங்கி நடந்து சென்ற போது, 11ஆம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் 10-ம் வகுப்பு மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த 10-ம் வகுப்பு மாணவன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் 11-ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பஸ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விருத்தாசலம் அருகே சின்ன வடவாடியிலிருந்து இன்று காலை டவுன் பஸ் பொதுமக்களை ஏற்றி கொண்டு விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த கூட்டம் காரணமாக பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது வயலூர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்து வந்த போது பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவர்கள் மற்றும் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பஸ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் இருதரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். தகவல் அறிந்த அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்ைச அனுப்பி வைத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த 5க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அறிந்த பா.ம. க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள்சாலையில் அமர்ந்து மறியல்செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரசம்செய்தனர்.
- கடலூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஒரு தொழிற்சாலையில் ஒரு கும்பல் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே சிப்காட்டில் தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் சிப்காட்டில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையில் ஒரு கும்பல் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த 650 கிலோ இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடி கொண்டு தப்பி ஓடினர். இதன் மதிப்பு சுமார் 35 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் அங்குள்ள சிசிடிவி சோதனை செய்து பார்த்தபோது நான்கு நபர்கள் உள்ளே வந்து இரும்பு பொருட்கள் திருடியது தெரிய வந்தது.
இது குறித்து தொழிற்சாலை மேலாளர் ராஜேந்திர பிரசாத் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பச்சையாங்குப்பம் சேர்ந்தவர்கள் லட்சுமணன் (வயது 37), முத்துக்குமரன் (வயது 37), துளசிதாஸ் (வயது 22), ஈச்சங்காடு சேர்ந்த பிரகாஷ் (வயது 32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பா.ம.க. வினர் பலமுறை போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- இது சம்பந்தமாக நிர்வாகிகள் தட்டி கேட்ட தற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கடலூர்:
பாமக நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்க ளில் தொடர்ந்து கடலூர் பிள்ளையார் மேடு சேர்ந்த சிவா என்பவர் அவதூறு பரப்பி வந்த நிலையில் பா.ம.க. வினர் பலமுறை போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமை யில் நிர்வாகிகள் திரண்ட னர். பின்னர் கடலூர் முதுநகர் போலீஸ் நிலை யத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பி ரண்டு கரிக்கால் பாரிசங்கர் மற்றும் போலீசார் போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், பிள்ளையார் மேடு செல்வ சிவா என்பவர் பாமக நிர்வாகிகள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதோடு பா.ம.க. விற்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.
இது சம்பந்தமாக நிர்வாகிகள் தட்டி கேட்ட தற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். இது குறித்து உரிய நடவடி க்கை எடுக்கப்படும் என போலீசார் உத்தர வாதம் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் சண்.முத்து கிருஷ்ணன் கொடுத்த புகா ரின் பேரில் பிள்ளையார் மேடு சேர்ந்த சிவா என்ப வரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளு க்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் 27 ந்தேதி நடைபெற உள்ளது.
- சான்றொப்பம் பெற்று, எழுத்துத் தேர்வின்போது தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கடலூர்:
தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளு க்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் 27 ந்தேதி நடைபெற உள்ளது. இத் தேர்வுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்ப ட்டுள்ளது இதில்தேர்வு க்கூட சீட்டில் பிறந்த தேதி அல்லது வகுப்பு வாரி பிரி வில் ஏதேனும் மாற்றம் இருந்தால், விண்ணப்ப தாரர் தொடர்புடைய அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் புகைப்பட நகல்களை அரசிதழ் பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று, எழுத்துத் தேர்வின்போது தேர்வுக்கூட கண்காணி ப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேர்வுக்கூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க ப்படுவார்.
தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்ப டத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் விண்ணப்பதாரர் யாரும் தேர்வுக் கூடத்திற்குள் அனு மதிக்கப்பட மாட்டார்கள். விடைத்தாளில் பட்டை தீட்ட எழுத நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன், கால்குலேட்டர் மற்றும் சுமார்ட் வாட்ச், ப்ளூடூத் போன்ற எலக்ட்ரா னிக் கருவிகள் தேர்வு எழுதும் அறைக்குள் அனு மதிக்கப்படமாட்டாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும். தேர்வு முடியும் வரை தேர்வுக்கூட அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்.தேர்வு எழுதும்போது பேசவோ, சைகை புரியவோ, பார்த்து எழுதவோ கூடாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
- கடலூரில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருப்பாதிரிப்புலியூர் புதுநகர் மாரியம்மன் கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரித்த போது கடலூர் எம்.புதூர் சேர்ந்த சூர்யா (வயது 20) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.
- இந்த நிலையில் மோனிஷாவுக்கு கடந்த ஒரு மாதமாக உடல் நிலை பாதிப்பு இருந்து வந்தது.
- நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லி சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மோனிஷா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆன நிலையில் இரண்டு வயதில் வர்ஷினி என்கிற பெண் குழந்தை உள்ளது. தற்போது மோனிஷா மீண்டும் கர்ப்பமானார். இந்த நிலையில் மோனிஷாவுக்கு கடந்த ஒரு மாதமாக உடல் நிலை பாதிப்பு இருந்து வந்தது.
நேற்று நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மோனிஷாவை பரிசோதனை செய்த டாக்டர் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 வருடத்தில் மோனிஷா இறந்த காரணத்தினால் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துகிறார்.
- தனிப்பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.
- இருப்பினும், முழுவதுமாக அகற்றவில்லை எனத் தெரிகிறது.
மங்கலம்பேட்டை, நவ.24-
விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில், விருத்தாசலம்-உளுந்தூ ர்பேட்டை மெயின் ரோடு (எஸ்.எச்.69 மாநில நெடு ஞ்சாலை) மற்றும் கடை வீதியில் 100-க்கும் மேற்ப ட்ட வீடு மற்றும் கடைகள் உள்ளன. இவற்றிற்கு முன்புற பகுதிளில், அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பல கட்டிடங்கள் கட்டப்பட்டி ருப்பதாகவும், இங்குள்ள கடை மற்றும் வணிக நிறுவ னங்களின் முன்புற பகுதி களில் தகர ஷீட்டு களால் ஷெட்டுகள், கொட்ட கைகள் அமைத்து பலர் ஆக்கிரமிப்பு செய்திரு ப்பதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தில் சிக்கிக் கொண்டவர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் உரிய நேரத்திற்குள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட வழியில்லாமல் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால், மங்கல ம்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விருத்தா சலம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுலகம் சார்பில், கடந்த அக்டோபர் மாதம் இறுதியில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம்- உளுந்தூ ர்பேட்டை-விழுப்புரம் சாலையில், மங்கலம்பேட்டை மாநில நெடுஞ்சாலை எண்:69-ல், 13/4 முதல் 16/6 கி.மீ., வரை உள்ள ஆக்கிரமிப்பினை தாங்களாகவே முன்வந்து 15.11.2022 அன்று மாலை 6 மணிக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் நெடுஞ்சாலைத் துறை மூலம் 16.11.2022 காலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். இதனால் ஏற்படும் எவ்விதமான இழப்பீடுகளுக்கும் நெடுஞ்சாலைத் துறை பொறுப்பேற்காது என்று கூறப்பட்டிருந்தது. இதனால், கடை மற்றும் வீடுகளின் முன்பு போடப்பட்டிருந்த தகர ஷீட் ஷெட்டுகள் மற்றும் கொட்டகைகளை பலர் தாங்களாகவே முன் வந்து அகற்றிக் கொண்டனர்.
இருப்பினும், முழுவதுமாக அகற்றவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை கடலூர் கோட்டப் பொறியாளர் பரந்தாமன் உத்தரவின்பேரில், விரு த்தாசலம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அறிவு க்களஞ்சியம், அப்போது, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் விவேகானந்தன், சாலை ஆய்வாளர்கள் அருணகிரி, விமலாராணி, ராணி ஆகியோர் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நேற்று காலை மங்கலம்பேட்டை மெயின் ரோடு, கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணியி னை மேற்கொண்டனர். இந்தப் பணியின்போது, மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






